கன்னியும், கும்பமும் கவனம்- 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஏழரை.. அட்டம சனியா? சனி பகவான் அருள் கிடைக்கும் மந்திரம்- வீடியோ

  சென்னை: பிப்ரவரி மாதத்தின் ஐந்தாம் நாளான இன்று மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படியிருக்கும் என பார்க்கலாம்.

  மனோகாரகன் சந்திரன் இன்றைய தினம் இரவு வரை கன்னி ராசியில் பயணம் செய்கிறார். கும்பம் ராசிக்கு சந்திராஷ்டமம் நீடிக்கிறது.

  மகரத்தில் சூரியன், சுக்கிரன், புதன், கேது அமர்ந்துள்ளனர். துலாம் ராசியில் குரு தனுசு ராசியில் சனி பகவான், விருச்சிகத்தில் செவ்வாய் என இன்றைய தினத்தில் கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.

  மேஷம்

  மேஷம்

  உங்கள் ராசிக்கு 6வது இடமான கன்னியில் சந்திரன் அமர்ந்துள்ளார். எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. எதிர்பாராத சந்திப்பு நிகழும். இன்றைக்கு அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். தொட்டது துலங்கும் நாள். ராசியான எண்: 9 ராசியான நிறங்கள்: ஊதா, ரோஸ்

  ரிஷபம்

  ரிஷபம்

  ராசிக்கு 5ஆம் இடத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள். ராசியான எண்: 4 ராசியான நிறங்கள்: ப்ரவுன், கிரே

  மிதுனம்

  மிதுனம்

  ராசிக்கு 4வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளதால் எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள். ராசியான எண்: 5 ராசியான நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு

  கடகம்

  கடகம்

  ராசிக்கு மூன்றவது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். முயற்சி ஸ்தானத்தில் சந்திரன் உள்ளதால் உற்சாகம் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். இன்றைய தினம் உங்கள் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும் நாள். ராசியான எண்: 3 ராசியான நிறங்கள்: வெள்ளை, நீலம்

  சிம்மம்

  சிம்மம்

  ராசிக்கு இரண்டாம் இடமான தன, குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். பண வரவு அதிகரிக்கும் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கோபம் குறையும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள். ராசியான எண்: 6 ராசியான நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்

  கன்னி

  கன்னி

  இன்றைய தினம் இரவு வரை உங்கள் ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் மனம் சற்றே கலக்கமாகவே இருக்கும். உங்கள் குடும்பத்தினரை பற்றி வெளி நபர்களிடம் குறைக் கூறி பேச வேண்டாம். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள். ராசியான எண்: 8 ராசியான நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்

  துலாம்

  துலாம்

  ராசிக்கு 12வது இடத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். சற்றே சோம்பலாக இருக்கும் வீட்டில் குடும்பத்தினரை அனுசரித்து செல்லுங்கள்.வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் வரக்கூடும். போராடி வெல்லும் நாள். ராசியான எண்: 6 ராசியான நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்

  விருச்சிகம்

  விருச்சிகம்

  சந்திரன் சாதகமாக 11 வீடான லாப ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பணம் அதிகம் வருவதால் சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். எங்குச் சென்றாலும் நல்ல வரவேற்பு கிட்டும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். சிறப்பான நாள். ராசியான எண்: 2 ராசியான நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு

  தனுசு

  தனுசு

  இன்றைய தினம் சந்திரன் உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் அமர்ந்துள்ளார். உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. பழைய கடனில் ஒரு பகுதியை செட்டில் செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். தொழில் ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளதால் அலுவலகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். புகழ், கௌரவம் உயரும் நாள். ராசியான எண்: 5 ராசியான நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்

  மகரம்

  மகரம்

  உங்கள் ராசிக்கு 9வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள்-. நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். இன்றைக்கு ராசியான எண்: 1 ராசியான நிறங்கள்: மஞ்சள், பிங்க்

  கும்பம்

  கும்பம்

  இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் நீடிப்பதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள் சூழ்ந்து கொள்ளும். நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். ஜீரண கோளாறு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். அமைதியாக இருப்பது நல்லது. ராசியான எண்: 9 ராசியான நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்

  மீனம்

  மீனம்

  இன்றைக்கு உங்கள் ராசிக்கு 7வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். வீட்டில் பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் ஏற்படும். இன்றைக்கு புதியவர்கள் அறிமுகமாவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். அலுவலகத்தில் உயரதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள். ராசியான எண்: 3 ராசியான நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Today's daily horoscope for 5th February 2018. From Mesham to Meenam 12 zodiac signs predictions.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற