Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புரட்டாசி மாத ராசி பலன் 2022: கன்னி ராசியில் 3 கிரக கூட்டணி..யாருக்கெல்லாம் பண வருமானம் குவியும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி ராசியில் பயணம் செய்வதால் கன்னிகா மாதம் என்றும் அழைக்கப் படுகிறது. புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம். இந்த மாதம் முழுவதும் வைணவ பக்தர்கள் மாமிச உணவு அருந்தாமல் விரதம் மேற்கொள்வார்கள்..செப்டம்பர் 18ஆம் தேதி புரட்டாசி மாதம் பிறக்கிறது. அக்டோபர் 17 ஆம் தேதி வரைக்கும் புரட்டாசி மாதம் உள்ளது. கன்னி ராசியில் மூன்று கிரகங்களின் கூட்டணியால் சில ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படலாம். இந்த மாதத்தில் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் வரையிலான நான்கு ராசிக்காரர்களுக்கு என்ன யோகபலன் என்பதை பார்ப்போம்.

"புரட்டாசி விஷ்ணு பகவானுக்கு உகந்த மாதம். பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை நடைபெறும். முன்னோர்களின் ஆசி கிடைக்கும் உன்னத மாதம் புரட்டாசி.புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோயிலில் மாவிளக்கு ஏற்றி வழிபடுவது குடும்பத்திற்கு சுபிட்சத்தை உண்டாக்கும். சனிக்கிழமைகளில் விரதம் மேற்கொண்டால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். செல்வம் கொழிக்கும். துன்பம் விலகி ஓடும். புரட்டாசி சனிக்கிழமைகளில் சனி பகவானை நினைத்து மனமுருக விரதம் இருந்தால் சனி தோஷம் நீங்கும். இந்த மாதத்தில் வரும் அமாவாசை மகாளய பட்சம் என்று அழைக்கப்படுகிறது. விண்ணுலகம் சென்ற நமது முன்னோர்கள் மண்ணுலகுக்கு வந்து 15 நாட்கள் நம்மோடு தங்குகின்ற புண்ணிய காலமாகும்.

புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார். மேஷ ராசியில் ராகு அமர்ந்திருக்கிறார். ரிஷப ராசியில் இருக்கும் செவ்வாய் புரட்டாசி 29ஆம் தேதி மிதுன ராசிக்கு மாறுகிறார். புதன் கன்னி ராசியில் அமர்ந்திருக்கிறார். குரு மீன ராசியில் இருக்கிறார். சுக்கிரன் புரட்டாசி மாதம்7 ஏழாம் தேதி சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு செல்கிறார். சனி மகரத்தில் அமர்ந்திருக்கிறார். கேது துலாத்தில் இருக்கிறார்.

மேஷம்

மேஷம்

வீரத்தை அணிகலனாகக் கொண்ட செவ்வாயை அதிபதியாக பெற்றுள்ள மேஷ ராசி அன்பர்களே...
பண வரவு இந்த மாதம் தாராளமாக இருக்குமுங்க. உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய நண்பர்கள் உதவி கிடைக்குமுங்க. வீடு வாங்குவதற்கான முயற்சியை செய்யுங்க. தொழில் எதிரிகளை பார்த்து பயப்படாதீங்க. அவங்களால உங்களை ஒன்னும் செய்ய முடியாது. பையனுக்கு தைரியமா பொண்ணு பாருங்க. குறிச்ச நேரத்தில் கல்யாணம் நடக்குமுங்க. அலுவலகத்தில உங்க மரியாதை அதிகரிக்குமுங்க. மத்தவங்களுக்கு உதவி செய்வீங்க. மனைவி மட்டும் கொஞ்சம் ஏட்டிக்கு போட்டியா நடப்பாங்க. அனாவசியமா செலவு செய்யாதீங்க. கடன் வாங்கி கஷ்டப்படுவீங்க. வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேருமுங்க. திருச்செந்தூர் முருகனை வழிபடுங்கள். விருப்பமான காரியங்கள் நிறைவேறும்.

ரிஷபம்

ரிஷபம்

கலைநயம் மிளிரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷபராசி அன்பர்களே....
நல்லது செய்தாலும் கெட்டது நடக்குதுன்னு மனசு சங்கடப்படாதீங்க. அதுக்காக உங்க குணத்தை மாத்திக்க வேண்டாமுங்க. நிலம் வாங்கி விக்கிறதுல முனைப்பு காட்டுங்க. நல்ல லாபம் கிடைக்குமுங்க. திருமண காரியங்கள் கைகூடி வருமுங்க. தள்ளிப்போன திருமணம் தடை இல்லாமல் நிறைவேறுமுங்க. தாய்மாமன் உதவியால வெளிநாட்டுக்கு போவீங்க. பண வரவு தாராளமாக இருக்குமுங்க. பழைய பாக்கிகளை வசூல் பண்ணுவீங்க. வீட்டு தேவைகளை விருப்பத்தோடு பூர்த்தி செய்வீங்க. விருந்தாளிங்க வீட்டுக்கு வருவாங்க. கோயில் குளம்னு குடும்பத்தோட போயிட்டு வருவீங்க. தொழில் மந்தமா நடக்குதுன்னு மனசுல ஒரு கவலை இருக்குமுங்க. அது மாதக் கடைசியில விலகிடுமுங்க. திருவண்ணாமலை சென்று வாருங்கள். பெருமையும் புகழும் அதிகரிக்கும்.

மிதுனம்

மிதுனம்

எதிர்ப்புகளை புத்திசாலித்தனத்தால் முறியடிக்கும் புதனை அதிபதியாகக் கொண்ட மிதுன ராசி அன்பர்களே...
அரசியல்வாதிகளுக்கு அதிர்ஷ்டமான காலகட்டமுங்க. பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்து பேர் எடுப்பீங்க. இழுபறியாக கிடந்த நிலம் விற்பனை திடீர்னு நடக்குமுங்க. அதனால உங்க கடன் சுமை கணிசமா குறையுமுங்க. கணவன் மனைவி ரெண்டு பேரும் மனசு விட்டு பேசி குடும்பத்தில் கலகலப்பு உண்டு பண்ணுவீங்க. பிள்ளைகள் செய்ற சின்ன சின்ன சேட்டை கொஞ்சம் பிரச்சனையை கொண்டு வருமுங்க. அதுக்காக பள்ளிக்கூடத்துக்கு போய் வாத்தியார் கிட்ட நீங்க திட்டு வாங்குவீங்க. இரும்பு செங்கல் மணல் வியாபாரம் முன்னேற்றமா நடக்குமுங்க. வீடு தேடி வர்ற வாய்ப்பு நல்ல விடாதீங்க. வரவுக்கு மேல செலவு வருவதற்கு வாய்ப்பு இருக்குங்க. திருமோகூர் காளமேகப் பெருமாளை வழிபடுங்கள். சூழும் துன்பங்கள் தூர ஓடும்.

கடகம்

கடகம்

வளர்ச்சிகளை சீராக அள்ளித் தருகின்ற சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே...
தொழில்ல என்ன பிரச்சனை வந்தா என்னங்க. பூன்னு ஊதி தள்ளிட்டு அடுத்த கட்டத்துக்கு போவீங்க. வியாபாரத்தில் தைரியமா முதலீடு பண்ணுங்க. வெளியூர் பயன்கள் நல்ல பலன் கொண்டு வருமுங்க. தொழில் காரணமா ஊரு விட்டு ஊரு அலைய வேண்டிய நிலை உருவாகுமுங்க. நீண்ட நாள் ஆசைப்பட்ட பொருளை வாங்கி கொடுத்து சகோதரியை மகிழ்ச்சி படுத்துவீங்க. ஆன்லைன் சூதாட்டத்திற்கு ஆசைப்படாதீங்க. பையில் இருக்க பணம் இருந்த இடம் தெரியாமல் போய்விடுமுங்க. ஏற்றுமதி இறக்குமதி தொழில் சிறப்பா நடக்குமுங்க. அரசாங்க வேலை பார்க்கிறவங்களுக்கு சம்பள உயர்வு கிடைக்குமுங்க. தஞ்சை பிரகதீஸ்வரர் பெருமானை வழிபடுங்கள். நெஞ்சத்து ஆசைகள் எல்லாம் நிறைவேறும்.

உங்கள் ஜோதிடர் கவிஞர்
அ.பெர்னாட்ஷா, காரைக்குடி

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+