For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிறிஸ்தவ தேவாலயங்களை சேதப் படுத்திய மர்மநபர் பெங்களூரில் கைது

Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூர் மற்றும் தமிழகத்தின் சில இடங்களில் கிறிஸ்தவ ஆலயங்களை சேதப்படுத்திய குற்றத்திற்காக தேடப்பட்டு வந்த மர்ம நபர் கைது செய்யப் பட்டுள்ளார்.

கடந்த 2008- 2009ம் ஆண்டுவாக்கில் தமிழகம் மற்றும் பெங்களூர் நகரின் சில முக்கிய கிறிஸ்தவ தலங்கள் மர்ம நபரால் தாக்கப் பட்டது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்களைக் கைது செய்வதற்காக சிறப்பு தனிப்படை அமைத்து குற்றவாளியை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் இம்மாதம் 3ம் தேதி, 33 வயதான சஜன்குமார் என்ற தமிழக வாலிபரை பெங்களூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கிறிஸ்தவ தேவாலயங்களைத் தாக்கிய வழக்கில் அவருடைய பங்கிருப்பது தெரிய வந்தது.

சஜன்குமாரின் சதிச் செயலுக்கு பிண்ணனியில் ஏதேனும் அமைப்புகளின் பங்களிப்பும் இருக்கிறதா என்பது குறித்து மேற்கொண்டு விசாரணை செய்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளானர்.

தமிழகத்தின் சார்பில் கிறிஸ்தவ பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்ற இடத்தின் அருகில் நின்ற இருசக்கர வாகனத்தை எரித்த வழக்கும் சஜன்குமார் மீது நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
A man having suspected links with a fundamentalist organisation has been arrested for his alleged role in vandalising and attacking churches in the city and Tamil Nadu between 2008 and 2009.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X