2023ல் கும்பம் செல்லும் சனியால் சங்கடம் யாருக்கு.. சந்தோஷம் யாருக்கு..பரிகாரங்கள் என்ன?
சென்னை: சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையும் சனிபகவான் சில ராசிக்காரர்களுக்கு அதிக லாபத்தையும் நன்மைகளையும் செய்யப்போகிறார். சிலருக்கு ஏழரை சனி முடிகிறது. சிலருக்கு ஏழரை சனி தொடங்குகிறது. சனிபகவானால் யாருக்கெல்லாம் 2023ஆம் ஆண்டு சந்தோஷம் பிறக்கப்போகிறது..சங்கடங்கள் நீங்கப்போகிறது என்று பார்க்கலாம்.
2023ஆம் ஆண்டு தை மாதம் 3ஆம் நாளான ஜனவரி 17ஆம் தேதி திருக்கணித பஞ்சாங்கப்படியும்,
2023ஆம் ஆண்டு பங்குனி மாதம் 15ஆம் நாளான மார்ச் மாதம் 29ஆம் தேதி வாக்கிய பஞ்சாங்கப்படியும் சனிபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப் போகிறார்.
சனி பகவான் கொடுப்பதையும், கெடுப்பதையும் யாராலும் தடுக்க முடியாது. அவரவர்களின் கர்மவினைக்கு ஏற்ப சுப மற்றும் அசுப பலன்களை தருபவர் சனிபகவான். சனிபகவான் ஒருவரின் ஜென்ம ராசிக்கு 3, 5, 6, 9, 10, 11 ஆகிய இடங்களில் கோச்சார ரீதியாக சஞ்சரிக்கும் காலக்கட்டத்தில் அதிக நன்மைகளை செய்வார். இந்த சனி பெயர்ச்சியால் யாரெல்லாம் அதிக பலன்களை அடையப்போகிறார்கள் என்று பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு லாப சனியாக 11ஆம் வீட்டில் பயணம் செய்யப்போகும் காலம் அற்புதமான பலன்கள் கிடைக்கும். அசையும் அசையா சொத்துக்கள் மூலம் அமோக லாபம் வரும். வெளிநாடு போகும் யோகம் வரும். பணம் கொட்டப்போகிறது. தொழிலில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கவுரவம் அந்தஸ்து கிடைக்கும்.
திருமண யோகம் கைகூடி வரப்போகிறது. சனிபகவான் தரப்போகும் யோகம் நிறைய சந்தோஷத்தை தரப்போகிறது. இரண்டரை ஆண்டு காலம் உங்களுக்கு உற்சாகமான கால கட்டம்தான்.

ரிஷபம்
சனி பகவான் ரிஷப ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் அமரப்போவதால் செய்யும் தொழில் வளர்ச்சியடையும். அதிக பணவரவும் லாபமும் கிடைக்கும். சச யோகமும் தர்ம கர்மாதிபதி யோகமும் செயல்படும். நல்ல வேலைக்காக காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப்போகிறது. கடந்த பல வருடங்களாக பட்ட கஷ்டங்களுக்கு பலன்கள் தேடி வரப்போகிறது. புது வேலை கிடைக்கும். பதவியில் புது உற்சாகம் கிடைக்கும். சனியால் கொடுக்கும் பதவி, சொத்துக்களை யாராலும் அசைக்க முடியாது. கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். தசாபுத்தியும் அற்புதமாக சேர்ந்தால் கோடீஸ்வரயோகம் தேடி வரும் காலம். இனி வரும் காலம் அற்புதமான காலமாக அமையப்போகிறது.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் கடந்த 5 ஆண்டு காலமாக நிறைய சிரமங்களை பட்டிருப்பீர்கள். கண்டச்சனி, அஷ்டம சனியால் கஷ்டங்கள் அனுபவித்த மிதுன ராசிக்காரர்களுக்கு பாக்ய சனி வரப்போகிறது. சனிபகவான் உங்களுக்கு யோகங்களை அள்ளித்தரப்போகிறார். சம்பள உயர்வுடன் கூடிய புரமோசன் கிடைக்கும். தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கும். தர்ம சனியால் நிறைய வருமானம் கிடைக்கும். நிறைய பணவரவும், அசையா சொத்துக்கள் மூலம் எதிர்பாராத லாபமும் கிடைக்கும். வரப்போகும் பணத்தை நிறைய தர்மகாரியங்களுக்கும் செலவு செய்வீர்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களே உங்களுடைய ராசிக்கு ஆறாவது வீட்டில் சனி பகவான் அமரப்போகிறார். இனி உங்களுக்கு பொன்னான காலம். அத்தனை சிறப்புகளையும் அள்ளித்தரப்போகிறார் சனிபகவான். சனி பகவான் முழு அதிகாரத்தையும் தரப்போகிறார். இதுவரைக்கும் நிறைய சறுக்கலை சந்தித்திருப்பீர்கள். இனி தொட்டது துலங்கும் காலம் கைகூட வரப்போகிறது. புது வேலை, பதவி உயர்வு, நினைத்த ஊருக்கு இடமாற்றம் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கை கூடி வரும். திடீர் அதிர்ஷ்டங்கள் தேடி வரும் யோகம் வரப்போகிறது. சுகங்கள் தேடி வரும். ராஜயோகமும் திடீர் அதிர்ஷ்டமும் தேடி வரப்போகிறது.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலம் முடியப்போகிறது. இத்தனை ஆண்டுகாலமாக எத்தனையோ கஷ்டங்கள் சிரமங்களைப் பட்டிருப்பீர்கள். ஜனவரி 2023 முதல் உங்களுக்கு நல்ல காலம் பிறக்கப் போகிறது. பட்ட கஷ்டங்களுக்கு உங்களுக்கு விடிவு காலம் பிறக்கப் போகிறது. திருமண விசயங்கள் கைகூடி வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உயர் பதவி யோகம் வரும். புதிய தொழில் அமையும். இனி ராஜ யோக காலம் என்பதால் இனி புகழின் உச்சிக்கு செல்லப்போகிறீர்கள். சந்தோஷங்களை அனுபவிக்கத் தயாராகுங்கள்.

ஏழரை சனி யாருக்கு
சனி பகவான் ஒருவரின் ராசியில் 12,1,2 ராசிகளில் அமரும் காலம் ஏழரை சனி காலமாகும். சனிபகவான் 2023ஆம் ஆண்டு முதல் மகரம், கும்பம், மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியாக பயணம் செய்யப்போகிறார். மகர ராசிக்காரர்களுக்கு இனி இரண்டரை ஆண்டுகள் பாத சனியாக சனி பகவான் பயணம் செய்வார் உங்களுக்கு போகிற போக்கில் அள்ளிக்கொடுத்து விட்டு செல்வார் சனிபகவான். அதே போல கும்ப ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனியாக சனிபகவான் அமரப்போகிறார். விரையங்கள் நீங்கப்போகிறது. வருமானம் அதிகரிக்கும். கும்ப ராசிக்காரர்களுக்கு தசாபுத்தி சரியாக இருந்தால் வருமானத்தை சேமிக்க முடியும். மீன ராசிக்காரர்களுக்கு 2023ஆம் ஆண்டு ஏழரை சனி தொடங்குகிறது. பண வரவு அதிகமாக இருந்தாலும் செலவும் கூடவே வரும். எந்த விசயத்திலும் கவனமும் முன்னெச்சரிக்கையும் அவசியம்.

பரிகாரங்கள் என்ன
சனிபகவானை சாந்தப்படுத்த வேண்டும் என்றால் தானம் செய்ய வேண்டும். ஏழைகள், இயலாதவர்களுக்கு தானம் செய்தாலே போதும் சனிபகவானின் கோபப்பார்வையில் இருந்து தப்பிக்கலாம். சனிபகவான் ஆணவக்காரர்கள் தலையில் தட்டி வைத்து சரியான படிப்பினைகளைத் தருவார். எனவே அதிகார போதையில் ஆடும் யாராக இருந்தாலும் சனிபகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது. விநாயகர் தரிசனம், அனுமன் தரிசனம் சனிபகவானால் ஏற்படும் சங்கடங்களைப் போக்கும். வரப்போகும் புத்தாண்டை உற்சாகத்துடன் வரவேற்க தயாராகுங்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications