துலாம் ராசியில் சந்திரன் மீனத்திற்கு சந்திராஷ்டமம் - 12 ராசிக்கும் பலன்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஏழரை.. அட்டம சனியா? சனி பகவான் அருள் கிடைக்கும் மந்திரம்- வீடியோ

  சென்னை: துலாம் ராசியில் சந்திரன் அமர்ந்துள்ளார். கும்ப ராசிக்குள் சுக்கிரன் இடப்பெயர்ச்சி அடைகிறார். இன்றைக்கு 12 ராசிக்கும் பலன்களை அறிந்து கொள்வோம்.

  மகரத்தில் சூரியன், புதன், கேது அமர்ந்துள்ளனர். துலாம் ராசியில் குரு தனுசு ராசியில் சனி பகவான், விருச்சிகத்தில் செவ்வாய், கும்பம் ராசியில் சுக்கிரன் என இன்றைய தினத்தில் கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.

  மீனம் ராசிக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

  மேஷம்

  மேஷம்

  ராசிக்கு 7வது இடத்தில் சந்திரன் குரு உடன் சேர்ந்து அமர்ந்துள்ளார். 10வது இடத்தில் சூரியன், புதன் கேது அமர்ந்துள்ளனர். லாப ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்வது சிறப்பான அம்சம். இன்றைக்கு உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் பயனடைவீர்கள். கல்யாண முயற்சிகள் கூடி வரும் . தாய்வழி உறவினர்கள் மத்தியில் மதிப்புக் கூடும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் ஏற்படுத்தி லாபம் ஈட்டுவீர்கள். அலவலகத்தில் இன்றைக்கு அதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். ராசியான எண்: 3 ராசியான நிறங்கள்: அடர்சிவப்பு, ப்ரவுன்

  ரிஷபம்

  ரிஷபம்

  ராசிக்கு 6வது இடத்தில் சந்திரன் கூடவே குருவும் அமர்ந்துள்ளார். ராசிநாதன் சுக்கிரன் 10வது இடத்திற்கு நகர்கிறார். 9வது இடத்தில் மூன்று கிரகங்கள் அமர்ந்துள்ளன. குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. அட்டமத்து சனியால் அவ்வப்போது சோர்வு ஏற்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் உங்களின் புது முயற்சிகள் பலிதமாகும். ராசியான எண்: 1 ராசியான நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு

   மிதுனம்

  மிதுனம்

  ராசிக்கு 5வது இடத்தில் குரு அமர்ந்துள்ள இடத்தில் இணைந்து சந்திரன் பயணிப்பது சிறப்பான அம்சம். குடும்ப வருமானத்தை உயர்த்த வேண்டுமென்ற முடிவிற்கு வருவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டார்கள் அனுசரணையாக நடந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். அலுவலகத்தில் இன்றைக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள். ராசியான எண்: 8 ராசியான நிறங்கள்: கிரே, மஞ்சள்

  கடகம்

  கடகம்

  ராசிக்கு 4வது இடத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்காவிட்டாலும், எதிர்பாராத இடத்திலிருந்து வந்து சேரும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். தாயாருக்கு அசதி, சோர்வு வந்து விலகும். இன்றைக்கு அம்மாவிடம் திட்டு வாங்க வேண்டியிருக்கும். சிலருக்கு புது வேலை அமையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். அலுவலகத்தில் நிம்மதி ஏற்படும். உங்கள் தேவைகள் பூர்த்தியாகும் நாள். ராசியான எண்: 6 ராசியான நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

  சிம்மம்

  சிம்மம்

  ராசிக்கு மூன்றாவது இடமான முயற்சி ஸ்தானத்தில் சந்திரன், குரு இணைந்து அமர்ந்துள்ளனர்.
  ராஜதந்திரமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயமடைவீர்கள். 4வது இடத்தில் உள்ள செவ்வாயினால் வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் நினைப்பதை முடித்துக் காட்டுவீர்கள். தைரியம் கூடும் நாள். ராசியான எண்: 5 ராசியான நிறங்கள்: மஞ்சள், கருநீலம்

  கன்னி

  கன்னி

  ராசிக்கு இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானத்தில் சந்திரன், குருவுடன் இணைந்துள்ளது சிறப்பான அம்சம். முயற்சி ஸ்தானத்தில் செவ்வாய் அமர்ந்துள்ளதால் தைரியம் அதிகரிக்கும்.

