For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொஞ்சமும் முன்னேற்றம் இல்லை.. குஜராத் அரசை விமர்சித்து பேசிய பிரதமர் மோடி? உண்மை என்ன?

Google Oneindia Tamil News

காந்தி நகர்: குஜராத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி பாஜக அரசை விமர்சனம் செய்து பேசியதாக செய்தி ஒன்று இணையம் முழுக்க தீயாக பரவி வருகிறது.

குஜராத் சட்டசபை தேர்தல் இந்த வருடம் இறுதியில் நடக்க உள்ளது. தேர்தலை முன்னிட்டு இப்போதே பாஜக தீவிரமாக தேர்தல் பணிகளை செய்து வருகிறது.

அங்கு தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுக்கும் வகையில் பிரதமர் மோடி கடந்த செப்டம்பர் 29ம் தேதி பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். அதேபோல் நேற்று அங்கு தேசிய விளையாட்டு போட்டிகளையும் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

குஜராத்

குஜராத்

குஜராத்தில் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், அவர் குஜராத் கடல் வளங்கள் குறித்து விமர்சனம் வைத்ததாக கூறப்பட்டது. அதாவது, குஜராத்தில் நல்ல கடல் வளம் இருக்கிறது. குஜராத்தில் கடலுக்கு அருகே நீண்ட சாலை உள்ளது. ஆனால் கடல் வழி பாதையை, அருகே உள்ள சாலைகள் மேம்படுத்தப்படவில்லை. இந்த சாலையை நன்றாக பயன்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணமும் இல்லை. இதற்கான முயற்சிகளை குஜராத் முந்தைய அரசுகள் எடுக்கவில்லை என்று பிரதமர் மோடி கூறியதாக செய்திகள் வெளியாகின.

 பிரதமர் மோடி

பிரதமர் மோடி

ஒரு சில வடஇந்திய ஊடகங்கள் இந்த செய்தியை பகிர்ந்து இருந்தன. இதையடுத்து நெட்டிசன்கள் பலர் பிரதமர் மோடியை கடுமையாக கிண்டல் செய்தனர். அங்கு 3 முறை முதல்வராக இருந்தது நீங்கள்தான். 4 முறை வரிசையாக அங்கு பாஜக ஆட்சிதான் இருக்கிறது. அப்படி இருக்கும் போது நீங்கள்தான் பிரச்சனைகளை சரி செய்து இருக்க வேண்டும். இப்போது நீங்கள் யார் மீது விமர்சனம் வைக்கிறீர்கள்? நீங்கள்தான் அங்கு ஆட்சியில் இருந்தீர்கள் என்பதாவது உங்களுக்கு நினைவு உள்ளதா?

வடஇந்திய ஊடகங்கள்

வடஇந்திய ஊடகங்கள்

உங்கள் ஆட்சியில் முன்னேற்றம் நடக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா? என்று பலரும் விமர்சனம் செய்து இருந்தனர். ஆனால் மோடி கூறியதாக வெளியாகும் இந்த செய்தி முழுக்க முழுக்க உண்மை கிடையாது. பிரதமர் மோடி தனது பேச்சில் கடல்வளம் பற்றி பேசியது உண்மைதான். ஆனால் அவர், தனக்கு முந்தைய அரசுகள் பற்றித்தான் பேசினார். அதாவது கடல் வழி பாதையை பாஜகவிற்கு முந்தைய அரசு சரியாக கவனிக்கவில்லை. பாஜக அரசுதான் அதை முன்னேற்றியது.

உண்மை என்ன?

உண்மை என்ன?

பாஜக அரசுதான் அங்கே கடல்வழி பாதை முன்னேற காரணமாக இருந்தது என்று குறிப்பிட்டு இருந்தார். ஆனால் இதை சில ஊடகங்கள், கட் செய்து வெளியிட்டன. இதனால் பிரதமர் மோடி தன்னுடைய அரசை தானே விமர்சனம் செய்தது போன்ற பொருள் தோன்றியது. ஆனால் உண்மையில் அவர் தனக்கு முந்தைய அரசுகளை மட்டுமே விமர்சனம் செய்தார். இணையத்தில் வேகமாக பரவி வரும் இந்த செய்தியால் பிரதமர் மோடியை பலர் கிண்டல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Fact Check

வெளியான செய்தி

குஜராத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி பாஜக அரசை விமர்சனம் செய்து பேசியதாக செய்தி ஒன்று இணையம் முழுக்க தீயாக பரவி வருகிறது.

முடிவு

பிரதமர் மோடி கூறியதாக வெளியாகும் இந்த செய்தி முழுக்க முழுக்க உண்மை கிடையாது. பிரதமர் மோடி தனது பேச்சில் கடல்வளம் பற்றி பேசியது உண்மைதான். ஆனால் அவர், தனக்கு முந்தைய அரசுகள் பற்றித்தான் பேசினார்.

ரேட்டிங்

False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
English summary
Fact Check: Did Modi talk against his own government in Gujarat coastal line speech?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X