தேற்றான் கொட்டை .. தீராத கோளாறையும் தீர்க்கும் கொத்தமல்லி.. சிறுநீர் பாதை தொற்று? இதோ சூப்பர் டிப்ஸ்
சென்னை: சிறுநீர் தொற்றுகளை தடுக்க நமக்கு மூலிகைகளே கை கொடுத்து உதவுகிறது.. இயற்கையாக கிடைக்கும் கீரைகளை கொண்டே, இதுபோன்ற தொந்தரவுகளை நாம் நீக்கிவிடலாம்.
பெண்களுக்கு ஏற்படும் மிகப்பொதுவான பாக்டீரியா தொற்றுகளில் ஒன்றுதான் சிறுநீர் பாதை தொற்று.. கிட்டத்தட்ட 50 முதல் 60 சதவீத பெண்கள், அடிக்கடி சிறுநீர் பாதை தொற்றுக்கு ஆளாக நேரிடுவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

சிறுநீர் தொற்று: உயிருக்கு இதனால் பிரச்சனை இல்லை என்றாலும், நிறைய அசௌகரியங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. முக்கியமாக, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், வயிற்று வலி போன்ற தொந்தரவுகள் வரலாம். இதற்கு நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும். உடலை உஷ்ணமாக்கி கொள்ளாமல், குளிர்ச்சியாக வைத்து கொள்ள வேண்டும். இதுபோக சில கீரைகளை உணவில் சேர்த்து கொள்ளலாம்.
சூடான தண்ணீரில் அரைமூடி எலுமிச்சம் சாறு கலந்து தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சிறுநீர் தொற்று நீங்கும்.. அதேபோல, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, அதில் 1 ஸ்பூன் வெந்தயம் சேர்த்து கொதிக்க வைத்து, வடிகட்டி வெறும் வயிற்றில் 40 நாட்கள் குடித்து வர வேண்டும்.
வெந்தய விதைகள்: அல்லது இரவு தூங்குவதற்கு முன்பு, சூடான பாலில் ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து கலந்து 40 நாட்கள குடித்து வந்தாலும், சிறுநீர் தொற்றுகள் விலகும்.
தேற்றான்கொட்டைகள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.. அசுத்தமான, கலங்கலான தண்ணீரை தெளிவுபடுத்துவதற்கு இந்த கொட்டைகளை முன்னோர்கள் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். இப்போதும் இப்படியே பயன்படுகிறது. மஞ்சள் காமாலை நோய்க்கும் இதை தேனுடன் கலந்து மருந்தாக தருவார்கள்.
உபாதைகள்: சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று போன்ற உபாதைகளுக்கும் இந்த தேற்றான் கொட்டை சிறந்த மருந்தாகும்.கண்களில் ஏற்படும் அதிக உஷ்ணம், எரிச்சல், வீக்கம் போன்ற உபாதைகளுக்கு இதன் பொடியை நீரில் குழைத்து பூசிவர கண் தொடர்பான பிரச்னைகள் நீங்கும்.
அதேபோல, கொத்தமல்லி விதைகளை நீரில் கலந்து குடிக்கலாம். கொத்தமல்லி கலந்த தண்ணீரை 10 நாட்களுக்கு தொடர்ந்து குடித்து வந்தால், சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல், நீர்க்கடுப்பு போன்றவை சரியாகும் என சில ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.
நீர்முள்ளி: நீர்முள்ளி தாவரம் இதற்கு பெரிதும் பயன்படுகிறது.. நீர்முள்ளி இலைகளையும், அதன் விதைகளையும் ஆவியில் வேகவைத்து, பூண்டு, மஞ்சள், கடுகு சேர்த்து குழம்பு போல செய்து சாப்பிட்டால் சிறுநீர்ப்பாதைத் தொற்று, நீரடைப்பு போன்றவை விலகும்.. சிறுநீர் எளிதாக பிரியும்..
அதேபோல, மூக்கிரட்டை இலைகள் கை கொடுத்து உதவுகின்றன.. இந்த மூக்கிரட்டை இலைகளை சுத்தம் செய்து, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்..
அதில், பூண்டு பற்கள், சீரக தூள், மஞ்சள் தூள், மிளகுத்தூள், உப்புத்தூள் சேர்த்து கொதிக்க விட வேண்டும். இறுதியில் வடிகட்டி குடித்தாலே, சிறுநீர் கடுப்பு முதல் சிறுநீரக தொற்று வரை பறந்துவிடும். மிகுந்த மருத்துவ குணம் இருந்தாலும், இவைகளை எல்லாம் டாக்டர்களின் அறிவுரையோடு இந்த கீரையை எடுப்பது நமக்கு பாதுகாப்பானது..!!












Click it and Unblock the Notifications