நெற்றியில் பூசும் விபூதி.. இத்தனை ஸ்பெஷலா? ஆச்சரியத்தை ஒளித்து வைத்திருக்கும் திருநீறு.. பாருங்களேன்
சென்னை: அறிவியல் சார்ந்த எத்தனையோ விஷயங்கள், காலப்போக்கில் ஆன்மீகம் என்ற வரையறைக்குள் நின்றுவிட்டது.. இதனால் அறிவியல் புறம்தள்ளப்பட்டு, ஆன்மீகம் முன்நின்றதால், சில விஷயங்கள் மறைந்தேவிட்டன.. மேலும் சில விஷயங்களை நாம் அறியாமலேயே விட்டுவிட்டோம்.. அவைகளில் ஒன்றுதான் விபூதி.
விபூதிக்கு நிறைய பெயர்கள் உள்ளன.. இரட்சை, சாரம், பஸ்மம், பசிதம், திருநீறு இப்படி பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இதை தயாரிக்கும் முறை எளிதானதுதான்.. ஆனால், அவ்வளவும் ஆச்சரிய பலன்களை தரக்கூடியது.
எப்படி தயார் செய்கிறார்கள்: பசுமாட்டு சாணத்தை எரித்துதான் திருநீறு தயார் செய்யப்படுகிறது.. மாடு அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு சாணம் போடும்..
மாட்டு சாணம்: அந்த சாணத்தை தீயிலிடப்படும்போது, ஏற்படும் ரசாயன மாற்றங்கள் உடலுக்கு நம்முடைய நன்மையை தருகிறது. பசு மாட்டுச்சாணத்தை எரித்து ஏன் திருநீறு செய்யப்படுகிறதென்றால், மாடு அருகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு, தனது உடலை நல்ல உடற்சக்தியுடன் வைத்திருக்கிறது... இது இடும் சாணத்தை தீயிலிடும்போது ஏற்படும் ரசாயன மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத்தன்மையாக அமைகிறது.

நீறு இல்லா நெற்றி பாழ் என்று ஒரு பழமொழியே உண்டு.. இதை தெய்வீக விஷயமாக பார்க்கப்படுவதால், எதற்காக நெற்றியில் திருநீறு வைக்கிறோம் தெரியுமா? நெற்றியில் திருநீறு இட்டுக் கொள்வது எதிர்மறை ஆற்றல்கள் அல்லது தீய எண்ணங்கள் அல்லது தீயசக்திகளை நம்மிடம் நெருங்க விடாது. மனித உடலிலேயே நெற்றி மிக முக்கிய பாகமாக கருதப்படுகிறது. 2 புருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகளை உள்ளன..
சூரியக்கதிர்கள்: நெற்றியில் சரியான இடத்தில் வைத்தால் மட்டுமே நரம்புகள் தூண்டப்பட்டு, திருநீறு அணிந்த கொள்வதற்கான சரியான பலன் கிடைக்கும்.. நெற்றியில் தான் அதிகமாக வெப்பம் வெளியிடப்படுகின்றது.. உள்இழுக்கவும்படுகின்றது... சூரியக் கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் அதிர்வுகளை உள்ளனுப்பும் செயலை திருநீறு செய்கிறது. அதனால் தான் திருநீறை நெற்றியில் கட்டாயம் பூசுகிறார்கள். அதனால்தான் முன்னோர்கள் நீறு இல்லா நெற்றி பாழ் என்று எழுதிவைத்தார்களாம்..
விபூதியை தண்ணீரில் குழைத்து நெற்றியில் பூசினால் கபாலத்தில் உள்ள நீர் வற்றி பல வியாதிகள் தீருகிறது.. அதனால்தான், கிராமங்களில் பிறந்த குழந்தைக்கு தலைக்கு குளிப்பாட்டியதும், உச்சந்தலையில் விபூதி வைப்பார்கள்... இதனால், அந்த விபூதி தலையில் இருக்கக் கூடிய ஈரத்தை உறிஞ்சிக்கொள்ளும்..
அதிர்வுகள்: திருநீறானது நல்ல அதிர்வுகளை உள்வாங்கும் தன்மை உடையது.. எனவே, உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்வதால் அந்த இடங்களிலெல்லாம் வலிமை அதிகமாகும் என்கிறார்கள்.. திருநீறு பூசுவதை வழக்கத்தில் வைத்திருக்கிறார்கள்.
தோள், முழங்கை, மணிக்கட்டு, இடுப்பு, முழங்கால் என நம்முடைய உடம்பில் எலும்புகள் இணையும் மூட்டுப் பகுதிகளிலும் தினமும் திருநீறு பூசி வந்தால், அந்த மூட்டுப்பகுதிகளில் தேங்கி நிற்கும் கெட்ட நீரை உறிஞ்சி படிப்படியாக வெளியேற்றிவிடும்.. இதனால், எலும்புத் தேய்மானம், சவ்வு கிழிதல் போன்ற மூட்டு சம்பந்தமான வலிகள், நோய்கள் நீங்கிவிடும் என்கிறார்கள்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications