தலைமுடி ரொம்ப உதிருதா.. அப்ப இந்த "விதை"யை ட்ரை பண்ணுங்க.. சூப்பரான வெயிட் லாஸ் டிப்ஸ்.. அட்டகாசம்
சென்னை: மனித உடலுக்கு, ஒரு நாளைக்கு தேவையான அத்தனை சத்துக்களையும் கொண்டிருக்கும் சாலியா விதை பற்றி தெரியுமா? ஆளி விதைகள் என்று சொல்லக்கூடிய இந்த விதைகளின் பலன்களை பாருங்கள்.
புரோட்டீன், நல்ல கொழுப்பு, கால்சியம், ஒமேகா 3, நார்ச்சத்து, இரும்புச் சத்து, கார்போஹைட்ரெட், பொட்டாசியம், வைட்டமின் B1, B2, B3, மினரல்ஸ் என ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்த விதைதான் இந்த சாலியா விதை.

இரும்புச்சத்து: ரத்தசோகை இருப்பவர்கள், தாராளமாக சாப்பிடக்கூடிய உணவு இதுவாகும்.. ஒரு ஸ்பூன் சாலியா விதைகளில் 12 மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளதாம்.
தாய்ப்பால் உற்பத்தியை தூண்டுவதற்கும், கர்ப்பப்பையில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களை ஒழுங்குபடுத்துவதற்கும், மாதவிடாய் சுழற்சியை சீராக்குவதற்கும், மார்பக புற்றுநோய் வராமல் பாதுகாப்பதற்கும் இந்த சாலியா விதைகள் பெண்களுக்கு பேருதவி புரிகின்றன.
உடல் எடை குறையணுமா? தாராளமாக இந்த சாலியா விதையை ட்ரை பண்ணலாம்.. காரணம், இந்த விதையில் நார்ச்சத்து, புரதச்சத்து இரண்டுமே உள்ளதால், உடலில் தேவையற்ற கொழுப்புகளை கரைபடுகின்றன.. இதனால், மாரடைப்பு, பக்கவாதம், புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயங்களும் குறைகின்றன.. முக்கியமாக, புற்றுநோய் உருவாக்கக்கூடிய செல்களின் வளர்ச்சியை இந்த விதைகள் கட்டுப்படுத்துகின்றன..
வயிறு உபாதைகள்: மலச்சிக்கல் பிரச்சனையை சீராக்கி, குடல் செரிமானத்தை காக்க இந்த சாலியா விதைகள் பெரும் பங்கு வகிக்கின்றன.. இதனால், வாயு, வயிறு வீக்கம், போன்ற பிரச்சனைகளும் சரியாகின்றன..
சர்க்கரை நோயாளிகளுக்கு, சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்து, இன்சுலின் சுரப்பை இந்த விதைகள் சீர்படுத்துகின்றன.. வயது காரணமாக வரக்கூடிய எலும்பு வறட்சியை, சாலியா விதையிலிருக்கும் கால்சியம் தடுத்து நிறுத்துகின்றன. சாலியா விதைகளுக்கு காயங்களை குணப்படுத்தும் தன்மை கொண்டுள்ளது.
எப்படி பயன்படுத்துவது: இந்த விதையை ஊறவைத்து பயன்படுத்த வேண்டும்.. நீரில் ஊறவைத்து, அரைத்து, மோரில் கலந்து ஒரு நாளைக்கு 2 வேளை குடித்து வந்தால், மேற்கண்ட நன்மைகள் கிடைக்கும்..
கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும் இதை சாப்பிடலாம்.. காரணம், புரதம் மற்றும் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால், அவை ஆற்றல்மிக்க பால்சுரப்பு பண்புகளை கொண்டிருப்பதால், பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் நல்லது.. பாலூட்டி சுரப்பிகளில் இருந்து தாய்ப்பால் உற்பத்தியை தூண்டவும், பராமரிக்கவும், அதிகரிக்கவும் இந்த விதை உதவுகிறது. எனினும், டாக்டர்களின் முறையான ஆலோசனையை பெற்று சாப்பிடுவது கூடுதல் ஆரோக்கியத்தை தரும்.
இந்த சாலியா விதைகளை பாலில் ஊறவைத்து, அதனுடன் வைட்டமின்E ஆயில் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி, 10-15 நிமிடம் கழித்து முகம் கழுவினால், சருமம் பளபளப்பாகும்.. தலைமுடி உதிர்வு பிரச்சனை இருப்பவர்கள்,
தலைமுடி: இந்த விதையை தண்ணீரில் 8 மணி நேரம் ஊறவைத்து, பாலில் கலந்து, தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு, அதனுடன் தேவையான விதையுடன் மென்று விழுங்கி வர வேண்டும். இப்படி 2 மாதம் செய்துவந்தால், தலைமுடி உதிர்வது கட்டுப்படும். முடி உதிர்வால் அவதிப்படும் ஆண், பெண் இருவருமே இதை பின்பற்றலாம். அல்லது இந்த சாலியா விதைகளில் லட்டு போல தயார் செய்து, கொப்பரை தேங்காய், நெய், வெல்லம் சேர்த்து சாப்பிடலாம்..
இவ்வளவு நன்மைகள் இருந்தாலும், சாலியா விதைகளை அதிகம் சாப்பிடக்கூடாது.. ஒரு நாளைக்கு 5-10 விதைகளுக்கு மேல் எடுத்துக்கொள்ள கூடாது என்பார்கள்.. அதேபோல, உங்களுக்கு உடல்நல பிரச்சனைகள் ஏதாவது இருந்தால், டாக்டரின் ஆலோசனையை பெற்று சாப்பிடுவது இன்னும் நல்லது.












Click it and Unblock the Notifications