மூளை "பவர்".. நெறிப்படுத்தும் நன்னாரி.. மாதவிடாய், பால்வினை நோயை விரட்டும் நன்னாரி வேர்கள் + துவையல்
சென்னை: ஒரு சாதாரண வேர், சரும பிரச்சனையை விரட்டி, மூளையை பாதுகாத்து, ஆரோக்கியத்தையும் தருகிறது என்றால் அது நன்னாரி வேர்கள் என்றே சொல்லலாம்.
இந்த நன்னாரியின் வேர்கள் மிகவும் தடிமனாகவும், உறுதிமிக்கதாகவும் காணப்படும்.. நன்னாரியின் இலை, பட்டை மற்றும் வேர்கள் அதிக அளவில் மருத்துவ பயன்கள் மிக்கவை. இதன் இலை, வேர்களிலிருந்து எண்ணெய்கள் தயாரிக்கப்படுகின்றன. பல சித்த மருத்துவ தைலங்களில், லேகியங்களில் துணை மருந்தாக இந்த நன்னாரி வேர்கள் சேர்க்கப்படுகின்றன.

குளிர்ச்சியை தரக்கூடிய வேர் இந்த நன்னாரிகளாகும். உடலின் வெப்பச்சமநிலையை முறைப்படுத்த வேண்டுமானால், நன்னாரியை வாரம் ஒருமுறையாவது உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
ஆய்வுகள்: புற்றுநோய் செல்களுக்கு எதிராக செயல்படும் தன்மை இந்த நன்னாரி வேர்களுக்கு உள்ளதாம்.. பாக்டீரியா வளர்ச்சியை தடுக்கும் சக்தியும் இந்த நன்னாரிக்கு உண்டு. குறிப்பாக "ஹெலிகோபாக்டர் பைலோரி" என்ற பாக்டீரியாவை அழித்து, வயிற்றுப்புண்கள் ஏற்படாதவாறு நன்னாரி சேர்ந்த மருந்துகள் பாதுகாக்கும் என்பது ஆய்வுகளில் நிரூபணமாகி உள்ளது. அதுமட்டுமல்ல, காயம் ஏற்பட்ட இடத்தில், புது செல்களின் உருவாக்கத்தை இந்த நன்னாரிகள் தூண்டுகிறதாம்.
நன்னாரி வேர்கள் பலவித உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு மருந்தாகிறது.. உடல் ரத்தத்தை சுத்தம் செய்யக்கூடிய தன்மை நன்னாரிக்கு உண்டு.. இந்த வேரிலிருந்து எடுக்கப்படும் சாறு, சிறுநீரைப்பெருக்கும், வியர்வை சுரப்பை அதிகரிக்கும், சரும பாதிப்புகளையும் தீர்க்கும்..
சிறுநீரகம்: சிறுநீர் கடுப்பு, சிறுநீர் எரிச்சல் இருப்பவர்களுக்கு இந்த தண்ணிரே அருமருந்தாகும்.. இதனால் சிறுநீரகமும் பலமடைந்து சீராக செயல்படும்.. நன்னாரி வேர்களை வாழை இலையில் வைத்து கட்டி எரித்து சாம்பலாக்கி அதனுடன் தேவையான அளவு சீரகம், சர்க்கரை கலந்து பருகிவர சிறுநீர் தொடர்பான நோய்கள் விலகும்
இந்த வேர்களிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து, மஞ்சள் காமாலையையும் குணப்படுத்தக்கூடியது.. எனவே, கல்லீரரையும் இந்த வேர்கள் காக்கின்றன.
முடக்குவாதம்: முடக்குவாதமும் நெருங்காது. மூளை செல்களை விரைவாக அழித்துவிடுவதில் இருந்து பாதுகாப்பதுடன், முதுமையில் வரக்கூடிய மறதி நோயான டிமென்சியா, அல்சைமர் நோய்களில் இருந்து பாதுகாக்கிறது இந்த வேர்கள்.. ஒற்றை தலைவலியை போக்க வேண்டுமானாலும், இந்த நன்னாரி வேர்கள் மருந்தாகின்றன..
பித்தம் அதிகமாகிவிட்டால், நன்னாரி வேர்களுடன், தனியா விதைகளையும் சேர்த்து கொதிக்க வைத்து, பால், நாட்டுச்சர்க்கரை கலந்து குடித்தால் போதும். இந்த நன்னாரியை பயன்படுத்துபவர்களுக்கு, சரும வியாதிகள் நெருங்குவதில்லை.. சருமத்துக்கு பொலிவை தந்து, சுருக்கங்களையும் தள்ளிப்போடும். நன்னாரி வேர்களை இடித்து, பாலில் கலந்து குடித்து வந்தாலும், சருமத்தில் சுருக்கங்கள் லேசில் ஏற்படாது..
வேர்கள்: வெறும் வேர்களை சுத்தம் செய்து, மண்பானை தண்ணீரில் போட்டுவிடலாம். இந்த தண்ணீரை குடித்து வந்தாலே உடலிலுள்ள உஷ்ணங்கள் நீங்கிவிடும்... அல்லது இந்த வேர்களை இடித்து, தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து காய்ச்சி குடிக்கலாம். இதனால், செரிமான பிரச்சனை சீராகும்.. பசி உணர்வு தோன்றும்.. இந்த தண்ணீரில் வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் நீங்கி, பற்களும் ஈறுகளும் உறுதிபெறும்.
வியர்வை நாற்றம் அதிகமாக இருப்பவர்கள், நன்னாரியின் இலை, பூ, காய், கொடி, வேர்களை சுத்தம் செய்து, நெய்விட்டு வதக்கி, அத்துடன், மிளகு, உப்பு, புளி, இவைகளையும் வதக்கி துவையலாக 90 நாட்கள் சாப்பிட வேண்டும்.
மாதவிடாய் கோளாறு: மாதவிடாய் நேரத்தில் அதிக உதிரப்போக்கு இருந்தால், இந்த வேர்களை கழுவி பாலில் சேர்த்து அரைத்து வடிகட்டி குடிக்க வேண்டும். இதனால், ரத்தப்போக்கு கட்டுப்படுவதுடன், வெள்ளைப்படுதல் தொந்தரவும் நீங்கும். பால்வினை வியாதிகளை போக்கக்கூடிய சக்தி இந்த நன்னாரிக்கு உண்டு..
நன்னாரியின் இலை, வேர்கள் உட்பட நன்னாரித் தாவரம் முழுவதையும் எடுத்து, நெய்யில் வதக்கி, மிளகு, இந்துப்பு, சிறிது புளி சேர்த்து, துவையலாக அரைத்து சாப்பிட்டால், வெள்ளைப்படுதல் பிரச்சனையும் மெல்ல குறைந்துவிடும்.. உஷ்ணம், பித்தம் உடனே குறைந்துவிடும்.. மேக நோய், பால்வினை நோய் ஆகியவற்றிற்கு நன்னாரி நல்ல மருந்தாகும். அதுமட்டுமல்ல, ஆண்மை பெருகுவதற்கு நன்னாரி வேரை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க வேண்டும்.
பவுடர்: இந்த வேர்களை சுத்தம் செய்து, பவுடராக்கி வைத்து கொண்டால், பலவித பிரச்சனைகளுக்கு பயன்படுத்தலாம்.. குறிப்பாக, உடலில் ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், இந்த பவுடரை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தாலே தீர்வு கிடைக்கும்.
நன்னாரியில், பனைவெல்லம், எலுமிச்சம்பழச்சாறு கொண்டு தயாரிக்கப்படும் "நன்னாரி சர்பத்" உடலிலுள்ள வறட்சியை போக்குகிறது. அதேபோல, இந்த நன்னாரியில் துவையல் அரைத்து சாப்பிடலாம். ஆனால், டாக்டர்களின் முறையான ஆலோசனையை பெற்றே, நன்னாரியை மருந்தாக உட்கொள்ள வேண்டும். இதனால், ஆரோக்கியம் தழைக்கும்.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம்












Click it and Unblock the Notifications