சனிப்பெயர்ச்சி: மகரத்துக்கு இனி எல்லாமே ஜெயம்தான்.. பட்ட கஷ்டத்துக்கு விடிவு.. சனி அள்ளி கொடுப்பார்
சனிப்பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டில் மார்ச் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது. கும்பத்தில் இருந்து மீனத்துக்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார். இந்த சனிப்பெயர்ச்சியில் மகரம் ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் யோகம் பெறப் போகின்றனர். அந்த வகையில், மகர ராசியினருக்கு சனி பகவான் என்ன விதமான பலன்களை கொடுக்கப் போகிறார். எந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
எல்லோரும் எதிர்பார்க்கும் சனிப்பெயர்ச்சி வரும் மார்ச் 29 ஆம் தேதி நடைபெறப் போகிறது. கும்பம் வீட்டில் இருக்கும் சனி மீனம் வீட்டிற்கு மாறுகிறார். பொதுவாக குருவின் வீட்டில் இருக்கக்கூடிய சனி பகவான் 12 ராசிகளுக்கும் பெரிதளவில் கெடுபலன்களை தர மாட்டார். 3, 6, 11 ஆம் இடங்களில் இருக்கும் சனி பகவான் மிகப்பெரிய யோக பலன்களைச் செய்வார். சிலருக்கு மட்டுமே சாதகமற்ற நிலை இருக்கும்.

கிரகங்களில் முக்கியப் பெயர்ச்சியாக சனிப்பெயர்ச்சி பார்க்கப்படுகிறது. ஏனென்றால் நீதிமான், தர்மக்காரகன் என்று அழைக்கப்படும் சனி பகவான் மனிதன் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப சுப பலன்களையும், அசுப பலன்களையும் கொடுப்பவர். நீதி, நேர்மை, தர்மம் ஆகியவற்றுக்கு உதாரணமான கிரகம் என்பதால் நல்லது, கெட்டது இரண்டின் தாக்கமும் அதிகளவு இருக்கும்.
சனீஸ்வரன் தான் மிகப்பெரிய கோடீஸ்வர யோகத்தை தரக்கூடிய வல்லமை வாய்ந்த கிரகம். முக்கியமான கிரகங்களில் வலிமை வாய்ந்த கிரகமாக சனி உள்ளது. பொதுவாக ஒரு ராசியில் அதிக காலம் இருக்கும் கிரகம் என்றால் அது சனி பகவான்தான். 12 ராசிகளில் எந்த ராசியில் சனி பெயர்ந்தாலும் அதற்கு முந்தைய, பிந்தைய ராசிகளை அதிகளவில் பாதிக்கும்.
2025 ஆம் ஆண்டில் சனிப்பெயர்ச்சியானது 2025 மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு அதாவது 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அவர் மீன ராசியில் இருக்கப் போகிறார்.
அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் மகர ராசிக்காரர்களுக்கு எந்தவிதமான பலன்கள் கிடைக்கும், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மகர ராசிக்காரர்களுக்கு அபாரமான நன்மைகள் கிடைக்கப் போகிறது. ஏழரை சனி முடியப் போகிறது. இனி உங்கள் வாழ்க்கையில் வெளிச்சம் உண்டாகும். 100க்கு 90 மதிப்பெண்கள் கொடுக்கும் அளவுக்கு சனி பகவானால் நற்பலன்களைப் பெறப் போகின்றனர். கடந்த ஏழரை வருடங்களாக இருள் தன்மையில் இருந்தவர்களுக்கு இனி ஒளி தெரிய ஆரம்பிக்கும். வாழ்க்கையில் மிகப்பெரிய நல்ல முன்னேற்றம், தைரியம் உண்டாகும்.
2020, 2021, 2022 ஆகிய மூன்று வருடங்களாக திருவோணம், அவிட்டம், உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் செத்துப் பிழைத்திருப்பீர்கள். 30 வயதில் இருந்தவர்கள் எல்லாம் கடுமையான சோதனைகளை சந்தித்திருப்பீர்கள். எல்லாமே முழுமையாக தீரக்கூடிய ஏழரை சனி என்கிற ஏழரை வருடம் வாட்டி எடுத்த அரக்கன் உங்களை விட்டு விலகுகிறார். மூன்றாம் இடத்தில் சனி சாதகமாக வருகிறார்.
குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி சாதகமாக இல்லை எனினும் மூன்றாம் இடத்தில் இருக்கும் சனி அனைத்து விதமான பலன்களையும் கொடுக்கும். இதுவரை உங்களுக்கு என்னென்ன கிடைக்கவில்லையோ அவை எல்லாம் கிடைக்கச் செய்யக்கூடிய தன்மை மகர ராசிக்காரர்களுக்கு உண்டு. இரண்டரை வருடத்தில் வேலை கிடைத்துவிடும். தொழில் நிரந்தமாகும்.
வியாபாரம் நன்றாக இருக்கும். விவசாயம் செழிக்கும். குடும்பம் அமையும். பிரிந்த குடும்பம் ஒன்றாக சேரும். சண்டை சச்சரவுகள் தீரும். சொந்த ஊருக்குப் போக முடியும். பிறந்த ஊருக்கு வருவது, வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். வீடு கட்டுவீர்கள். கட்டிய வீட்டை பாதுகாப்பீர்கள். அடகு வைத்த வீட்டை மீட்பீர்கள். கடன் சிக்கல்களில் இருந்து மீண்டு வருவீர்கள். இப்படி புலம்பியர்வர்களுக்கு எல்லாம் நல்ல தீர்வு கிடைக்கும் தன்மை உண்டாகும்.
இதுவரை மற்றவர்களிடம் கையேந்தும் நிலை இருந்த உங்களுக்கு இனி நீங்கள் கொடுக்கும் அளவுக்கு பண வசதி உண்டாகும். கடுமையான மன அழுத்தங்கள் எல்லாம் படிப்படியாக மறையும். தைரியம், தன்னம்பிக்கை உண்டாகும். பிள்ளைகளுக்கான கல்வி, வேலைவாய்ப்பு உண்டாகும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications