• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வரலட்சுமி விரதம் 2020: செல்வ வளம் குறைவில்லாது கிடைக்க இதை எல்லாம் மறக்காம செய்யுங்க

|

சென்னை: மகாலட்சுமி செல்வத்திற்கு அதிபதி வறுமையை போக்குபவள். குபேரனுடன் தொடர்பு கொண்ட எட்டு செல்வக் கருவூலங்களுக்கும் தலைமைத் தெய்வமாகத் திகழ்பவள் அன்னை மகாலட்சுமி என்கிறது மார்க்கண்டேய புராணம்.

மகாலட்சுமியை வழிபடுவதன் மூலம் நம் வாழ்க்கையில் அனைத்து வகை செல்வங்களையும் பெறலாம். வரலட்சுமி விரதம் கொண்டாடப்படும் இந்த நேரத்தில் செல்வத்திற்கு அதிபதியான அந்த மகாலட்சுமியை வழிபடுவது பற்றியும் எப்படி இருந்தால் மகாலட்சுமியின் அருள் நமக்கு கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

பணக்காரன் எப்பவுமே பணக்காரனாகவும், ஏழை எப்போதுமே ஏழையாகவே இருக்கிறார்களே என்று சிலர் யோசிக்கலாம். குபேரன் அருளும், அன்னை லட்சுமியின் அருளும் நமக்கு கிடைக்காதா என்றும் பலரும் யோசிக்கலாம். மகாலட்சுமியின் அருள் கிடைத்து செல்வத்திற்கு அதிபதியாக மாற சில தகுதிகள் இருக்க வேண்டும். அந்த தகுதிகள் இருந்தால் மட்டுமே அவர்களிடம் செல்வம் சேரும்.

தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் எடுக்க பாற்கடலை கடைந்த போது வெளிப்பட்டதால் அவருக்கு அலை மகள் என்று பெயர் வந்தது. ஸ்ரீதேவியான மகாலட்சுமியை பாற்கடலில் வசிக்கும் மகா விஷ்ணு தனது நெஞ்சில் சூடிக்கொண்டார். அதனால்தான் அவரிடம் வற்றாத செல்வம் குறைவில்லாது இருக்கிறது. மகாலட்சுமியை முறையாக வழிபட்டு நம் வாழ்க்கையில் அனைத்து வகை செல்வங்களையும் பெறலாம்.

திமுக மேல் விழுந்த இமேஜ் மாறும்போது இது தேவையா.. சர்ச்சையாகும் சென்னை மேற்கு திமுக மா.செ. பேரணி!

திருமகளின் அருள்

திருமகளின் அருள்

லட்சுமிகள் எட்டு வகையாக அருள்பாலிக்கின்றனர். அஷ்ட லட்சுமிகள் என்று அழைக்கின்றோம். அஷ்ட லட்சுமிகளின் அருள் கிடைத்தால் செல்வம்,ஞானம், உணவு,மனவுறுதி, புகழ்,வீரம்,நல்ல புதல்வர்கள், விரும்பியதை விரைவாக முடிக்கும் ஆற்றல் இவையே அந்த அஷ்ட ஐஸ்வரியங்களாகும்.

கனகதாரா ஸ்தோத்திரம்

கனகதாரா ஸ்தோத்திரம்

அஷ்ட ஐஸ்வரியங்களையும் ஒருவன் பெற அந்தத் திருமகளின் அருட்கடாட்சம் இருக்க வேண்டும். அன்னை மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை ஒன்று மட்டுமே இதற்கு போதுமானது. ஆலய வழிபாடும் அப்பழுக்கில்லாத அழகிய உள்ளம் கொண்ட எவரும் திருமகளின் திருவருளை எளிதில் பெற்றுவிடலாம். நம்முடைய வீடுகளில் விளக்கேற்றி வைத்து தீபச் சுடரையே மகாலட்சுமியாகக் கருதி கனகதாரா ஸ்தோத்திரம் பாட அன்னையின் அருள் கிடைக்கும்.

வரம் தரும் வரலட்சுமி

வரம் தரும் வரலட்சுமி

மகாலட்சுமிக்கு உரிய விரதங்களுள் மிகவும் முக்கியமான விரதம் வரலட்சுமி நோன்பு விரதமாகும். இந்த விரதம் நாளை வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் வீட்டினை சுத்தம் செய்து பூஜை அறையை அலங்கரித்து விரதம் இருந்து அம்மனுக்கு பிடித்த பாடல்களை பாடி அம்மனை வணங்க செல்வ வளமும் தீர்க்க சுமங்கலி வரமும் கிடைக்கும்.

அன்னையின் அருள்

அன்னையின் அருள்

இது போன்றே ஆவணி மாத வளர்பிறை அஷ்டமியும் லட்சுமிக்கு உரிய நன்னாளாகும். ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை பஞ்சமியை மகாலட்சுமி பஞ்சமி என்று அழைப்பார்கள் இது ரிஷி பஞ்சமியாகவும் கொண்டாடப்படும். இதே போல கார்த்திகை மாதத்தில் வரும் பஞ்சமியை ஸ்ரீ பஞ்சமி என்றும் அழைக்கின்றனர். இந்த நாளிலும் மகாலட்சுமிக்கு விரதம் இருக்கலாம்.

குங்கும பிரசாதம்

குங்கும பிரசாதம்

குங்குமம் லட்சுமி கடாட்சம் மிக்கது. பெண்கள் குங்குமம் இடுவதால் மகாலட்சுமியின் நீங்காத அருளைப் பெறுகிறார்கள். குங்குமத்தை மோதிர விரலால் தான் இடவேண்டும். சிவப்பு நிற குங்குமமே புனிதமானது. மாங்கல்யம்,நெற்றி, தலைவகிடு ஆரம்பம் ஆகிய மூன்று இடங்களிலும் ஸ்ரீ லக்ஷ்மிதேவி வசிப்பதாக ஐதீகம் எனவே இந்த மூன்று இடங்களிலும் குங்குமத்தை வைப்பதன் மூலம் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். மோதிர விரலில் குங்குமத்தைத் தொட்டு நெற்றியிலும் வகிட்டிலும் வைக்க வேண்டும்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
Varalakshmi vratam or fast is primarily observed by married women to receive blessings from Varalakshmi, a manifestation of Goddess Lakshmi. Varalakshmi is the bestower of 'Var' or 'Varam' meaning boons. Let's see how we can get the grace of Mahalakshmi. Mahalakshmi is the lord of wealth.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X