For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருவண்ணாமலை கிரிவலம் - எந்த நாளில் கிரிவலம் வந்தால் என்ன நன்மை தெரியுமா

கிரிவலம் என்பது பக்திபூர்வமாகவும் பொறுமையாகவும் செய்ய வேண்டிய ஒன்று. இன்றும் திருவண்ணாமலையில் சித்தர்கள் சூட்சும வடிவில் கிரிவலம் வருவதாகக் கூறப்படுகிறது. பவுர்ணமி நாள் அன்று மட்டும்தான் கிரிவலம் வரவேண்டும் என்பதில்லை வர

Google Oneindia Tamil News

சென்னை: திருவண்ணாமலையில் சித்தர்கள் சூட்சும வடிவில் கிரிவலம் வருவதாகக் கூறப்படுகிறது. பவுர்ணமி நாள் அன்று மட்டும்தான் கிரிவலம் வரவேண்டும் என்பதில்லை வருடத்தின் 365 நாளும் மலை வலம் வரலாம்.
கிரிவலப் பாதையான 14 கி.மீ தூரத்தை பக்தர்கள் நடந்துதான் கடக்க வேண்டும். இடமிருந்து வலமாக மட்டுமே சுற்ற வேண்டும் . நமசிவாய மந்திரத்தை உச்சரித்தபடியோ, சிவபுராணத்தை பாராயணம் செய்தபடியோ கிரிவலம் வரவேண்டும் .

திருவண்ணாமலை கிரிவலம் வருவது, உடலுக்கும் உள்ளத்துக்கும் நலம் தரும் நல்லதொரு நிகழ்வு. மலையின் மாண்பையும், கிரிவலத்தின் மகத்துவத்தையும் உணர்ந்த பக்தர்கள், பெருமளவில் இப்போது கலந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர்.

ஒரே கல்லில் 2 மாங்காய்.. 3 வேளாண் சட்டங்களை மோடி அரசு வாபஸ் பெற்ற பரபர பின்னணி! ஒரே கல்லில் 2 மாங்காய்.. 3 வேளாண் சட்டங்களை மோடி அரசு வாபஸ் பெற்ற பரபர பின்னணி!

பக்தர்கள் மலை வலம் வரும் நாளில், நீராடி, தூய்மையான ஆடையை அணிந்துகொண்டு, திருநீறு அணிந்து, வேறு எந்த சிந்தனைக்கும் இடம் கொடுக்காமல், இறைசிந்தனையோடு மட்டுமே செல்லவேண்டும் . உலகில் வாழும் அனைவரும் நலமாகவாழ வேண்டுமென, மனதில் தியானம் செய்தவாறே வலம் வரவேண்டும். ஒருவரிடமும் பேசாமல் , பிறரிடம் தானம் வாங்காமல் , காலணிகள் எதுவும் அணியாமல் வெறுங்கால்களுடன் நடந்து செல்லவேண்டும் .

பிரம்மஹத்தி தோஷம்

பிரம்மஹத்தி தோஷம்

அண்ணாமலையை தொழுது கிரிவலம் வந்தால், மது, மாது, சூது, கொலை, களவு போன்ற ஐந்து பாதகங்கள் தொலையும் என்று புராணங்கள் கூறுகின்றன. கிரிவலம் வந்தால் பாவங்கள் முழுவதும் நீங்கிவிடும். மேலும் பாவம் செய்யக்கூடாது என்ற எண்ணத்தையும் நமக்குத் தோற்றுவித்துவிடும். வயதானவர்களுக்கும் உடல் நலிவுற்றவர்களுக்கும், கிரிவலம் வர வேண்டும் என்று நினைத்த மாத்திரத்திலேயே பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் .

பவுர்ணமி கிரிவலம்

பவுர்ணமி கிரிவலம்

அண்ணாமலையில் பௌர்ணமி தினத்தன்று பலரும் கிரிவலம் வருகின்றனர். கார்த்திகை பவுர்ணமி நாளில் அன்னை பராசக்தி, அருணாசலேஸ்வரரை வலம் வந்து இடப்பாகம் பெற்றாள். அன்று சந்திரன் சூரியனிடம் இருந்து சக்திகளை அதிக அளவில் பெற்று, அதை வெளியிடும் பூர்ண நிலாவாக உலா வருகிறான். அந்த ஒளி, மலை மீது பட்டு பிரதிபலிக்கும்போது, அது நமது உடலுக்கும் நம் மனதுக்கும் பற்பல நன்மைகளை நமக்குத் தெரியாமலே செய்கின்றது. இதனால் பௌர்ணமி மலைவலம் சித்தர்களால் சிறப்பாக போற்றப்படுகிறது.

எந்த நாளில் என்ன பலன் கிடைக்கும்

எந்த நாளில் என்ன பலன் கிடைக்கும்


இன்றும் திருவண்ணாமலையில் சித்தர்கள் சூட்சும வடிவில் கிரிவலம் வருவதாகக் கூறப்படுகிறது. பௌர்ணமி நாள் அன்று மட்டும்தான் கிரிவலம் வரவேண்டும் என்பதில்லை வருடத்தின் 365 நாளும் மலை வலம் வரலாம். ஞாயிற்று கிழமை கிரிவலம் வந்தால் சிவலோக பதவி கிட்டும். திங்கட்கிழமை கிரிவலம் வந்தால் இந்திர பதவி கிடைக்கும்.செவ்வாய்க்கிழமை கிரிவலம் வந்தால் கடன், வறுமை நீங்கும். புதன் கிழமை கிரிவலம் வந்தால் கலைகளில் தேர்ச்சியும், முக்தியும் கிடைக்கும். வியாழக்கிழமை கிரிவலம் வந்தால் ஞானம் கிடைக்கும். வெள்ளிக்கிழமை கிரிவலம் வந்தால் வைகுண்டப் பதவி கிடைக்கும். சனிக்கிழமை கிரிவலம் வந்தால் பிறவிப்பிணி அகலும். அஷ்டமி நாளில் கிரிவலம் வந்தால் தீவினைகள் போகும். குறிப்பாக செவ்வாய்க்கிழமை கிரிவலம் வருவது மிகவும் சிறப்பு. மஹான் சேஷாத்திரி ஸ்வாமிகளும் செவ்வாய்க்கிழமை கிரிவலம் வந்தால், கர்மவினை அகல்வதுடன் மோட்சமும் கிட்டும் என்று கூறியுள்ளார்.

தானம் செய்யுங்கள் பலன் கிடைக்கும்

தானம் செய்யுங்கள் பலன் கிடைக்கும்

கிரிவலம் வரும்போது அங்கிருக்கும் சாதுக்களுக்கு அன்னமிடுவது சிறப்பாகும். சாதுக்கள் வடிவில் சித்தர்கள் இருக்கலாம். அவர்களுக்கு அன்னதானம் செய்வதால், நமது பாவப்பிணிகள் அகலும். இவ்வாறாக கிரிவலம் செய்தால்தான் முழுமையான பலன் கிடைக்குமென சித்தர்கள் கூறிச்சென்றுள்ளனர்.

English summary
In Thiruvannamalai, the Siddhars are said to have sprouted in the form of Sootsuma. It is not only on the day of Pavurnami that one can climb the mountain 365 days a year. Devotees have to walk 14 km to reach Kiriwalap Path. Rotate only from left to right. Kirivalam should come as chanting the Namasivaya mantra or reciting the Shiva Purana.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X