மூன்றாவது மனுசியோட மூன்றாம் தரமான ட்விட்.. நான் மன்னிப்பு கேட்டிருக்க கூடாது! திரிஷாவுக்கு பார்த்திபன் பதிலடி
சென்னை: நடிகர் விஜய்குடும்ப வாழ்க்கை தொடர்பான விவகாரம் சமீப காலமாக சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. விஜயின் மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், அந்த விவகாரம் குறித்து பல்வேறு கருத்துகள் இணையத்தில் தொடர்ந்து பரவி வருகின்றன.
இந்த சூழ்நிலையில் நடிகை திரிஷா மற்றும் விஜய் தொடர்பான ஒரு சம்பவமும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு விஜய்யும் திரிஷாவும் ஒரே நிறத்திலான உடை அணிந்து ஒன்றாக வந்திருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரிய விவாதமாக மாறியது.
அந்த நிகழ்ச்சியில் அவர்கள் இருவரும் ஜோடியாக வந்தது குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கடுமையாக விமர்சனம் செய்தனர். குறிப்பாக விஜய் தற்போது அரசியல் பயணத்தில் முக்கியமான கட்டத்தில் இருக்கும் நேரத்தில் இப்படி ஒரு விவகாரம் பேசப்படுவது சரியல்ல என்று பலர் கருத்து தெரிவித்தனர்.

பார்த்திபன் கூறிய சர்ச்சையான கருத்து
இந்த சூழ்நிலையில் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் R. Parthiban கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் திரிஷா குறித்து கூறிய கருத்து மேலும் சர்ச்சையை உருவாக்கியது. ஒரு தனியார் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்ட போது பலரது புகைப்படங்களை காட்டி அவர்களைக் குறித்து ஏதாவது சொல்லுமாறு கேட்டனர். அப்போது திரிஷாவின் புகைப்படம் காட்டப்பட்டபோது அவர், "குந்தவை வீட்டிலேயே குந்த வைத்தால் நல்லது. அவங்க வெளியே வந்தால் பிரச்னைகள் வருகின்றன" என்று கூறியிருந்தார்.
திரிஷா பொன்னியின் செல்வன் Ponniyin Selvan திரைப்படத்தில் "குந்தவை" என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்ததால் அந்த குறிப்பை பயன்படுத்தி பார்த்திபன் இவ்வாறு பேசியதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த கருத்து சமூக வலைதளங்களில் பெரும் எதிர்ப்பை சந்தித்தது.
திரிஷாவின் கடும் பதில்
இதற்கு நடிகை திரிஷா தனது சமூக வலைதளத்தில் கடுமையாக பதிலளித்தார். அவர் கூறியதாவது: "ஒருவருடைய உதவியாளர் மூலமாக அந்த நிகழ்ச்சியில் கடைசி நேரத்தில் எனது பெயரும் புகைப்படமும் அந்த நிகழ்ச்சியில் சேர்க்கப்பட்டிருக்கிறது. மைக்கில் ஏதாவது ஒரு கருத்தை கூறுவதால் அது புத்திசாலித்தனமானதாகவோ நகைச்சுவையானதாகவோ மாறிவிடாது. சில நேரங்களில் அது முட்டாள்தனமாகவும் மாறிவிடும். அறிவு இல்லாமல் மரியாதையில்லாமல் வார்த்தைகளை பேசுவது அந்த வார்த்தைகள் யாரை நோக்கி சொல்கிறார்களோ அவர்களின் குணநலனை காட்டாது. அதை பேசுபவரின் குணநலனையே காட்டும்" என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
வருத்தம் தெரிவித்த பார்த்திபன்
திரிஷாவின் இந்த பதிவுக்குப் பிறகு பார்த்திபன் தனது சமூக வலைதளத்தில் ஒரு வாய்ஸ் ரெக்கார்டு வெளியிட்டு வருத்தம் தெரிவித்தார். அதில் அவர் கூறியதாவது: "எது நடந்ததோ அது தவறாகவே நடந்துள்ளது. இதில் வருந்துவதைத் தவிர வேறு வழியில்லை. சில நேரங்களில் சில தவறுகள் நோக்கமின்றி நடந்து விடுகின்றன. அந்த நிகழ்ச்சியில் வேகமாக கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு உடனடியாக பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தது.
அப்போது திரிஷாவின் புகைப்படத்தை காட்டினார்கள். என்ன சொல்லலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது 'குந்தவை குந்த வை' என்று அரங்கில் இருந்தவர்கள் குரல் எழுப்பினார்கள். உடனே வார்த்தை விளையாட்டாக 'குந்தவையை வீட்டிலேயே குந்த வைத்தால் பிரச்சனை வராமல் இருக்கும்' என்று சொன்னேன்.
அதை கேட்ட அரங்கமே கை தட்டியது. அங்கே இருந்தவர்கள் பெரும்பாலும் விஜய் ரசிகர்கள். ஆனால் நான் பேசியது சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அதற்காக நான் வருத்தத்தை பதிவு செய்து கொள்கிறேன்" என்று அவர் கூறினார்.
மீண்டும் விளக்கம் அளித்த புதிய வீடியோ
இதற்குப் பிறகும் சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் குறித்து பலரும் தொடர்ந்து பேச ஆரம்பித்தனர். சிலர் பார்த்திபன் வருத்தம் தெரிவிக்கவே கூடாது என்று கூட கருத்து பதிவிட்டனர். இதையடுத்து பார்த்திபன் மீண்டும் ஒரு புதிய காணொளியை வெளியிட்டு இந்த விவகாரம் குறித்து விரிவாக பேசினார்.
அந்த வீடியோவில் அவர் கூறியதாவது: "ஒரு நிகழ்ச்சியில் நான் விஜய், அஜித் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். அப்போது திடீரென திரிஷாவின் புகைப்படத்தை காட்டினார்கள். அதை பார்த்ததும் என்ன பேசுவது என்று எனக்கு தெரியாமல் திகைத்துவிட்டேன். நான் திட்டமிட்டு அவர் புகைப்படத்தை போட்டு பேச வேண்டும் என்று ஆசைப்பட்டேன் என்று சொல்வது பொய். அப்படி நான் பணம் வாங்கிக்கொண்டு எந்த நிகழ்ச்சிக்கும் செல்ல மாட்டேன். தவறும் செய்ய மாட்டேன்.
திரிஷா வீட்டிலேயே இருந்திருக்க வேண்டும் என்று அந்தணன் உள்ளிட்டோர் சொன்னார்கள். கரூர் பிரச்சனையில் கூட விஜய்க்கு விமர்சனங்கள் வந்தன. ஆனால் இந்த அளவுக்கு பாதிப்பு வரவில்லை. இந்த அளவுக்கு பாதிப்பு வர காரணமான பெண்மணி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம் என்பது என் மனதில் இருந்த ஆதங்கம். ஆனால் அதை சொல்லுவதற்காக அந்த மேடைக்கு நான் செல்லவில்லை.
அவருடைய புகைப்படத்தை போட்டு பேச வேண்டும் என்பது எனது நோக்கம் இல்லை. 'இவங்க வீட்டிலேயே இருந்திருக்கலாம்' என்று நான் சொன்னது என் ஆதங்கம் தான். சமுத்திரகனியும் மிகுந்த அன்பின் வெளிப்பாடாகத்தான் பேசினார்" என்று கூறினார்.
பிரச்சனைகளை விரும்பாதவன்
மேலும் அந்த வீடியோவில் அவர் கூறியதாவது: "நான் எப்போதும் பிரச்சனைகளை விரும்பாதவன். அந்த வீடியோவை நீக்க சொல்லியும் இருந்தேன். ஆனால் அது வேறு வழியில் வெளியேறிவிட்டது. நான் ஒரு மூன்றாவது நபரைப் பற்றித்தான் பேசினேன். ஆனால் அதை பெண்களுக்கு எதிராக பேசினேன் என்று கூறுகிறார்கள். அது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது.
நான் வருத்தம் தெரிவித்தது மிகவும் உண்மையாகத்தான். ஆனால் அந்த பதிவு வரப்போகிறது என்று தெரிந்திருந்தால் நான் வருத்தம் தெரிவித்திருக்கவே மாட்டேன்.
மூன்றாம் தரமான பதிவு
ஒரு மூன்றாவது நபரின் மூன்றாம் தரமான பதிவால்தான் நான் இதை மீண்டும் பேச வேண்டிய நிலை ஏற்பட்டது. அவரைப் பற்றி பொதுவெளியில் ஏராளமான விமர்சனங்கள் இருக்கின்றன. அதற்கெல்லாம் அவர் பதில் சொல்லவில்லை. எனக்கு மட்டும் பதில் சொல்கிறார்.
நீங்கள் ஏன் வருத்தம் தெரிவித்தீர்கள் என்று என்னிடம் கேட்கும் நண்பர்களும் இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் என்னுடன் நிற்பவர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். நீங்கள் நன்மைக்கு பக்கத்தில் நிற்கவில்லை. உண்மைக்கு பக்கத்தில் நிற்கிறீர்கள்" என்று பார்த்திபன் கூறினார்.
மேலும் இதற்கு பிறகும் தேவையானால் இன்னொரு வீடியோ வெளியிட வாய்ப்பு இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் திரிஷா - பார்த்திபன் இடையேயான இந்த சர்ச்சை சமூக வலைதளங்களில் இன்னும் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.
-
பெண்கள் குறித்த பொன்ராஜ் பேச்சுக்கு விஜய் கடும் கண்டனம்.. திமுகவையும் காட்டமாக விமர்சித்த விஜய்! -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க












Click it and Unblock the Notifications