தனுசு ராசியில் இருந்து மகரத்திற்கு நகரும் சூரியன் : 12 ராசிகளுக்கும் பலன்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  2018-ல் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும்?

  சென்னை: ஜோதிடவியலில் தை மாதம் பத்தாவது மாதமாக கூறப்படுகிறது. சூரியன் மகரம் ராசியில் சஞ்சரிப்பது தை மாதம் என்று அழைக்கப்படுகிறது. தை மாதம் என்பது சக்தி வாய்ந்தது. இதனை மகர மாதம் என்றும் அழைப்பார்கள். 12 ராசிகளுக்கும் பலன்களை அறிந்து கொள்வோம்.

  தை மாதம் முதல் தேதியில், மகர சங்கராந்தி வரும். இந்நாளில், வடதிசை பயணத்தை துவக்குகிறது சூரியன். தை முதல் உத்திரயாணப் புண்ணிய காலம் துவங்குகிறது.

  தனுசு ராசியில் சனியுடன் அமர்ந்துள்ள சூரியபகவான் ஜனவரி 14 முதல் மகரம் ராசிக்குள் நுழைகிறார். இது பல ராசிக்காரர்களுக்கு நன்மை தரக்கூடிய அமைப்பாகும்.

   சூரியன் நகர்வு

  சூரியன் நகர்வு

  சூரியனுக்குரிய வாகனம் குதிரை அதற்கு, 'சப்தா' என்று பெயர். ஏழு குதிரைகள் சூரியனின் தேரை இழுத்துச் செல்கின்றன. மாதம் ஒருமுறை ராசி விட்டு ராசி மாறி சஞ்சாரம் செய்வது சூரியனின் தொழில். இதனாலேயே இவர், குதிரையை வாகனமாகக் கொண்டுள்ளார். சூரியன் ஒவ்வொரு ராசியிலும் நுழையும் நாளே, தமிழ் மாத பிறப்பாக உள்ளது.

   ஜாதகத்தில் சூரியன்

  ஜாதகத்தில் சூரியன்

  ஜாதகத்தில் லக்கினத்தில் சூரியன் இருந்தால் ஜாதகர் சுறுசுறுப்பானவர். தேகம் எப்போதும் உஷ்ணமாக இருக்கும். இரண்டில் சூரியன் இருந்தால் கல்வி சுமாராக இருக்கும் நல்ல உழைப்பாளி. ஜாதகருக்குப் பொருள் சேரும். மூன்றில் சூரியன் இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார்.

   அரசியல் செல்வாக்கு

  அரசியல் செல்வாக்கு

  நான்கில் சூரியன் இருந்தால், ஜாதகருக்கு அரசியல் செல்வாக்கு அதிகமாக இருக்கும். ஐந்தில் சூரியன் இருந்தால் ஜாதகர் தன் முயற்சியால் உயர்வடைவார். ஆறில் சூரியன் இருந்தால் பகைவர்கள் பக்கத்தில் வரமாட்டார்கள். ஏழில் சூரியன் இருந்தால் ஜாதகர் கடன், நோய்கள் இல்லாதவர். மனைவிக்கு அடங்கிப்போகக்கூடியவர்.

   உழைப்பாளிகள்

  உழைப்பாளிகள்

  எட்டில் சூரியன் இருந்தால் ஜாதகர் நீண்ட ஆயுளை உடையவர். எவருக்கும் பணிந்து போகாதவர். ஒன்பதில் இருக்கும் சூரியனால் தந்தைக்கு இடையூறுகள் ஏற்படும். பத்தில் சூரியன் இருந்தால் அரசு தொடர்பு அல்லது அரசியல் தொடர்பு இருக்கும். பதினொன்றில் சூரியன் இருந்தால், ஜாதகர் நீண்ட ஆயுளை உடையவர். பன்னிரெண்டில் சூரியன் இருந்தால் உழைத்து முன்னேற்றம் காண்பவர்.

   மேஷம், ரிஷபம்

  மேஷம், ரிஷபம்

  ஜனவரி 14 தை மாதம் 1ஆம் தேதி முதல் சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் மாறுகிறார். மேஷ ராசிக்காரர்களுக்கு சூரியன் பத்தாமிடத்தில் இருக்கிறார் அரசு உத்தியோகம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உண்டாகும், உயர் அதிகாரிகளின் உதவி கிடைக்கும். ரிஷபம் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் இருக்கிறார் நீண்ட தூரம் பயணம் செய்யும் நிலை உண்டாகும் அப்பாவின் சொத்தில் பங்கு கிடைக்கும்.

   மிதுனம், கடகம்

  மிதுனம், கடகம்

  ஜனவரி 14 முதல் சூரியன் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் அமர்கிறார். உயர் அதிகாரிகளின் விஷயத்தில் கவனம் தேவை, கோதுமை வியாபாரம் சிறப்படையும் அதிக வருமானம் கிடைக்கும். கடகம் ராசிக்கு ஏழாமிடத்தில் அமர்கிறார். பூர்வீகத் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும், அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களுக்காக பயணம் செய்வீர்கள்.

   சிம்மம், கன்னி

  சிம்மம், கன்னி

  ஜனவரி 14 முதல் சிம்ம ராசிக்கு ராசிநாதன் சூரியன் ஆறாமிடத்தில் அமர்கிறார். வேலை வாய்ப்புக்கான தேர்வில் வெற்றி கிடைக்கும் அப்பாவுடன் வாக்குவாதம் செய்யாதீர்கள். கன்னி ராசிக்காரர்களுக்கு சூரியன் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் அமர்கிறார். பரம்பரை சொத்தில் பங்கு கிடைக்கும் அரசாங்க கௌரவம் கிடைக்கும்

   துலாம், விருச்சிகம்

  துலாம், விருச்சிகம்

  துலாம் ராசிக்காரர்களே ஜனவரி 14 முதல் சூரியன் உங்கள் ராசிக்கு நான்காமிடத்திற்கு வருகிறார். அரசு ஒதுக்கீட்டில் வீடு கிடைக்கும் அரசு வாகன யோகம் உண்டாகும். விருச்சிக ராசிக்காரர்களே சூரியன் மூன்றாமிடத்திற்கு வரப்போகிறார். அரசு ஊழியர்களுக்கு இடமாற்றம் உண்டாகும் தொழில் நிமித்தம் வெளியூர் செல்வீர்கள்.

   தனுசு, மகரம்

  தனுசு, மகரம்

  ஜனவரி 14 முதல் சூரியன் இரண்டாமிடத்திற்கு வரப்போகிறார். இருக்கிறார் அப்பா மூலம் பண வரவு உண்டாகும் பரம்பரை சொத்தில் பங்கு கிடைக்கும். சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் அமர்கிறார். பதவி உயர்வு கிடைக்கும் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்

   கும்பம், மீனம்

  கும்பம், மீனம்

  சூரியன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் முதலீடுகள் அதிகரிக்கும் அரசு அதிகாரிகளுக்காக செலவு செய்யும் நிலை உண்டாகும். சூரியன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்திற்கு வரப்போகிறார். அரசு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும் பதவி உயர்வு உண்டாகும்

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  sun transit Sun transits Dhanu to Makara January 14, 2018 Sunday at 2 PM.Sun dominates our personality, spirit and substance. The planet imbues us with vitality, strength and power. The planet of life and spunk will leave the zodiac Sagittarius, and enter the earthy planet, Capricorn on the 14th of January.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  X