வெறும் பட்டை.. தேனுடன் இந்த பட்டை தூளை சேர்த்தால் போதுமே.. ஆச்சரிய நலனை தரும் லவங்கப்பட்டை தண்ணீர்
சென்னை: முருங்கை பட்டை எந்த அளவுக்கு உதவுகிறதோ, அதே அளவுக்கு மருத்துவ நலன்களை வாரி வழங்கக்கூடியது லவங்கப்பட்டை. அப்படி என்ன ஆச்சரியம் இந்த பட்டையில்?
மெக்னீசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், புரதம், கால்சியம், மங்கனீசு, காப்பர், ஜிங்க், வைட்டமின்கள், நியாசின், தியமின் போன்ற சத்துக்கள் இந்த வாசனை பட்டையில் அடங்கியிருக்கின்றன.. அந்தவகையில், பூண்டைவிடவும், பன்மடங்கு சக்தி வாய்ந்ததாம் இந்த பட்டை.

சர்க்கரை நோயாளி: பெரும்பாலும் சர்க்கரை நோயாளிகளுக்கு உதவக்கூடியது இந்த பட்டை.. அதேபோல உயர் ரத்த அழுத்தம் உள்ளோருக்கு வரப்பிரசாதம் இந்த பட்டைகள்.
சாதாரணமாக நாம் குடிக்கும் தண்ணீரில், இந்த பட்டையை போட்டு ஊற வைத்து குடித்தாலே, பல நன்மைகள் கிடைக்குமாம்.. முக்கியமாக சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும்.. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், கணையத்தின் இன்சுலின் சுரப்பை எதிர்க்கும் பண்புகளை குறைத்து, இன்சுலின் சுரப்பை ஊக்குவிக்கிறதாம் இந்த பட்டைகள்.
அதேபோல, ஒரு கிளாஸ் தண்ணீரில் சில பட்டை துண்டுகளை போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி, தினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலிலுள்ள தேவையில்லாத கழிவுகள் வெளியேறி, உடல் சுத்தமாகும்.. உடல் எடையும் குறையும்.
எதிர்ப்பு சக்தி: ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த இந்த தண்ணீரை குடித்து வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகரிக்கும்.. இதயம் சிறப்பாக வேலை செய்யும்.. சுவாச கோளாறுகள் நிங்கும்.. மூளையின் செயல்பாடுகளும் அதிகரிப்பதுடன், மூளை செல்களை சேதமடையாமல் பாதுகாக்க இந்த பட்டை தண்ணீர் உதவுகிறது.
பல்வலியால், பல் ஈறுகளால் அவதிபப்டுபவர்கள், இந்த பட்டை தண்ணீரை குடித்தால் நிவாரணம் கிடைக்கும்.. பல் ஈறுகளின் வீக்கங்களும் குறைய தொடங்கும்.. வாய் துர்நாற்றமும் நீங்கும்.. கர்ப்பிணி பெண்கள், இந்த தண்ணீரை குடித்து வந்தால், நீர்க்கட்டிகள் ஏற்படாமல் தடுக்கிறது. புற்றுநோய் நம்மை எந்த ரூபத்திலும் அண்டவிடாமல் இந்த பட்டை தண்ணீர் தடுத்துவிடுமாம்.
ஆண்கள்: ஆண்களுக்கு விறைப்புத்தன்மை குறைபாடு இருந்தால், இந்த பட்டை பேருதவு செய்யும்.. எனவே, இரவு தூங்கும்போது, பட்டையை பாலில் அல்லது தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து குடிக்கலாம்.. காரத்தன்மையும், சூட்டை கிளப்பும் தன்மையும் இந்த பட்டைக்கு உள்ளதால், அளவுக்கு அதிகமாகவும் பயன்படுத்தக்கூடாது.
அதேபோல, வெதுவெதுப்பான ஒரு டம்ளர் தண்ணீரில் பட்டைத்தூள் + தேன் இரண்டையும் கலந்து குடித்தால் இன்னும் பலன்களை தரும்.. பட்டையும் தேனும் ஒன்றுசேரும்போது, இதயத்திலுள்ள தமனிகளில் இருக்கும் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது..
பட்டை தூள்: இருதய தசைகளை வலுப்பெற செய்ய இவை உதவுகின்றன. மூட்டு நோயால் அவதிப்படுபவர்கள், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் இரண்டு ஸ்பூன் தேனும், சிறிது இலவங்கப் பட்டை தூள் கலந்து சாப்பிடலாம்.. ஜலதோஷம், மூக்கடைப்பு இருந்தாலும் இந்த தண்ணீரை குடிக்கலாம்.. வயிற்று வலி, வயிற்று புண்ணுக்கும், தேனும் இலவங்க பட்டை பொடியும் பேருதவி புரிகின்றன.
-
தினமும் ஒரு கைப்பிடி மொச்சை பயறு சாப்பிட்டால் உடலில் இவ்வளவு மாற்றங்களா? மிஸ் பண்ணிடாதீங்க! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர்












Click it and Unblock the Notifications