நவ கிரகங்களும் நோய்களும்: எந்த நோய் யாரை பாதிக்கும் - இந்த பரிகாரம் பண்ணுங்க எளிதில் குணமாகும்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களும் நவகிரகங்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றனர். எந்த கிரகம் பாதிக்கப்படுகிறதோ அந்த கிரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உடலின் பாகம் பாதிக்கப்படும்.
சென்னை: நவகிரகங்களின் கட்டுப்பாட்டில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களும் இருக்கின்றனர். நவகிரகங்களும் 12 ராசிகள் 27 நட்சத்திரங்களை கட்டுப்படுத்துகின்றன. ராகு கேது தவிர சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய கிரகங்கள் மனித உடம்பின் பாகங்களை கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. எந்த கிரகம் பாதிக்கப்படுகிறதோ அந்த கிரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உடலின் பாகம் பாதிக்கப்படும். சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனி, ராகு கேது என நவகிரகங்களால் ஏற்படும் நோய்களையும் குணப்படுத்த செய்யும் பரிகாரங்களையும் பார்க்கலாம்.
ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து ஆறாம் இடம் ருண ரோக சத்ரு ஸ்தானம். ஒருவருக்கு எப்படிப்பட்ட நோய் வரும், அந்த நோய் எளிதில் தீருமா, அல்லது கடனாளி ஆக்கி விடுமா என்று ஆறாமிடத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
நோய் தொற்று பரவும் இன்றைய கால கட்டத்தில் யாரை எந்த நேரத்தில் நோய் தாக்குகிறது என்று சொல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. உடம்பில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரித்துக்கொண்டால் நோய் வராமல் தடுக்கலாம். நோய் வந்தாலும் எளிதில் குணமடையும். நவகிரகங்களில் எந்த கிரகம் பாதிக்கப்பட்டால் என்ன நோய் வரும் என்று பார்த்து அதற்கேற்ப பரிகாரம் செய்தால் நோய்களில் இருந்தும் தப்பிக்கலாம்.

நோய்களும் கிரகங்களும்
தலை, இருதயம் சூரியனின் கட்டுப்பாட்டிலும், முகம், தொண்டை சந்திரன் கட்டுப்பாட்டிலும், கைகள், தோள்கள் செவ்வாயின் கட்டுப்பாட்டிலும், மார்பு புதன் கட்டுப்பாட்டிலும் உள்ளது. வயிறு, உடல் தோல் பாகம் குருவின் ஆதிக்கத்திலும் அடிவயிறு, பிறப்பு உறுப்பு சுக்கிரன் கட்டுப்பாட்டிலும் உள்ளது. அதே போல தொடை, கால்,பாதம் சனியின் ஆதிக்கத்தின் கீழும் வரும். இராகு, கேதுக்கள் நிழல் கிரகம் என்பதால் மனித உடலில் இடம் கொடுக்கப்படவில்லை.

நோய் எதிர்ப்பு சக்தி
ஜாதகத்தில் 6 ஆம் பாவாதிபதியுடன் எந்த கிரகம் சேர்க்கை பெற்று இருந்தாலும் அந்த கிரகத்திற்குரிய நோய்கள் வரக்கூடும். ஒருவரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நவகிரக வழிபாடு அவசியம். முக்கியமாக குரு, சூரியனை வழிபட வேண்டும். உடல் கட்டமைப்பு மற்றும் எலும்பின் காரகர் சனி பகவான் ஆவார். அவர் நல்ல நிலையில் ஜாதகத்தில் இருந்தாலே நோய்கள் எட்டிப்பார்க்காது.

சூரியன்
ஜாதகத்தில் சூரியன் பாதிக்கப்பட்டால் மலச்சிக்கல், அஜீரணம், தூக்கமின்மை, கண் நோய்கள், ரத்த அழுத்தம், இதய நோய், ஆஸ்துமா, வயிற்றில் பூச்சிகள் போன்ற நோய் களையும் ஜுரம் போன்றவை ஏற்படும்.

சந்திரன்
ஜாதகத்தில் சந்திரன் பாதிக்கப்பட்டால் மனநோய்கள், உணர்ச்சி வசப்படுதல், அதிவேக இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், காச நோய், ரத்த சோகை, சளி, கபம், பாலியல் நோய்கள் இரைப்பைப் புண், நீரிழிவு, குடல் புண் ஏற்படும்.

செவ்வாய்
ஜாதகத்தில் செவ்வாய் பாதிக்கப்பட்டால் மூலநோய், நீரிழிவு, இரைப்பை மற்றும் குடல் நோய்கள், மன அழுத்தம், தோல் வியாதிகள், இதய நோய், நரம்புத் தளர்ச்சி, அம்மை, விபத்து மற்றும் ஆயுதங்களால் பாதிக்கப்படும்.

