சோபகிருது தமிழ் புத்தாண்டு ராசி பலன்: வாழ்க்கையில் அதிரடி மாற்றம்..காரிய வெற்றி யாருக்கு கிடைக்கும்
சோபகிருது தமிழ் புத்தாண்டு மிதுனம் ராசியில் பிறந்தவர்களுக்கு பலவிதமான யோகங்களைத் தரப்போகிறது.
சென்னை: சோபகிருது என்றால் மங்கலகரமான செயல்களை செய்யக்கூடிய ஆண்டு. சோபகிருது வருடத்தில் பிறந்தவர்கள் சகல விதத்தில் மேன்மையுடனும் நற்காரியங்களை செய்பவர்களாகவும் இருப்பார்கள் என பஞ்சாங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தமிழ் புத்தாண்டில் நிறைய மங்கலகரமான செயல்கள் அதிகம் நடைபெறும். சனி, குரு, ராகு கேது ஆகிய நான்கு ராஜ கிரகங்களின் பயணம் தமிழ் புத்தாண்டு நாளில் மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்களைத் தரப்போகிறார்கள் என்று பார்க்கலாம்.
இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்வார். குரு பகவான் மேஷ ராசியில் பயணம் செய்வார். ராகு பகவான் ஐப்பசி மாதம் வரை மேஷ ராசியிலும் கேது பகவான் ஐப்பசி மாதம் வரை துலாம் ராசியில் பயணம் செய்வார். ஐப்பசி மாதத்திற்குப் பிறகு ராகு மீன ராசியிலும் கேது கன்னி ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகின்றனர்.

உங்கள் வாழ்க்கையில் ஏற்றங்கள் நிறைந்த சுபமான ஆண்டாக அமைந்துள்ளது. வாழ்க்கையில் விடியல் வந்து விட்டது என உற்சாகமாக செயல்படுங்கள். மன நிறைவும் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் அங்கீகாரம் கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும் வருமானம் இரட்டிப்பாகும். ஆண்டின் முற்பகுதியில் நல்ல முறையில் முதலீடு செய்வது நல்லது.
உடல் நலத்தில் இருந்த பிரச்சினைகள் சிக்கல்கள் நீங்கும். நோய்கள், கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. உங்களின் வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு நகரப்போகிறது. கணவன் மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டு பிரிந்தவர்கள் இனி ஒன்றாக இணையப்போகிறீர்கள். தடைபட்ட திருமணங்கள் நடைபெறப்போகிறது. புத்திர பாக்கியம் கிடைக்கும். மறுமண பாக்கியம் கைகூடி வரப்போகிறது.
பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. குழந்தைகளின் நட்பு வட்டாரத்தை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது. சொத்து விவகாரங்களின் கசப்பான அனுபவங்களை சந்திப்பீர்கள். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். இந்த ஆண்டு முழுவதும் அமாவாசை நாட்களில் குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு வருவது நல்லது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications