Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிள்ளையாருக்கு பிடித்த எளிமையான எருக்கம்பூ மாலை - என்னென்ன பலன்கள்

எருக்கம்பூ மாலையை விநாயகருக்கு அணிவிப்பதன் மூலம் தடைகள் நீங்குவதோடு, சூரியனின் அருளும், ஆத்ம பலனும், ஆரோக்கியமும் நமக்குக் கிடைக்கும்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மணம் மிக்க எத்தனையோ மலர்கள் இருந்தாலும் விநாயகரை அர்ச்சிக்க உகந்த மலர் எருக்கம்பூ மலர் ஆகும். இந்த பூவை அர்க்கபுஷ்பம் என்பர். அர்க்க என்ற சமஸ்கிருத சொல்லுக்கு எருக்கு என்று பொருள். விநாயகரைப் போன்றே சூரியனுக்கும் எருக்கம்பூ உகந்தது. சூரியனுக்கு அர்க்கன் என்ற பெயரும் உண்டு. சூரியனார் கோயிலில் தலவிருட்சம் கூட எருக்கஞ்செடிதான். எருக்கம்பூ மாலையை விநாயகருக்கு அணிவிப்பதன் மூலம் தடைகள் நீங்குவதோடு, சூரியனின் அருளும், ஆத்ம பலனும், ஆரோக்கியமும் நமக்குக் கிடைக்கும்.

Vinayagar Chathurthi 2021: Erukkam poo malai for vinayagar benefits

எருக்கன் செடிகளில் பல வகைகள் உண்டு. எருக்கம் பூ செடிகள் அனைத்தின் பாகங்களும் ஏதேனும் மருத்துவ பயன்பாடு நிச்சயம் உள்ளது. மருத்துவ பயன்கள் மட்டுமின்றி இறை வழிபாட்டிற்கும் சிறந்த மலராக எருக்கன் பூ திகழ்கின்றது. "தெய்வீக மூலிகை" பெருமையுடன் விளங்கும் எருக்க பூவில் ஒன்பது வகைகள் உள்ளனவாம். அதில் நமது கண்ணில் அதிகம் படுபவை கத்தரிபூ நிற எருக்கம் செடிதான். அதற்கடுத்து பிரபலமான வெள்ளெருக்கு எனப்படும் வெள்ளை நிற பூ மலரும் எருக்கஞ் செடி, இவையிரண்டும் அதிகமாக பயன்படுகிறது.

விநாயகர் வழிபாட்டில் இவ்விரண்டு எருக்கம் பூவும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. வெள்ளெருக்கம் பூவை சிவனுக்கு அர்ச்சனை செய்ய பயன்படுத்துகின்றனர். காலையில் வெள்ளெருக்கம் பூவை கொண்டு பூஜை செய்தால் நல்ல பலனை பெறலாம்.

Vinayagar Chathurthi 2021: Erukkam poo malai for vinayagar benefits

சூரியனுக்கு உகந்த எருக்கம் பூவை விநாயகருக்கு அணிவித்து வணங்கும்போது விக்னங்கள் நீங்குவதுடன் சூரியனின் அருளால் ஆத்ம பலமும், ஆரோக்கியமும் உண்டாகும். அனைவரும் எனிதாய் வணங்கும் விநாயகரை சாதாரணமாய் பூத்து கிடக்கும் எருக்கம் பூ வைத்து வழிபட்டாலே அனைத்து அருளும் வழங்குவார்.

எருக்கஞ்செடி என்றாலே அந்த காலத்திலெல்லாம் வீட்டில் வளர்த்தால் அபசகுணம் என்று கூறுவார்கள். நாம் வாழும் வீட்டில் எருக்கஞ்செடி வளர்ந்தால் அபசகுணம் என்று நம் முன்னோர்கள் கருதுவார்கள். ஆனால் திருஎருக்கத்தம்புலியூர், திருக்கானாட்டுமுள்ளூர் ஆகிய திருக்கோவில்களில் எருக்கஞ்செடியானது தலமரமாக இருக்கின்றது.

Vinayagar Chathurthi 2021: Erukkam poo malai for vinayagar benefits

தெய்வீக மூலிகை பெருமையுடன் விளங்கும் எருக்க பூவில் ஒன்பது வகைகள் உள்ளனவாம். அதில் நமது கண்ணில் அதிகம் படுபவை நீல நிற எருக்கம் செடிதான். அதற்கடுத்து வெள்ளெருக்கு எனப்படும் வெள்ளை நிற பூ மலரும் எருக்கஞ் செடி, இவையிரண்டும் அதிகமாக பயன்படுகிறது.

வெள்ளெருக்கு, சூரிய ஒளியிலுள்ள தண்ணீரை நுட்பமாக கிரகித்து வளரும் தன்மை பெற்றது. எருக்கஞ்செடி 12 ஆண்டுகள் வரை நீர் இல்லாமல் வாழும் தன்மையுடையது. எருக்கஞ்செடியில் இரண்டு வகையான எருக்கஞ்செடிகள் அதிக அளவில் காணப்படுகின்றது. நீல எருக்கு, வெள்ளை எருக்கு. வெள்ளை எருக்கஞ்செடி அதிக இடங்களில் வளர்வதில்லை. நீல எருக்கஞ்செடியை அதிக அளவில் காணப்படுகின்றது. எருக்கஞ்செடியில் உள்ள முற்றிய காய்கள் வெடித்து அதில் உள்ள பஞ்சுகள் ஆங்காங்கே சிதறி மண்ணில் புதைந்து அதிலிருந்து மற்றொரு எருக்கஞ்செடி முளைக்கின்றது. யாருடைய உதவியும் இல்லாமல் தன் இனத்தை தானே வளர்த்துக் கொள்வது எருக்கஞ்செடி.

வீட்டில் இருக்கும் வெள்ளெருக்கு விநாயகருக்கு அபிஷேகம் அவசியம் இல்லை. எருக்கம்பூ, அருகம்புல், வன்னி இலை ஆகியவற்றை சூட்டுவதோடு, அத்தர், ஜவ்வாது, புணுகு போன்ற வாசனைப் பொருட்களை பூசி வழிபட்டால், வீட்டில் மகிழ்ச்சியும், மன அமைதியும் உண்டாகும்.

சிவபெருமானுக்கு விருப்பமானது எருக்கம்பூ என்று நாயன்மார்கள் சிலர் போற்றியிருக்கிறார்கள். மேலும் அது தேவ மூலிகை என்றும் சொல்லப்படுகிறது. வெள்ளெருக்கு விநாயகர் சிலை செய்ய வெள்ளை நிற பூக்கள் கொண்ட எருக்கன்செடிதான் தேர்வு செய்யப்படும். எருக்கன் செடி வீட்டில் இருந்தால் பணவரவு அதிகரிக்கும் தீய சக்திகள் வீட்டை அணுகாது என்ற நம்பிக்கையும் உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+