திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோவிலில் துலாபாரம் கொடுத்து வழிபட்ட ராதிகா சரத்குமார்
திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோவிலில் சரத்குமார்,ராதிகா குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்து துலாபாரம் கொடுத்து வழிபட்டனர்.
தஞ்சாவூர்: திருக்கருகாவூர் அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை கோவிலில் சமக தலைவர் சரத்குமார், தனது மனைவி ராதிகா பேரன் பேத்திகளுடன் வந்து குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். பேரக் குழந்தைகளுக்கு அரிசி, வெல்லம் துலாபாரம் கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றினர்.
Recommended Video
தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுக்கா திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை முல்லைவனநாதர் திருகோவில் பிள்ளை வரம் தரும் கோவிலாகும். இந்த ஆலயத்தில் புத்திர காமேஷ்டி யாகம் நடைபெறுவது சிறப்பு. இந்த யாகத்தில் குழந்தை வரம் வேண்டியும், சுகப்பிரசவம் வேண்டியும் இந்த யாகத்தில் பலரும் பங்கேற்று வழிபட்டு வேண்டிக்கொள்வார்கள். குழந்தை பிறந்த பிறகு துலாபாரம் கொடுத்தும் தொட்டிலில் குழந்தைகளை வைத்தும் சுற்றி வருவார்கள்.
இந்த ஆலயத்திற்கு சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் தனது மனைவி, பேரன் பேத்திகளுடன் வந்து சாமி தரிசனம் செய்து துலாபாரம் கொடுத்தனர்.

ராதிகா, சரத்குமார்
முல்லைவன நாதரை தரிசனம் செய்துவிட்டு பின்னர் கர்ப்பரட்சாம்பிகையை அம்பாளை தரிசனம் செய்தனர். அப்போது எடைக்கு எடை அரிசி வெல்லம் வைத்து பேரக்குழந்தைகளுக்கு துலாபாரம் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து கோவில் சார்பில் அவர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.

ராதிகா மகிழ்ச்சி
செய்தியாளர்களிடம் பேசிய ராதிகா, கர்ப்பரட்சாம்பிகை கோவிலுக்கு 29 ஆண்டுகளாக நாங்கள் வருகிறோம். இந்த ஆண்டு எனது மகள், மருமகன் பேரக்குழந்தைகளுடன் கோவிலுக்கு வந்து அம்பாளை தரிசனம் செய்தோம். கொரோனா காரணமாக இரண்டு ஆண்டு காலமாக கோவிலுக்கு வர முடியாமல் இருந்தது. இப்போது வாய்ப்பு கிடைத்துள்ளது என்று கூறினார்.

வேண்டுதல் நிறைவேற்றம்
செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், மனைவி, மகள், பேரக்குழந்தைகளுடன் சாமி தரிசனம் செய்ய வந்திருக்கிறோம். நேர்த்திக்கடன் இருந்தது அதை இப்போது நிறைவேற்றியுள்ளோம் என்று கூறினார்.

கோவிலில் அரசியல்
பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கோவிலுக்கு வந்து அரசியல் பேசக்கூடாது. இன்னும் 15 நாட்கள் கழித்து சென்னையில் நடைபெறும் விழாவில் உங்களின் கேள்விற்கு பதில் அளிக்கிறேன் என்று கூறினார் சரத்குமார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications