மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்
சென்னை: மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டியும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இன்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 8 மீனவர்கள் உட்பட சிறையில் உள்ள மொத்தம் 37 தமிழக மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க அந்நாட்டு அரசிடம் வெளியுறவுத்துறை மூலம் வலியுறுத்த உத்தரவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், இலங்கை வசம் உள்ள 55 மீன்பிடி படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல், கடந்த 8ம் தேதி இலங்கை கடற்பகுதியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பழுதடைந்து கரை ஒதுங்கிய 4 தமிழக மீனவர்களையும் திரும்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்படும் மீனவர்களுக்கு சொந்தமான படகுகள் திருப்பி அளிக்கப்படுவதில்லை என்பதை தொடர்ந்து குறிப்பிட்டு வருவதாகவும், இதன் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது எனவே இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். மீனவர்கள் பிரச்னைக்கு வெளியுறவுத்துறை மூலம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
-
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. நீங்க கணக்கு வச்சு இருக்கீங்களா?.. ஒரு இன்ச் கூட நகராது.. ஷாக் தகவல் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்?












Click it and Unblock the Notifications