புதன்
ஜாதகத்தில் புதன் பாதிக்கப்பட்டிருந்தால் இதய நோய்கள், ரத்த அழுத்தம், வயிற்றுப்புண், புற்றுநோய், தோல் நோய்கள், நரம்பு தளர்ச்சி, இரைப்பை புண் ஏற்படும்.

குரு
ஜாதகத்தில் குரு பாதிக்கப்பட்டால் தொண்டை சம்பந்தமான நோய்கள், தைராய்டு, அம்மை, முடக்கு வாதம், காமாலை, நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகள், பக்க வாதம், கீழ் வாதம், நீரிழிவு நோய் ஏற்படும்.

சுக்கிரன்
ஜாதகத்தில் சுக்கிரன் பாதிக்கப்பட்டால் கண், காது, மூக்கு நோய்கள். நுரையீரல் நோய், இருமல், குடல்புண், இருதய நோய், ரத்த அழுத்தம், பாலியல் தொடர்பான நோய்கள் ஏற்படும்.

சனி
ஜாதகத்தில் சனி பாதிக்கப்பட்டால் மனநோய், கை கால் வலிப்பு, மூளை பாதிப்பு, தோல் நோய், நீண்ட கால வியாதிகள், சிறுநீரக நோய், பித்தம், குடல் நோய், விபத்தால் பாதிக்கப்படும்.

ராகு - கேது
ராகு பாதிக்கப்பட்டால் அதிக அமிலம் சுரத்தல், வயிறு கோளாறுகள், அஜீரணம், தூக்கமின்மை, மூளை நோய், குடல் புண், தோல் வியாதிகள் ஏற்படும். அது போல கேது பாதிக்கப்பட்டால் புற்றுநோய், வாதம், தோல் நோய்கள், காலரா, நரம்புத் தளர்ச்சி, சிறுநீரகக் கோளாறு ஏற்படும்.

நவ கிரக வழிபாடு
நோய்களில் இருந்து தப்பிக்க குரு, சூரியன் சந்திரன் இவர்களை வழிபடுவது சிறந்த பலனளிக்கும். தேவ மருத்துவரான தன்வந்திரி வழிபாடு மிகச்சிறந்த நோய் எதிர்ப்பாற்றலை ஏற்படுத்தும். புதன் மற்றும் வியாழன் கிழமைகளில் தன்வந்திரி வழிபாடு செய்யலாம்.

குல தெய்வ வழிபாடு
உடம்பில் நோய் பாதிப்பு குறைந்து நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்க குல தெய்வ வழிபாடு அவசியம். குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு வருவது சிறந்த நோய் எதிர்ப்பாற்றலை ஏற்படுத்தும். அமாவாசை நாட்களில் பித்ரு வழிபாடு எனும் முன்னோருக்கு செய்யும் திதிகளை சரியாக செய்தாலே நோய்கள் பாதிப்பு ஏற்படாது. தினசரியும் சூரிய நமஸ்காரம் செய்வது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.

தீராத நோய் தீர்க்கும் பரிகாரம்
செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமை அன்று அம்மன் கோவிலுக்கு சென்று கொடி மரத்தின் முன்பாக உங்கள் கையாலேயே கல் உப்பை கொட்டி வர, உங்களது உடலில் இருக்கும் நோய் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. வாரம் தோறும் வரும் வெள்ளிக்கிழமை அன்றும் செவ்வாய்க் கிழமை அன்றும் அம்மனுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, உங்கள் கையால் உப்பைக் கொட்டி வந்தால் நிச்சயம் உங்களுடைய ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும். மருத்துவ சிகிச்சை தொடர்ந்து செய்ய நோய்கள் எளிதில் குணமடையும்.

பழனி முருகன் சந்தனம்
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக போற்றப்படும் பழனிக்கு சென்று முருகப்பெருமானை காலை 4.00 மணி அளவில் பிரம்ம முகூர்த்தத்தில் தரிசனம் செய்ய வேண்டும். அந்த சமயத்தில், கோவிலுக்கு வருகை தரக்கூடிய பக்தர்களுக்கு சந்தனத்தை பிரசாதமாக கொடுப்பார்கள். இந்த சந்தனத்தை எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்ளலாம். அதில் இருந்து ஒரு சொட்டு சந்தனத்தை எடுத்து தண்ணீரில் கலந்து பருக நோய்கள் நீங்கும். பழனி முருகனின் சிலையில் இருந்து சந்தனம் மொத்தமாக தான் எடுத்து பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்படும். முருகனின் தொப்புள் பகுதியில் இருக்கக்கூடிய சந்தனம் எவருக்கு கிடைக்கின்றதோ அவர்கள் அதிர்ஷ்டசாலிகள். நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு சரும நோய்களும், உடல் நலக்கோளாறுகளும் எளிதில் நீங்கும்.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications