தேர்வு கிடையாது.. ரூ.36,000 முதல் ரூ.1.80 லட்சம் வரை சம்பளம்.. அழைக்கும் இந்திய விமான ஆணையம்!
சென்னை: இந்திய விமான ஆணையத்தில் 4 பிரிவுகளில் காலியாக 364 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. தேர்வு இல்லாமல் ஆட்சேர்ப்பு நடக்கும் நிலையில் மாதசம்பளம் குறைந்தபட்சமாக ரூ.36 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.1.80 லட்சம் வரை வழங்கப்பட உள்ளது.
மத்திய அரசின் விமான போக்குவரத்து துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இந்திய விமான ஆணையம் (Airports Authority Of India or AAI) செயல்பட்டு வருகிறது. இங்கு காலியாக உள்ள பணியிடங்கள் ஒவ்வொன்றாக நிரப்பப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தான் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?
இந்திய விமான நிலைய ஆணையத்தில் சீனியர் அசிஸ்டென்ட் மொத்தம் 4 பிரிவுகளில் 364 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி Manager (Official Language) பதவிக்கு 2 பேர், Junior Executive (Air Traffic Control) பதவிக்கு 356 பேர், Junior Executive (Official Language) பதவிக்கு 4 பேர், Senior Assistant (Official Language) பதவிக்கு 2 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

வயது வரம்பு என்ன?
Manager (Official Language) பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். Junior Executive பணிக்கு விண்ணப்பம் செய்வர்கள் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். Senior Assistant பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும் தளர்வுகள் உண்டு.

கல்வி தகுதி என்ன?
Manager (Official Language), Junior Executive (Official Language), Senior Assistant (Official Language) பணிக்கு விண்ணப்பம் செய்வோர் இந்து அல்லது ஆங்கிலத்தில் பட்ட மேற்படிப்பை முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் பிற படிப்பில் இந்து, ஆங்கிலத்தை கட்டாயமாக படித்திருக்க வேண்டும். Junior Execuive (Air Traffic Control) பணிக்கு பிஎஸ்சி டிகிரியை இயற்பியல், கணிதம் பாடங்களுடன் அல்லது என்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

மாத சம்பளம் என்ன?
Senior Assistant பணிக்கு ரூ.36 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் வரையும், Junior Executive பணிக்கு மாதம் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.1.40 லட்சம் வரையும், Manager (Official Language) பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் பணிக்கு மாதம் ரூ.60 ஆயிரம் முதல் ரூ.1.80 லட்சம் வரை வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பம் செய்வது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். இதற்கான விண்ணப்பத்தை www.aai.aero எனும் இணையதளத்தில் Careers என்பதை கிளிக் செய்து விண்ணப்பம் செய்யலாம். ஆன்லைன் விண்ணப்பம் செய்ய 2023 ஜனவரி 21ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பம் செய்பவர்கள் ஆவண சரிபார்ப்பு, Voice Test உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப் உள்ளனர்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல Click Here
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு












Click it and Unblock the Notifications