2021ஆம் ஆண்டின் கடைசி முழு சூரிய கிரகணம் எங்கு தெரியும் - என்னென்ன சிறப்பம்சம்

சனிக்கிழமை நிகழ உள்ள முழு சூரிய கிரகணம் அண்டார்டிகாவில் மட்டுமே தெரியும். சுமார் ஒரு நிமிடம் 54 நொடிகள் வரை இந்த கிரகணம் இருளை உருவாக்கும் என வானியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2021ஆம் ஆண்டிற்கான கடைசி சூரிய கிரகணம் சனிக்கிழமை நடைபெற உள்ளது. இந்த சூரிய கிரகணம் இந்திய நேரப்படி டிசம்பர் 04ஆம் தேதி சனிக்கிழமை மதியம் 12:30 மணிக்கு தொடங்கி, நான்கு மணி நேரம் வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது பூமியில் இருந்து பார்த்தால் சூரியன் முழுமையாகவே, பகுதி அளவிலோ மறைக்கப்பட்டிருக்கும் இதைத்தான் சூரிய கிரகணம் என்கிறோம். தமிழில் இதைச் சூரியன் மறைப்பு என்று கூறலாம்.

சூரியன், நிலவு மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும் போது முழு சூரிய கிரகணம் நிகழும். பகலிலேயே சூரிய ஒளி மறைந்து வானில் இருள் தோன்றும். இந்த நிகழ்விற்கு முழு சூரிய கிரகணம் என்று பெயர்.
சில நேரங்களில் நிலவால் மறைக்கப்பட்ட சூரியன் ஒரு நெருப்பு வளையம் போல் வானில் காட்சி தரும். இது நெருப்பு வளைய சூரிய கிரகணம் அல்லது கங்கண சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.

முழு சூரிய கிரகணம்

முழு சூரிய கிரகணம்

சனிக்கிழமை நிகழ உள்ள முழு சூரிய கிரகணம் அண்டார்டிகாவில் மட்டுமே தெரியும். சுமார் ஒரு நிமிடம் 54 நொடிகள் வரை இந்த கிரகணம் இருளை உருவாக்கும் எனவும் அப்படி இருள் ஏற்படும்போது வானில் நட்சத்திரங்களே தெரியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஒரே நேர்கோட்டில்

ஒரே நேர்கோட்டில்

பகுதி சூரிய கிரகணத்தை தென் அரைக்கோளம் பகுதிகளான தென்னாப்பிரிக்கா, சிலி, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தென்பகுதியில் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பகுதி சூரிய கிரகணம் என்பது சூரியன், நிலவு மற்றும் பூமி ஒரே நேர்கோட்டில் இல்லாமல் இருக்கும்.

பூமியை சுற்றும் நிலா

பூமியை சுற்றும் நிலா

நாளை நடக்க இருக்கும் இந்த வருடத்தின் கடைசி சூரிய கிரகணத்திற்கு மற்றும் ஒரு சிறப்பு உள்ளது. இந்த கிரகணம் 'ரிவர்ஸ் போலார் சோலார்' (Reverse Polar Solar) என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக, பூமியை நிலவு மிகவும் வேகமாக மேற்கு திசையிலிருந்து கிழக்கு திசையில் சுற்றும். ஆனால், இந்த நிகழ்வின்போது, நிலவு கிழக்கு திசையிலிருந்து மேற்கில், சுழலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்குவின்கள் தேசம்

பெங்குவின்கள் தேசம்

மனித நடமாட்டம் குறைந்த அண்டார்டிகாவில் பெங்குவின்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் முழு சூரிய கிரகணம் நிகழ உள்ளது. சூரியன் முழுதாக மறையும் சுமார் ஒரு நிமிடம் 54 நொடிகள் வரை இந்த கிரகணம் இருளை உருவாக்கும். அப்போது பெங்குவின்கள் இடையே ஒருவித குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இந்தியாவில் கிரகணம் தெரியாது

இந்தியாவில் கிரகணம் தெரியாது

இந்த சூரிய கிரகணத்தைக் இந்தியாவில் காண முடியாது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் இணையதளத்தில் நேரலையில் மட்டுமே காண முடியும். இந்த நிகழ்வு YouTube மற்றும் nasa.gov/live இல் ஸ்ட்ரீம் செய்யப்படும். கிரகணத்தின் போது சூரியனை நேரடியாகப் பார்க்க வேண்டாம் என்று நாசா எச்சரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+