சனியின் ஆட்டம் ஆரம்பம்.. ரிஷபத்துக்கு அடிக்கும் பெரிய ஜாக்பாட்.. அடுத்த இரண்டரை ஆண்டு நீங்கதான் ராஜா

Subscribe to Oneindia Tamil

சனிப்பெயர்ச்சி 2025: மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சியானது அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், கடந்த இரண்டரை ஆண்டுகளாக பல்வேறு துன்பங்களை அனுபவித்து வந்த ரிஷப ராசியினர் இந்த சனிப்பெயர்ச்சியில் எந்தவிதமான அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர். இந்த சனிப்பெயர்ச்சியில் ரிஷப ராசியினர் பெறும் பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு ராசியிலும் சனி பகவான் இரண்டரை வருடம் சஞ்சரிக்கிறார். அனைத்து ராசிகளையும் கடந்து வர கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாகும். அந்த வகையில், மார்ச் 29 ஆம் தேதி சனி பகவான் மகர ராசியை விட்டு பெயர்ந்து கும்பத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில், தற்போது சனி மீனத்துக்குப் பெயர்ச்சியாகிறார்.

sani peyarchi 2025 Rishabam

இந்த ஆண்டின் சனிப்பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு அமோகமாக பலன்களைத் தரப் போகிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக 10 ஆம் இடத்தில் இருந்து வந்த சனி பகவான் மிகுந்த மன அழுத்தத்தை கொடுத்திருப்பார். தற்போது சனி பகவான் 11 ஆம் இடத்துக்கு லாப ஸ்தானத்துக்கு வரப் போகிறார். ராகு 10 ஆம் இடத்துக்கு வருகிறார். மார்ச் மாதத்தில் நடைபெறும் சனிப்பெயர்ச்சியில், மே மாதம் வரை ராகு பகவானும் லாபத்தில் தான் இருக்கப் போகிறார். இந்த ஏப்ரல், மே காலகட்டங்களில் நிறைய விஷயங்களில் சாதிக்க முடியும்.

உத்தியோகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எடுக்கும் முயற்சிகள் முன்னேற்றத்தை தரும். மார்ச் மாதத்தில் இருந்தே அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொள்வது யோக பலன்களைத் தரும். புதிய வேலைகள் கிடைக்கும், கடல் தாண்டி போகக்கூடிய அதிர்ஷ்டம் கிடைக்கும். சனி மற்றும் ராகு உத்தியோகம் தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

ரிஷப ராசிக்காரர்களுக்கு குறிப்பாக ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு சனியின் தாக்கம் பெரிதளவில் இருக்காது. சனி பகவான் ரோகிணி நட்சத்திரத்திற்கு கொடுத்துள்ள சத்தியம் அது. ரிஷப ராசியில் இருக்க கூடிய கிருத்திகை நட்சத்திரக்காரர்களுக்கு நன்மையை கொடுத்தாலும் கூட, சூரியன் ஆதிக்கம் இருப்பதால் உத்தியோகத்தில் மாற்றம் செய்யலாம் என்று நினைத்தவர்களுக்கு உடல் நல பாதிப்பு, அல்லது 10 ஆம் இடத்தில் வரக்கூடிய ராகுவால் கிடைக்க வேண்டிய வேலை கிடைக்காமல் போகும். அதனால், கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் அதிகமான பரிகாரங்கள் செய்வது நல்லது.

மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் இருப்பவர்களுக்கு ஏற்றமான காலமாக இருக்கும். குறிப்பாக அரசியல் மற்றும் அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல மாற்றத்தை தரும். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றத்தை தரும் காலமாக இருக்கும். வீட்டில் இருக்கக்கூடிய பெண்களுக்கு கணவன் சார்ந்த சொத்துகள், தாய் வீடு சார்ந்த சொத்துகள் அனைத்தும் வந்து சேரும். பிறந்த வீட்டால் லாபம் உண்டாகும். அதனைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.

வேலைக்குச் செல்லும் பெண்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வோடு குடும்பத்தோடு சேர்ந்து சொந்த ஊரில் வேலை கிடைக்கும் வாய்ப்பு உண்டு. பத்தாம் இடத்தில் வரக்கூடிய ராகு பகவான் அலுவலகத்தில், தொழிலில் புகழைத் தருவார். தொழில் சார்ந்த விஷயங்களில் நல்ல மாற்றம் முன்னேற்றம் உண்டாகும்.

கடந்த இரண்டரை ஆண்டுகளாக வருமானமே இல்லாமல் இருந்த கலைத் துறையினர் இந்த சனிப்பெயர்ச்சி மற்றும் ராகு கேது பெயர்ச்சி வருமானத்தை அள்ளித் தரக்கூடியதாக இருக்கும். ரிஷப ராசிக்காரர்களுக்கு பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளில் நல்ல லாபத்தைக் கொடுக்கும். வயது முதிர்ந்தவர்கள் அதிகமான லாபத்தைக் காண்பீர்கள்.

சனி பகவான் லாபத்தில் இருப்பதால் சிறு சிறு தொழில் செய்பவர்கள் தொழிலை விரிவுபடுத்துவார்கள். குடிசை தொழில் செய்பவர்களுக்கும் மிகுந்த நல்ல பலன் தரக்கூடும். கிருத்திகா நட்சத்திரக்காரர்கள் உயர் அதிகாரிகளுடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அரசாங்கம் சார்ந்த விஷயங்களில் கையெழுத்து போடும்போது கவனமாக இருக்க வேண்டும்.

ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி மிகவும் பிரமாதமான பதவி உயர்வு, சம்பள உயர்வைக் கொடுப்பார். உத்தியோகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல திருமண காலகட்டம் இருக்கும். ஜென்ம குரு மாறுவதால் இந்த வருடத்தில் ஆவணி மாதத்திற்குப் பிறகு ரிஷப ராசியினருக்கு சிறந்த காலமாக இருக்கும்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு கிடைக்கும். கேது பகவான் 4 ஆம் இடத்தில் வருவதால் புதிதாக நட்பு வட்டாரங்கள் ஏற்படும். அதில் கவனமாக இருக்கு வேண்டும். சகவாச தோஷங்கள் இருப்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். அவப்பெயர்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

பரிகாரங்கள் - சனி ராகு கேது இவர்களுடைய சஞ்சாரத்துக்கு பரிகாரங்கள் செய்வது நல்லது. கிருத்திகை நட்சத்திரத்தில் இருப்பவர்கள் ஞாயிற்றுக்கிழமை தோறும் ராகு காலத்தில் கருமாரியம்மன் ஆலயம், புற்று ஆலயங்களில் இழுப்பை எண்ணெயில் தீபம் ஏற்றுவது நல்லது. மிருகசீரிஷம், ரோகிணி நட்சத்திரக்காரர்கள் வியாழக்கிழமை தோறும் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றுவது அனைத்து காரியங்களிலும் வெற்றியைக் கொடுக்கும். குழந்தை பாக்கியம் வேண்டுவோர் சஷ்டி விரதம் இருப்பது நல்லது. திருச்செந்தூர் முருகன் வழிபாடு நல்ல பலன்களைத் தரும்.

வயலூரில் உள்ள முருகனை வணங்கி வந்தால் மேலும் லாபத்தையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும் கொடுப்பார். கடன் பிரச்சனைகளில் இருப்பவர்களுக்கு கடன் பிரச்சனைகள் தீரும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. காஞ்சிபுரத்தில் இருக்கும் வரதாராஜப் பெருமாள் கோயில் வழிபாடு அமோகமாக பலன்களைக்கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+