நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவில் ஐப்பசி திருக்கல்யாணம் - மறுவீட்டுக்கு மறக்காம வாங்க
:நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் கோலகலமாகத் தொடங்கியுள்ளது.
திருநெல்வேலி: நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோவில் ஐப்பசி மாத திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. பத்துநாட்கள் திருவிழாவின் முக்கிய அம்சமான காந்திமதி அம்மனுக்கு நெல்லையப்பர் காட்சி தரும் வைபவம் வரும் 1ஆம் தேதி நடைபெறுகிறது. 2ஆம் தேதி நெல்லையப்பர் காந்திமதி திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

திருநெல்வேலிக்கு வேணுவனம், நெல்வேலி, நெல்லூர், சாலிவேலி, சாலிவாடி, சாலி நகர், பிரம்மவிருந்தபுரம், தாருகாவனம் போன்ற பெயர்களும் உண்டு.
தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற பெற்ற சிவ ஆலயங்களில் ஒன்று நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆகும். தமிழகத்தில் மூன்று மூலவர்களைக் கொண்ட கோயில் நெல்லையப்பர் கோயில் மட்டுமே. மூலவரான வேண்ட வளர்ந்தநாதர் சுயம்புமூர்த்தியாக முக்கிய சன்னதியில் இருக்கிறார். இவரே நெல்லையப்பர் எனப்படுகிறார். இந்த இலிங்கத்தின் மத்தியில் அம்பிகையின் உருவம் தெரிகிறது. இதை அபிஷேகத்தின் போது காணலாம். சிவனுக்குள் சக்தி அடக்கம் என்பதை இக்கோலம் உணர்த்துவதாக சொல்கிறார்கள். எனவே, சுவாமிக்கு சக்தி இலிங்கம் என்ற பெயரும் உண்டு.
இது தவிர, மகாவிஷ்ணு பூஜித்த இலிங்கம் ஒன்றும், மூலவர் சன்னதிக்கு முன்புள்ள பாதாளத்தில் திருமூல மகாலிங்கம் சன்னதியும் இருக்கிறது. இவரே இக்கோயிலின் முதல் லிங்கம் எனக் கருதப்படுவதால், இவருக்குத் தான் முதல் பூஜை நடக்கிறது. மூவருமே மூலவராகவே வணங்கப் படுகின்றனர். இங்கு பஞ்ச தெட்சிணாமூர்த்தி களையும் தரிசிக்கலாம்.

இந்த கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். ஆனி மாதத்தில் பத்து நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. அப்போது நெல்லையப்பருக்கும், காந்திமதி அம்மனுக்கும் ஒன்பதாம் திருநாளன்று தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெறும். வருடாபிஷேகம் ஆண்டுதோறும் மூன்று நாட்கள், ஆடி மாதத்தில் ஆடிப்பூர விழா அம்பாளுக்கு பத்து நாட்கள், பௌத்திர உற்சவம் நான்கு நாட்கள், அம்மனுக்கு ஐப்பசி மாதத்தில் பதினைந்து நாட்கள் திருக்கல்யாண வைபவம், கந்த சஷ்டி திருவிழா நடைபெறும்.
கார்த்திகை மாதத்தில் சோமவாரம் நான்கு நாட்கள், மார்கழி மாதம் திருப்பள்ளி எழுச்சி முப்பது நாட்கள், திருவாதிரை அன்று ஆருத்ரா தரிசனம், தை மாதத்தில் தைப்பூசத் தெப்ப உற்சவம் உட்பட பன்னிரண்டு நாட்கள், வைகாசி விசாகத் திருநாள் மூன்று நாட்கள், மாசி மகத்தன்று பொற்றாமரைத் திருக்குளத்தில் அப்பர் தெப்பம் நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான ஐப்பசி திருக்கல்யாணத்திற்கான முகூர்த்தக்கால்நாட்டு நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. அம்பாள் சன்னதி முன்பு உள்ள ஊஞ்சல் மண்டப பகுதியில் கால்நாட்டப்பட்டது. பின்னர் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர்.

இந்நிலையில் ஐப்பசி மாத திருக்கல்யாண திருவிழாவையொட்டி காந்திமதி அம்பாள் சன்னதியில் இன்று காலையில் கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இதையொட்டி கொடிமரத்துக்கு பல்வேறு அபிஷேகம் பூஜைகள் நடத்தப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
ஐப்பசி பிரம்மோற்சவத்தின் முதல் பத்து நாட்கள் அம்பாள், சிவனை மணக்க வேண்டி தவமிருப்பாள். பத்தாம் நாளில் கம்பை நதிக்கு எழுந்தருளுவாள். 11ம் நாள் மகாவிஷ்ணு, தன் தங்கையை மணந்து கொள்ளும்படி சிவனை அழைப்பார். சிவனும் அவரது அழைப்பை ஏற்று, அம்பிகையை மணம் செய்வார். அப்போது பக்தர்கள், மணமக்களுக்கு திருமண ஆடைகள் கொடுக்கும் வழக்கம்.
வரும் 1ஆம்தேதி அன்று மதியம் 12 மணிக்கு மேல் 1மணிக்குள் சுவாமி, அன்னை காந்திமதி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் விழாவும் 2ந்தேதி அன்று அதிகாலை 4மணிக்கு மேல் 5 மணிக்குள் ஆயிரங்கால் மண்டபத்தில் வைத்து திருக்கல்யாணம் திருவிழாவும் நடைபெறுகிறது. திருக்கல்யாணத் திருவிழா முடிந்து மூன்று நாட்கள் ஊஞ்சல் வைபவமும், நிறைவாக சுவாமி-அம்பாள் மறுவீடு பட்டினப்பிரவேசமும் நடைபெறும். 12ஆம் நாளிலிருந்து இருவரும், 3 நாட்கள் ஊஞ்சல் உற்சவம் காண்கின்றனர்.

பெண்கள், திருமணம் முடிந்து கணவர் வீட்டிற்கு சீர் கொண்டு செல்வதுபோல, காந்திமதி அம்பிகையும் தனது திருக்கல்யாணத்தின் போது, சீர் கொண்டு செல்வது சிறப்பாகும்.14ஆம் நாள் இரவில் சுவாமியும், அம்பாளும் சிவன் சன்னதிக்கு மறுவீடு செல்கின்றனர். அப்போது அம்பிகை அப்பம், முறுக்கு, லட்டு என சீர் பலகாரங்கள் கொண்டு செல்கிறாள். இதனை காந்திமதி சீர் என்று அழைப்பார்கள். இந்த சீர் வரிசை பலகாரங்களை காணவே கண் கோடி வேண்டும்.
தென்காசி காசி விசுவநாதர் கோவில் கொடியேற்றம்
பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. திருவிழா வரும் 1ஆம் தேதி வரை தொடர்ந்து நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை, மாலை அபிஷேகம், சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெறுகிறது. உற்சவர் வீதி உலா மற்றும் சப்பர வீதி உலா அனைத்தும் கோவில் பிரகாரங்களிலேயே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications