ரஜினிகாந்த் அரசியலுக்கு வர மாட்டார்... அன்றே கணித்து சொன்ன ஒன் இந்தியா தமிழ்
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் என்று என்று கடந்த ஆண்டு மார்ச் மாதமே ஒன் இந்தியா தமிழ் இணைய தள பக்கத்தில் கட்டுரை வெளியானது. அதுபோலவே இனி வருங்காலத்தில் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று கூறியுள்ளார் ரஜினிகாந்த்.
சென்னை: அரசியலில் ஈடுபடும் எண்ணம் எதுவும் இல்லை என்றும் வருங்காலத்தில் அரசியலுக்கு வர மாட்டேன் என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். எந்த காலத்திலும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் என்று நமது ஒன் இந்தியா தமிழ் இணைய தளத்தில் கணித்து எழுதியிருந்தது போலவே தற்போது அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
நடிகர் ரஜினிகாந்த் அரசியலை விட ஆன்மீகத்திற்குதான் சரியாக இருப்பார் அதற்குக் காரணம் அவரது பெயர் எண் கூட்டுத்தொகை. அரசியலை விட ஆன்மீகம்தான் அவரை துரத்துகிறது எனவே ரஜினிகாந்த் அரசியலுக்கு சரியாக இருக்க மாட்டார் இந்த ஆண்டு கட்சி ஆரம்பித்தால் முதல்வராக வாய்ப்பு இல்லை என்று கடந்த ஆண்டு எண் கணித நிபுணர் ஜெஎன்எஸ் செல்வன் நமது ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். அதற்கான காரணங்களையும் தெரிவித்திருந்தார்.
ரஜினிகாந்தின் பிறந்த தேதி கூட்டுத்தொகை 3 ஆம் எண் இது குரு ஆதிக்கம் கொண்ட எண். அதற்கு ஏற்றார்போல தனது அறிவிப்புகளை எல்லாம் 3ஆம் எண் வரும் தேதிகளிலேயே அறிவித்தார். நவம்பர் 30ஆம் தேதி ரசிகர்களை சந்தித்த ரஜினி டிசம்பர் 3ஆம் தேதியன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அரசியல் கட்சி தொடங்குவது உறுதி அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31ல் வெளியாகும் என்று பதிவிட்டர். ஜூலை 12ஆம் தேதியான இன்றைய தினம் அரசியல் நிலைப்பாடு குறித்த உறுதியான முடிவினை அறிவித்துள்ளார்.

20 ஆண்டுகால சஸ்பென்ஸ்
அரசியல் முடிவு பற்றி இதோ அதோ என்று 20 ஆண்டுகாலமாக சஸ்பென்ஸ் வைத்துக்கொண்டே வந்த ரஜினிகாந்த், கடந்த 2017ஆம் ஆண்டில் அரசியல் கட்சி தொடங்கப்போவதாகவும், தனது அரசியல் ஆன்மீக அரசியல்தான் என்றும் தெரிவித்தார். ரஜினிகாந்துக்கு 2018ஆம் ஆண்டுடன் சனி திசை முடிந்து புதன் திசை தொடங்கி நடைபெற்று வருகிறது.

ரஜினி ஜாதகம் சொல்வதென்ன
சிம்ம லக்னம், மகர ராசி, திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்த ரஜினிக்கு கோச்சாரப்படி ஜென்ம சனி நடைபெறுகிறது. ரஜினிகாந்த் ஜாதகத்தில் 2ஆம் இடத்தில் சனியுடன் கேது அமர்ந்துள்ளார். 4ஆம் வீட்டில் சூரியனும் 5ஆம் வீடான தனுசில் புதனும், சுக்கிரனும் அமர்ந்துள்ளனர். 5 ஆம் வீடு பொதுவாக மேஷம், சிம்மம், தனுசு ராசிகளாக இருந்தால் அவர் நேர்மையானவராக இருப்பார் என்பது ஜோதிட விதி.

ரஜினிகாந்தும் ஆன்மீகமும்
ரஜினி காந்த் பிறந்த தேதி 12- 12-1950 கூட்டுத்தொகை 3. இது குருவின் எண். தெய்வபக்தி, தேச பக்தி, உழைப்பாளி. பிறரின் கஷ்டங்களை வாங்கிக்கொள்வார் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் என்ற பெயரின் கூட்டுத்தொகை 28 மொத்தம் 1 வருகிறது. உடல் ரீதியாக மனரீதியாக பல போராட்டங்களை பெற்றிருக்கிறார். ஆன்மீகத்தில் ஈடுபட்டிருந்த பலரும் 3 ஆம் எண்ணில் பிறந்தவர்கள்தான் அதனால்தான் அவர் சினிமாவில் பிரபலமாக இருந்தாலும் அவரது மனம் ஆன்மீகத்தை நாடியது.

அரசியலுக்கு வரவே மாட்டார்
2020ஆம் ஆண்டு ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக கூறினார். அவர் அரசிலுக்கு வர வாய்ப்பு இல்லை. 3 ஆண்டுகள் சினிமாவில்தான் இருப்பார் என்று கணித்திருந்தார் எண் கணித நிபுணர் ஜெஎன்எஸ் செல்வன். இவருடைய உடல் நலமும் மன நலமும் பாதிப்பை ஏற்படுத்தும் காரணம் ரஜினிகாந்த் என்ற பெயரின் கூட்டுத்தொகை 28 மொத்தம் 1 என்று வருவதுதான் என்று கணித்திருந்தார் எண் கணித நிபுணர் செல்வன். அவர் கணித்தது போலவே ரஜினிக்கு ஏற்பட்ட உடல்நல பாதிப்பு ஏற்பட்டு அவரது அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தை தடுத்தது.

31/12/2017 அரசியல் அறிவிப்பு
ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்த ஆண்டு 31-12-2017. கூட்டுத்தொகை 8. இது ரஜினிக்கு சரியில்லாத எண். போர் வரட்டும் என்று சொன்னார். ஆன்மீக அரசியல் என்று சொன்னார் அவர் அரசியலை அறிவித்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன்பிறகு நாடாளுமன்ற தேர்தல், 20 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல், உள்ளாட்சித்தேர்தல் என பல போர்கள் வந்து விட்டன. ரஜினிதான் போருக்கு தயராக இல்லை. அரசியலில் குதிக்க அவர் தயாராக இல்லை.

7 சிறப்பான எண்
1973ல் சினிமாவில் நடிக்கும் ஆசையுடன் திரைப்பட கல்லூரியில் நுழைந்து அபூர்வ ராகங்களில் நடிக்கிறார். கூட்டு எண் 7. இது அவருக்கு சரியான எண். அதுவும் ஆன்மீகத்திற்கு போவதற்கான எண் 7. சினிமாவை முடித்து விட்டு ஆன்மீகத்திற்கு போக துரிதப்படுத்தியது. சூப்பர் ஸ்டார் என்பதும் கூட்டுத்தொகை 7ல் வருகிறது. 7ஆம் எண் ரஜினிகாந்தை துரத்திக்கொண்டே இருக்கிறது. அதனால்தான் அவர் இமயமலை வரைக்கும் சென்றிருக்கிறார். இப்போது ரஜினிக்கு 70 வயதாகிறது.

2023 வரை வாய்ப்பே இல்லை
இந்த வயதில் ரஜினி அரசியலுக்கு வர நினைப்பது சரியில்லை. இன்னும் 3 ஆண்டுகளுக்கு ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதைப்பற்றி நினைக்கவே வேண்டாம் என்று கூறியுள்ளார் டாக்டர் ஜெஎன்எஸ் செல்வன். 2019ஆம் ஆண்டு சரியாக இருந்தது அப்போது அரசியலில் அடிஎடுத்து வைத்திருக்கலாம். 2020 முதல் 2023 வரை ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வாய்ப்பே இல்லை என்பதே எண்கணித நிபுணரின் கணிப்பாகும்.

ஒதுங்கிய ரஜினி
தனது உடல்நலத்தை காரணம் காட்டி அரசியல் கட்சி தொடங்க மாட்டேன் என்று ஒதுங்கி விட்டார் ரஜினிகாந்த். எனது முடிவு ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும் என்னை நம்பி வந்தவர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை என்று கடந்த டிசம்பர் மாதம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார் நடிகர் ரஜினிகாந்த்.

எப்போதும் இல்லை
வருங்காலத்தில் எப்போது அரசியலுக்கு வரப்போவதில்லை என்று கூறியுள்ளார் ரஜினிகாந்த். இப்போ இல்லைன்னா எப்போவும் இல்லை என்று சொன்ன ரஜினி இனி எப்போதும் அரசியலுக்கு வரவே மாட்டேன் என்றும் மக்கள் மன்றத்தை கலைத்து விட்டு ரசிகர் மன்றமாக மட்டுமே செயல்பட அனுமதி அளித்துள்ளர்.
ரஜினியின் அறிவிப்பு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தாலும் அவரது முடிவை ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளனர்.

அரசியல் சரிப்படாது
எம்ஜிஆர் இறந்த போதே ரஜினிக்கு நல்ல வாய்ப்பு இருந்தது. அப்போதும் அந்த வாய்ப்பை தவறவிட்டார். அதே போல 1996ஆம் ஆண்டில் ரஜினிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டார். ஜெயலலிதா எதிர்ப்பு அலையில் தமிழகம் இருந்த போது திமுக தமாகா கூட்டணிக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுத்து கருணாநிதியை முதல்வராக்கினார். ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி அழைத்துக்கொண்டே இருந்தனர். வரவேண்டிய நேரத்தில் கண்டிப்பாக வருவேன் என்று சொன்ன ரஜினிகாந்த் இனி எப்போது அரசியலுக்கு வரவே மட்டேன் என்று 25 ஆண்டுகளுக்குப் பிறகு அறிவித்துள்ளார்.
-
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications