Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Gold price: பழையபடி மீண்டும் உயரத் தொடங்கிய தங்கம் விலை.. இன்று குறைய சான்ஸ் இருக்கா?

Subscribe to Oneindia Tamil

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைந்து வந்த நிலையில் நேற்று பெரிய அளவில் உயர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. குறிப்பாக நேற்று தங்கம் விலை காலையில் குறைந்து இருந்த நிலையில் மாலையில் அதிகரித்தது. காலையில் பெயருக்கு ரூ.480 குறைந்து தங்கம் விலை மாலையில் ஒரு சவரன் ரூ.1,380 அதிகரித்து அதிர்ச்சி கொடுத்தது. மாத இறுதி நாளான இன்று தங்கம் விலை எப்படி இருக்கும் என நகை பிரியர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

தங்கம் விலை கடந்த மார்ச் 1 ஆம் தேதியுடன் ஒப்பிடும் போது சுமார் 15 ஆயிரம் என்ற அளவில் குறைந்துள்ளது என்றாலும் தற்போது மீண்டும் உயரத் தொடங்கியிருக்கிறது நகை பிரியர்களுக்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

gold price Chennai gold

தாறுமாறாக உயரும் தங்கம் விலை

தங்கம் விலை கடந்த மார்ச் 1 ஆம் தேதியுடன் ஒப்பிடும் போது சுமார் 15 ஆயிரம் என்ற அளவில் குறைந்துள்ளது என்றாலும் தற்போது மீண்டும் உயரத் தொடங்கியிருக்கிறது. நேற்று முன் தினமும் ரூ.1840 என்ற அளவில் உயர்ந்து இருந்ததால் இன்று விலை எப்படி இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை ரூ.57 ஆயிரம் என்று இருந்தது. ஒரே வருடத்தில் தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை கடந்த ஜனவரி 1 ஆம் தேதி ரூ.96 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரே வருஷத்தில் கிட்டத்தட்ட 40 ஆயிரம் வரை உயர்ந்து நகை பிரியர்கள் மற்றும் சாமானிய மக்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. தங்கம் விலை வரலாற்றில் இதுவே அதிக உயர்வாக பார்க்கப்பட்டது.

ஏற்ற இறக்கத்துடன் தங்கம் விலை

ஆனால், இதெல்லாம் சாம்பிள் தான், இனி தான் மெயின் பிக்சர் இருக்கு என்பது போல ஒரு வருஷத்தில் உயர்ந்த தங்கம் விலை ஒரே மாதத்தில் ஏறும் வகையில் ராக்கெட் வேகத்தில் சென்றது தங்கம் விலை. அதாவது பிப்ரவரி மாதத்திலேயே தங்கம் விலை ரூ.1.25 லட்சம் என்று ஆகிவிட்டது. கிட்டத்தட்ட ஒரே மாதத்தில் ரூ.30 ஆயிரம் அதிகரித்து மீண்டும் பேரதிர்ச்சியை கொடுத்தது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த வரிகள், உலக பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை போன்ற காரணங்களால், முதலீட்டாளர்கள் பலரும் பாதுகாப்பு கருதி தங்கம் மற்றும் வெள்ளி மீதே முதலீடுகளை குவித்து வந்தனர். தங்கம் விலை உயர்வுக்கு இதுவும் ஒரு காரணமாக பர்க்கப்பட்டது. இதையடுத்து தங்கம் விலை குறைவதும், ஏறுவதுமாக இருந்து வருகிறது.

ஒரு சவரன் எவ்வளவு?

குறைந்துகொண்டே வந்தாலும் திடீரென விலை அதிகரித்து உயரத் தொடங்கிவிடுகிறது. கடந்த சனிக்கிழமை தங்கம் விலை ஒரு கிராம் சென்னையில் ரூ.13,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,09,280-க்கு விற்பனை செய்யப்பட்டது.

நேற்று முன் தினம் வார விடுமுறை நாள் அதே விலை நீடித்தது. ஆனால் நேற்று காலையில் தங்கம் விலை சற்று சரிந்தது. அதாவது சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை நேற்று காலையில் ரூ.640 குறைந்து ரூ.1,08,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஒரு கிராம் தங்கம் ரூ.80 குறைந்து ரூ.13,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் மாலையில் மீண்டும் தங்கம் விலை அதிகரித்தது.

தங்கம் விலை காலையில் ரூ.480 குறைந்து இருந்த நிலையில் மாலையில் ரூ.1,360 அதிகரித்தது. சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,10,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.170 அதிகரித்து ரூ.13,770-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்றாவது விலை குறையுமா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

வெள்ளி விலையும் உயர்வு

தங்கம் விலையை போலவே வெள்ளி விலையும் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. கடந்த சனிக்கிழமை சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.250க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன் தினமும் அதே விலையே நீடித்தது. ஆனால் நேற்று மாலையில் தங்கத்தை போல வெள்ளியும் அதிகரித்தது. இதன்படி மாலையில் ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கு விற்பனை செய்யப்படுகிறது

தங்கம் விலை நிலவரம்:

30.03.2026 - ஒரு சவரன் ரூ.1,10,160 (நேற்று மாலை)
30.03.2026 - ஒரு சவரன் ரூ.1,08,800 (நேற்று காலை)
29.03.2026 - ஒரு சவரன் ரூ.1,09,280
28.03.2026 - ஒரு சவரன் ரூ.1,09,280
27.03.2026- ஒரு சவரன் ரூ.1,07,440
26.03.2026- ஒரு சவரன் ரூ.1,06,800 (மாலை)

26.03.2026- ஒரு சவரன் ரூ.1,09,360 (காலை)
25.03.2026- ஒரு சவரன் ரூ.1,08,800
24.03.2026- ஒரு சவரன் ரூ.1,06,000
23.03.2026- ஒரு சவரன் ரூ.1,06,720 (மாலை)

23.03.2026- ஒரு சவரன் ரூ.1,01,360 (மதியம்)
23.03.2026- ஒரு சவரன் ரூ.1,03,600 (காலை)
22.03.2026- ஒரு சவரன் ரூ.1,08,960
21.03.2026- ஒரு சவரன் ரூ.1,08,960

20.03.2026- ஒரு சவரன் ரூ.1,11,600
19.03.2026- ஒரு சவரன் ரூ.1,11,200 (மாலை)
19.03.2026- ஒரு சவரன் ரூ.1,14,400 (காலை)
18.03.2026- ஒரு சவரன் ரூ.1,16,560
17.03.2026- ஒரு சவரன் ரூ.1,17,200

16.03.2026- ஒரு சவரன் ரூ.1,17,680
15.03.2026- ஒரு சவரன் ரூ.1,18,080
14.03.2026- ஒரு சவரன் ரூ.1,18,080
13.03.2026- ஒரு சவரன் ரூ.1,19,200

12.03.2026- ஒரு சவரன் ரூ.1,19,760
11.03.2026- ஒரு சவரன் ரூ.1,20,960
10.03.2026- ஒரு சவரன் ரூ.1,20,400
9.03.2026- ஒரு சவரன் ரூ.1,19,600

8.03.2026- ஒரு சவரன் ரூ.1,20,400
7.03.2026- ஒரு சவரன் ரூ.1,20,400
6.03.2026 - ஒரு சவரன் ரூ.1,19,680
5.03.2026 - ஒரு சவரன் ரூ.1,20,960

4.03.2026 - ஒரு சவரன் ரூ.1,21,600
3.03.2026 - ஒரு சவரன் ரூ.1,23,720 (மாலை)
3.03.2026 - ஒரு சவரன் ரூ.1,25,200 (காலை)
2.03.2026 - ஒரு சவரன் ரூ.1,25,280
1.03.2026 - ஒரு சவரன் ரூ.1,26,200

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+