  கடந்த இரண்டு நாட்களாக இருந்த குழப்பங்கள் விலகி குடும்பத்தில் அமைதி நிலவும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. அலுவலகத்தில் அதிகாரி மதிப்பார். உற்சாகமான நாள். அர்த்தாஷ்டம சனியால் செலவுகள் ஏற்படும். ராசியான எண்: 3 ராசியான நிறங்கள்: ரோஸ், கிரே

  துலாம்

  துலாம்

  இன்றைய தினம் ராசிக்குள் சந்திரன் நுழைந்திருப்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையும், அலைச்சலும் இருக்கும். ஜென்மகுருவினால் சோதனைகள் ஏற்பட்ட நிலையில் கூடவே சந்திரன் அமர்ந்துள்ளதால் குடும்பத்தில் குழப்பம் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். மனதில் பட்டதை பேசி மற்றவர்களின் விமர்சனத்திற்குள்ளாவீர்கள். இன்னும் இரு தினங்களுக்கு வியாபாரத்தில் சிறுசிறு நஷ்டங்கள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் மறதியால் பிரச்னைகள் வந்துப் போகும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள். ராசியான எண்: 1 ராசியான நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

  விருச்சிகம்

  விருச்சிகம்

  ராசிக்கு 12வது இடத்தில் குரு உடன் சந்திரன் அமர்ந்துள்ளார். சிறுசிறு விரயங்கள் ஏற்படும்.
  விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். யாரையும் தூக்கி எறிந்துப் பேசாதீர்கள். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள். ராசியான எண்: 9 ராசியான நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு

  தனுசு

  தனுசு

  ராசிக்கு 11வது இடத்தில் லாப ஸ்தானத்தில் குரு உடன் சந்திரன் அமர்ந்துள்ளது யோகமான அம்சம்.
  இன்றைக்கு அலுவலகத்தில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். ஜென்ம சனியால் சிறுசிறு இடர்பாடுகள் ஏற்படலாம். இன்றைக்கு சாதிக்கும் நாள். ராசியான எண்: 2 ராசியான நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்

  மகரம்

  மகரம்

  ராசிக்கு 10 இடத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். பிள்ளைகள் நம்பிக்கைத் தருவார்கள். பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும். இன்றைக்கு யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் வரும். அலுவலகத்தில் செல்வாக்குக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள். விரைய ஸ்தானத்தில் அமர்ந்துள்ள சனியால் செலவுகள் ஏற்படும் ராசியான எண்: 4 ராசியான நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை

  கும்பம்

  கும்பம்

  ராசிக்கு 9வது இடத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். குருவும் 9வது இடத்தில் அமர்ந்துள்ளது சிறப்பான அம்சம்.
  கடந்த இரண்டு நாட்களாக வீட்டில் கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். உடல் நலம் சீராகும். புது முடிவுகள் எடுப்பீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் எதிர்ப்புகள் அடங்கும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள். ராசியான எண்: 6 ராசியான நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை

  மீனம்

  மீனம்

  ராசிக்கு 8வது இடத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். பழைய பிரச்னைகளை நினைத்துப் பார்த்து கோபப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள். உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்காதீர்கள். தோற்றுவிடுவோமோ என்ற ஒரு அவநம்பிக்கையும் வந்துப் போகும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம்.
  நேற்றிரவு முதல் 8ஆம் தேதி காலை 07-44 மணி வரை சந்திராஷ்டமம் நீடிக்கிறது. எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை எல்லோருடமும் உஷாராக இருக்கவும் உங்களுக்கு சம்பந்தமில்லாத தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம் யாரிடமும் விதண்டாவாதம் செய்ய வேண்டாம் அமைதியாக இருந்து ஆலய வழிபாடு செய்வது மன நிம்மதியைத் தரும். இன்று வேலைச்சுமை மிகுந்த நாள். ராசியான எண்: 7 ராசியான நிறங்கள்: பச்சை, மஞ்சள்

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Today's daily horoscope for 6th February 2018. From Mesham to Meenam 12 zodiac signs predictions.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற