ஹேப்பி நியூஸ்... சேற்றில் இறங்கி வேலை செய்யும் விவசாயிகளை சனி பாதிக்க மாட்டார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சனி சூரியனின் மகனாவார். சனி பகவான் தொழில்காரகன், ஜீவனகாரகனும் ஆவார். இவர் சேறு, சகதியில் இறங்கி வேலை செய்யும் விவசாயிகளை பாதிக்க மாட்டாராம்.

சனியின் ஆட்சி வீடு மகரம், கும்பம். துலாம் ராசியில் உச்சமடைகிறார். மேஷம் ராசியில் நீசமடைகிறார். சிம்மம் சனிபகவானுக்கு பகை வீடு. சனி பகவான் 3,7,10 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். சனி ஆயுள்காரகன் என்று சோதிடத்தில் அழைக்கப்படுகிறார்.

Shani bhagavan not affected farmers help workers

வாழ்க்கையில் ஏற்படும் கடுமையான துன்பத்திற்கு காரணம் இவரே . அதேபோல் அளவற்ற செல்வ வளத்தையும் அளிப்பவர் இவரே. இரவில் வலிமை, ஆயுள், அடிமை, எருமை, எண்ணெய், கஞ்சத்தனம், கள்ளதனம், மது, எள் தானியம், இரும்பு, வாதம் போன்றவைகளுக்கு காரணகர்த்தாவாக இருக்கிறார்.

சனி பகவானால் பாதிக்கப்படாதவர்கள் யார் யார் தெரியுமா?

* தினமும் பழைய சோறு சாப்பிடுபவர்கள்
* தினமும் உணவில் தயிர், மோர் சேர்த்துக்கொள்பவர்கள்.
* சேறு, சகதியில் இறங்கி வேலை செய்பவர்கள்.
* கழிவு நீக்கம் செய்பவர்கள்.
* துணி துவைப்பவர்கள்.
* குப்பை அள்ளுபவர்கள்.
* சவரத்தொழில் செய்பவர்கள்
* பிரசவம் பார்ப்பவர்கள்.
* சவம் தூக்குபவர்கள்.
* காக்கைக்கு உணவிடுபவர்கள்.
* எருமை மாடுகள் வைத்து பராமரிப்பவர்கள்.
* கரி மூட்டம் போடுபவர்கள்.
* செருப்பு தைப்பவர்கள்.
* நாய் வளர்ப்பவர்கள்.
* கழுதை வளர்ப்பவர்கள்.

சனிபகவானைப் பார்த்து செல்வந்தர்கள்தான் அதிகம் பயந்து பரிகாரம் செய்கின்றனர். ஆனால் மேற்கொண்ட தொழில்களை சேவை மனப்பான்மையோடு செய்பவர்களை சனிபகவான் பாதிப்பதில்லை என்பது தெரியவந்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Shani Dev helps us in increasing the confidence to face problems and gives courage and peacefulness so that it doesnt affect ones normal day to day.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X