For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அன்னதானப்பிரபுவே... சரணம் ஐயப்பா - ஐயப்பன் மந்திரத்தை உச்சரித்தால் சக்தி கிடைக்கும் பலன்கள்

ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் ஐயப்பனின் 108 சரணக் கோவையை தினமும் துதித்து வர சக்தி பெருகும் ஐயப்பனின் அருள் ஆற்றல் கிடைக்கும்.

Google Oneindia Tamil News

சபரிமலை: ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து மலைக்கு செல்பவர்கள் தினசரியும் காலை மாலை விரதம் இருந்து ஐயப்பனின் மந்திரங்களை உணர்ச்சி பொங்க உச்சரிப்பார்கள். அதை உச்சரிக்க உச்சரிக்க உற்சாகம் அதிகரிக்கும். சக்தியும் கூடும்.

Sabarimalai Ayyappan devottees chanting slogans

ஐயப்பன் காயத்ரியை தினமும் சொல்லி வழிபாடு செய்ய வேண்டும்.

ஒம் பூதநாதய வித்மஹே
மஹாசாஸ்தாய தீமஹி
தந்நோ ஐயப்ப ப்ரசோதயாத்

ஐயப்ப பக்தர்கள் தினமும் உச்சரிக்கும் மந்திரங்கள் :

ஓம் கன்னிமூல கணபதியே சரணம் ஐயப்பா
ஓம் காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா
ஓம் ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா
ஓம் அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா
ஓம் ஆறுமுகன் சோதரனே சரணம் ஐயப்பா
ஓம் ஆபத்தில் காப்போனே சரணம் ஐயப்பா
ஓம் இன்தமிழ்ச் சுவையே சரணம் ஐயப்பா
ஓம் இச்சை தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் ஈசனின் திருமகளே சரணம் ஐயப்பா
ஓம் உண்மைப் பரம்பொருளே சரணம் ஐயப்பா
ஓம் உலகாளும் காவலனே சரணம் ஐயப்பா
ஓம் ஊமைக்கருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா
ஓம் ஊழ்வினை அழிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் எளியோர்க்கு அருள்பவனே சரணம் ஐயப்பா
ஓம் எங்கள் குல தெய்வமே சரணம் ஐயப்பா
ஓம் ஏழைப் பங்காளனே சரணம் ஐயப்பா
ஓம் ஏகாந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா
ஓம் ஐங்கரன் தம்பியே சரணம் ஐயப்பா
ஓம் ஐயமெல்லாம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் ஒப்பில்லாத் திருமணியே சரணம் ஐயப்பா
ஓம் ஒளிரும் திருவிளக்கே சரணம் ஐயப்பா
ஓம் ஓங்காரப் பரம்பொருளே சரணம் ஐயப்பா
ஓம் ஓதும் மறைபொருளே சரணம் ஐயப்பா
ஓம் ஒளடதங்கள் அருள்பவனே சரணம் ஐயப்பா
ஓம் சௌபாக்கியம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் கலியுக வரதனே சரணம் ஐயப்பா
ஓம் சபரிமலை சாஸ்தாவே சரணம் ஐயப்பா
ஓம் சிவன்மால் திருமகனே சரணம் ஐயப்பா
ஓம் சைவ வைணவ ஐக்கியமே சரணம் ஐயப்பா
ஓம் அச்சங்கோயில் அரசே சரணம் ஐயப்பா
ஓம் ஆரியங்காவு ஐயாவே சரணம் ஐயப்பா
ஓம் குளத்துப்புழை பாலனே சரணம் ஐயப்பா
ஓம் பொன்னம்பல வாசனே சரணம் ஐயப்பா
ஓம் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா
ஓம் வீரமணிகண்டனே சரணம் ஐயப்பா
ஓம் உத்திரத்தில் உதித்தவனே சரணம் ஐயப்பா
ஓம் உத்தமனே சத்தியனே சரணம் ஐயப்பா
ஓம் பம்பையில் பிறந்தவனே சரணம் ஐயப்பா
ஓம் பந்தள மாமணியே சரணம் ஐயப்பா
ஓம் சகலகலை வல்லோனே சரணம் ஐயப்பா
ஓம் சாந்தம் நிறை மெய்ப்பொருளே சரணம் ஐயப்பா
ஓம் குருமகனின் குறை தீர்த்தவனே சரணம் ஐயப்பா
ஓம் குருதட்சினை அளித்தவனே சரணம் ஐயப்பா
ஓம் புலிப்பாலைக் கொணர்ந்தவனே சரணம் ஐயப்பா
ஓம் வன்புலி வாகனனே சரணம் ஐயப்பா
ஓம் தாயின் நோய் தீர்த்தவனே சரணம் ஐயப்பா
ஓம் குருவின் குருவே சரணம் ஐயப்பா
ஓம் வாபரின் தோழனே சரணம் ஐயப்பா
ஓம் துளசிமணி மார்பனே சரணம் ஐயப்பா
ஓம் தூயவுள்ளம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் இரு முடிப்பிரியனே சரணம் ஐயப்பா
ஓம் எரிமேலி தர்மசாஸ்தாவே சரணம் ஐயப்பா
ஓம் நித்ய பிரம்மச்சாரியே சரணம் ஐயப்பா
ஓம் நீலவஸ்திர தாரியே சரணம் ஐயப்பா
ஓம் பேட்டை துள்ளும் பேரருளே சரணம் ஐயப்பா
ஓம் பெரும்ஆணவத்தை அழிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம் ஐயப்பா
ஓம் சாந்தி தரும் பேரருளே சரணம் ஐயப்பா
ஓம் பேரூர்த்தோடு தரிசனமே சரணம் ஐயப்பா
ஓம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம் ஐயப்பா
ஓம் சாந்தி தரும் பேரருளே சரணம் ஐயப்பா
ஓம் பேரூர்த்தோடு தரிசனமே சரணம் ஐயப்பா
ஓம் பேதமையை ஒழிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் காளைகட்டி நிலையமே சரணம் ஐயப்பா
ஓம் அதிர்வேட்டுப் பிரியனே சரணம் ஐயப்பா
ஓம் அழுதைமலை ஏற்றமே சரணம் ஐயப்பா
ஓம் ஆனந்தமிகு பஜனை பிரியனே சரணம் ஐயப்பா
ஓம் கல்லிடும் குன்றமே சரணம் ஐயப்பா
ஓம் உடும்பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா
ஓம் இஞ்சிப்பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா
ஓம் கரியிலந் தோடே சரணம் ஐயப்பா
ஓம் கரிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா
ஓம் கரிமலை இறக்கமே சரணம் ஐயப்பா
ஓம் பெரியானை வட்டமே சரணம் ஐயப்பா
ஓம் சிறியானை வட்டமே சரணம் ஐயப்பா
ஓம் பம்பா நதித் தீர்த்தமே சரணம் ஐயப்பா
ஓம் பாவமெல்லாம் அழிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் திரிவேணி சங்கமே சரணம் ஐயப்பா
ஓம் திருராமர் பாதமே சரணம் ஐயப்பா
ஓம் சக்தி பூஜை கொண்டவனே சரணம் ஐயப்பா
ஓம் சபரிக்கு அருள் செய்தவளே சரணம் ஐயப்பா
ஓம் தீபஜோதித் திருஒளியே சரணம் ஐயப்பா
ஓம் தீராத நோய் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் பம்பா விளக்கே சரணம் ஐயப்பா
ஓம் பலவினைகள் ஒழிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் தென்புலத்தார் வழிபாடே சரணம் ஐயப்பா
ஓம் திருப்பம்பையின் புண்ணியமே சரணம் ஐயப்பா
ஓம் நீலிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா
ஓம் நிறைவுள்ளம் தருபவனே சரணம் ஐயப்பா
ஓம் அப்பாச்சி மேடே சரணம் ஐயப்பா
ஓம் இப்பாச்சி குழியே சரணம் ஐயப்பா
ஓம் சபரி பீடமே சரணம் ஐயப்பா
ஓம் சரங்குத்தி ஆலே சரணம் ஐயப்பா
ஓம் உரல்குழி தீர்த்தமே சரணம் ஐயப்பா
ஓம் கருப்பண்ணசாமியே சரணம் ஐயப்பா
ஓம் கடுத்த சாமியே சரணம் ஐயப்பா
ஓம் பதினெட்டாம் படியே சரணம் ஐயப்பா
ஓம் பகவானின் சந்நிதியே சரணம் ஐயப்பா
ஓம் பரவசப் பேருணர்வே சரணம் ஐயப்பா
ஓம் பசுவின் நெய்யபிஷேகமே சரணம் ஐயப்பா
ஓம் கற்பூரப் பிரியனே சரணம் ஐயப்பா
ஓம் நாகராசப் பிரபுவே சரணம் ஐயப்பா
ஓம் மாளிகைப் புரத்தம்மனே சரணம் ஐயப்பா
ஓம் மஞ்சமாதா திருவருளே சரணம் ஐயப்பா
ஓம் அக்கினி குண்டமே சரணம் ஐயப்பா
ஓம் அலங்காரப் பிரியனே சரணம் ஐயப்பா
ஓம் பஸ்மக் குளமே சரணம் ஐயப்பா
ஓம் சற்குரு நாதனே சரணம் ஐயப்பா
ஓம் மகர ஜோதியே சரணம் ஐயப்பா
ஓம் மங்கள மூர்த்தியே சரணம் ஐயப்பா

ஐயப்பன் கோவில் நுழைவுவாசலில் தத்வமஸி என எழுதப்பட்டிருக்கும். இதற்கு நீயே அதுவாக இருக்கிறாய் என பொருள்
அது என்பது ஐயப்பனைக் குறிக்கும். நீ உருவத்தால் மனிதனாய் இருக்கிறாய். உன் உடலைக் கொண்டு பல பாவங்கள் செய்கிறாய்.

என்னை நினைத்து விரதம் இருக்கும் போது மட்டும் உன் உடலையும், மனதையும் கட்டுக்குள் வைத்திருக்கிறாய். உன்னை எல்லாரும் சுவாமி என்கிறார்கள். ஐயப்பா என்று என் பெயரையே உனக்கு சூட்டி அழைக்கிறார்கள். அப்போது நீ நானாகவே ஆகிறாய். தெய்வநிலைக்கு உயர்த்தப்படுகிறாய். இங்கிருந்து நீ திரும்பிய பிறகும், இந்த விரதங்களை மனதால் கடைபிடி. நானாகவே நீ மாறி விடுவாய் என்று ஐயப்பன் தன் பக்தர்களுக்கு சொல்வது போல அமைந்துள்ளது இந்த வாக்கியம்.

English summary
Those who go to the mountain from Ayyappan temple in the evening wearing fasting will recite the mantras of ayyappan emotionally from daily morning and evening fasting. The excitement of pronouncing it will increase. Power may also. At the entrance of the Ayyappan temple is written as Tatvamasi. This means that you are yourself that means Ayyappan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X