மத்திய அரசு வேலை.. நல்ல சம்பளம்.. 10th, 12th படித்திருந்தால் போதும்.. எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
சென்னை: மாநில காப்பீட்டு நிறுவனம் (ESIC) பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேல் பிரிவு கிளார்க் (UDC), ஸ்டெனோகிராபர் (Steno) மற்றும் மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (MTS) பணிகளில் 3800-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் உள்ளன.
தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேல் பிரிவு எழுத்தர் (UDC) பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் டிகிரி முடித்திருக்க வேண்டும். ஸ்டெனோகிராபர் (ஸ்டெனோ) பதவிக்கு விண்ணப்பிக்க 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்துடன் ஆங்கிலம், ஹிந்தியில் டைப்பிங் வேகம் இருக்க வேண்டும்.

மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (MTS) பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் www.esic.nic.in என்ற இணையதளத்தில் 15.02.2022 என்ற தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

முதன்மைத் தேர்வு மற்றும் கணினித் திறன் தேர்வு ஆகியவற்றில் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படுவர்களுக்கு பணிகளுக்கேற்ப மாதம் ரூ.18,000 முதல் ரூ. 81,100 வரை சம்பளம் வழங்கப்படும். பணியிட விவரம் உள்ளிட்ட மேலும் விவரங்களை www.esic.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications