ராகு கேது பெயர்ச்சி: கடகத்துக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம்.. குரு அருளால் வெற்றி மேல் வெற்றி
ராகு கேது பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டு ராகு கேது பெயர்ச்சி மே 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சியில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இடங்களை மாற்றுவது வழக்கம். இந்த ஆண்டின் சிறப்பாக சனி, குரு, ராகு கேது கிரகங்களின் பெயர்ச்சி ஒரே ஆண்டில் நடைபெறுகிறது. ராகு மற்றும் கேது என்பது நிழல் கிரங்களாகும். சந்திரன் மற்றும் சூரியனால் கிரகணம் ஏற்படும் போது உருவாகும் நிழல் கிரகங்கள்தான் ராகு கேது. இவை பெரும்பாலும் தீங்கு மட்டுமே விளைவிக்கும் தன்மையுடையதாகும். (Rahu ketu peyarchi palan)

இந்த ராகு கேது பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தினாலும், சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களையும் அள்ளிக் கொடுக்கும். ராகு கேது என்றாலே பாதிப்புதான் என்று மக்கள் நினைக்கின்றனர். அப்படி நிச்சயமாக இல்லை. நல்லதும், தீமையும் சேர்ந்த கலவைதான் ராகு கேது பெயர்ச்சி.
2025 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடக்கிறது. மீன ராசியில் இருந்து ராகு கும்பத்துக்கும், கன்னியில் இருந்து கேது சிம்மத்துக்குப் போகிறார். பெரிய பிரச்சனைகளை சந்தித்து, மோசமான நிலைகளில் தள்ளப்பட்ட மீன ராசி மற்றும் கன்னி ராசியினருக்கு அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும். மிகப்பெரிய சந்தோஷம் கிடைக்கும். அந்த வகையில், இந்த ராகு கேது பெயர்ச்சியில் கடக ராசியினருக்கு கிடைக்கப் போகும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு 9 இல் ராகு, அஷ்டம சனியால் இதுவரை வீட்டில் எந்தவித சந்தோஷமும் இருந்திருக்காது. மோசமான காலகட்டமாக இருந்திருக்கும். தற்போது, அஷ்டம சனியில் இருக்கக்கூடிய நிலைமைகளில் 9 ஆம் இடம் எனும் பாக்கிய ஸ்தானத்துக்கு சனி போவது விமோச்சனமான காலகட்டமாக இருக்கும். அஷ்டமத்துக்கு ராகு வந்தாலும் குரு பார்வை இருப்பதால் பெரிய பாதிப்புகள் இருக்காது. 20 சதவீதம் மட்டுமே ராகுவால் பாதிப்பு ஏற்படும். மற்றபடி 80 சதவீதம் நற்பலன்கள் கிடைக்கும்.
கடக ராசிக்காரர்களை கடந்த இரண்டரை ஆண்டுகாலம் தங்கக் கூண்டில் அடைத்து வைத்திருந்த நிலமை இருந்திருக்கும். எல்லாம் இருந்தும் நிம்மதி இல்லாத சூழல் இருந்திருக்கும். குடும்பத்தில் தேவையில்லாத சந்தேகங்கள், சச்சரவுகள், தவறான விஷயத்தை சரியென்று நினைத்திருப்பீர்கள். இதெல்லாம் புரிகின்ற காலகட்டமாக இருக்கும். இனி எல்லா பிரச்சனைகளில் இருந்தும் உங்களுக்கு விடுதலை ஏற்படும்.
எதிர்பார்க்காத திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டாகும். நண்பரால் அதிர்ஷ்டம் உண்டாகும். காப்பீடு, உயில், லாட்டரி போன்றவற்றில் அதிர்ஷ்டம் உண்டாகும். தொழிலில் பார்ட்னராகும் யோகம் உண்டாகும். எதிர்பார்க்காத விஷயங்கள் எதிர்பாராத நேரத்தில் நடந்து உயரிய பதவிக்குச் செல்வீர்கள். தந்தையின் பதவி கிடைக்கும். ரயில்வேயில், அரசு துறைகளில் வேலை கிடைக்கும் வாய்ப்பு உண்டாகும். ஆராய்ச்சித் துறையில் வேலை கிடைக்கும் பிராப்தம் உண்டாகும். நவீன கால தொழில்நுட்பங்களில் ஆராய்ச்சி மேற்கொண்டு வெற்றி அடைவீர்கள்.
கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: பேசும் விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 2 ஆம் இடத்தில் கேது இருப்பதால் பேச்சில் கவனம், காது, மூக்கு, தொண்டை, கண் பிரச்சனை ஏற்படும். மற்றவர்களை குடும்ப விஷயத்துக்குள் தலையிட விடாமல் இருப்பது நல்லது.
பரிகாரங்கள்: நரசிம்மருக்கு பானகத்துக்கு நெய்வேத்தியம் செய்ய அனைத்து கஷ்டங்களும் கரையும். துக்கங்கள் விலகும். சித்தர்கள் ஞானிகள் வழிபாடு அருமையான பலன்களைத் தரும்.












Click it and Unblock the Notifications