சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா - தேரோட்டம் காண குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட வைபவம் இன்று நடைபெற்றது.
திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட வைபவம் இன்று நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டம் நடைபெறுவதை முன்னிட்டு திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அம்மன் கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்றதும், தலைமைக் கோயிலாகவும் சொல்லப்படுவது திருச்சிக்கு அருகிலுள்ள சமயபுரம் மாரியம்மன் கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறும் தேர்த்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
இத்தேர்த்திருவிழாவைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவதுண்டு. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக சித்திரைத் தேரோட்ட வைபவம் நடைபெறவில்லை.

சித்திரைத் திருவிழா
இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 10ஆம் தேதியன்று கொடியேற்ற வைபவத்துடன் தொடங்கியது. விழா நடைபெறும் ஒவ்வொரு நாளும் இரவு 8 மணி அளவில் சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை, சேஷம், குதிரை என பல்வேறு வாகனங்களிலும் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று இரவு அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருத்தேரோட்டம்
சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட வைபவம் இன்று நடைபெற்றது. இதை முன்னிட்டு, காலை 10 மணிக்கு மேல் 11:30 மணிக்குள் அம்மன் தேரில் எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்ட வைபவத்தை முன்னிட்டு சமயபுரம் கோயிலின் உள்பிரகாரம், கிழக்கு வாசல், மேற்கு வாசல், தெற்கு வாசல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மின்விளக்குகளும், அலங்கார விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளதால் சமயபுரம் பகுதி மின்னொளியில் ஜொலிக்கிறது.

பக்தர்கள் நேர்த்திக்கடன்
தேரோட்ட வைபவத்தில் கலந்துகொள்வதற்காக, திருச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரத்திற்கு வந்து குவியத்தொடங்கினர். அதோடு, தங்களின் வேண்டுதலையும் நிறைவேற்றிக்கொண்டனர். தேரோட்ட வைபவத்தைக் கண்டு தரிசிக்க சுமார் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு அமைப்புகளின் சார்பில் தண்ணீர்ப் பந்தல் அமைத்து நீர்மோர், பானகம் மற்றும் அன்னதானமும் வழங்கப்படுகிறது.

குவிந்த பக்தர்கள்
தேரோட்ட வைபவத்தைக் காண வரும் பக்தர்களின வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், திருச்சி, துறையூர் உள்ளிட்ட முக்கிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. பக்தர்களின் வசதிக்காக சமயபுரத்தில் இருந்து மணச்சநல்லூர் செல்லும் சாலையில் உள்ள சக்தி நகர், பழைய பெட்ரோல் விற்பனை நிலையம், ஆட்டுச்சந்தை உள்ளிட்ட இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெளியூர்களில் இருந்து வரும் பேருந்துகள் தற்காலிக பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டுச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. தேரோட்ட வைபத்தை முன்னிட்டு, திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications