மாத ஊதியம் ரூ.81,000.. இந்தோ-திபெத் படையில் குவிந்திருக்கும் வேலை.. பெண்களும் விண்ணப்பிக்கலாம்
டெல்லி: மத்திய அரசின் இந்தோ திபெத் படையில் ஆண்கள்-பெண்கள் என தனித்தனியே ஹெட்கான்ஸ்டபிள், கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பபட உள்ளது. 10, பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பம் செய்வதன் மூலம் மாதம் அதிகபட்சமாக ரூ.81,100 வரை சம்பளம் கிடைக்கும்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்பு படைகளில் ஒன்று இந்தோ-திபெத் போலீஸ் படை(ஐடிபிபி அல்லது ITBP). இது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் இந்தோ-திபெத் பாதுகாப்பு படையில் ஏராளமான பணியிடங்கள் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. அதன் முக்கிய விபரங்கள் வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?
இந்தோ திபெத் பாதுகாப்பு படையில் மொத்தம் 519 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஆண்களும், பெண்களும் விண்ணப்பம் செய்யலாம். ஹெட்கான்ஸ்டபிள் மற்றும் கான்ஸ்டபிள் என 2 பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடக்கிறது. அதன்படி ஹெட்கான்ஸ்டபிள் (டெலிகம்யூனிகேசன்) பிரிவில் 126, கான்ஸ்டபிள் (டெலிகம்யூனிகேசன்) பிரிவில் 167, கான்ஸ்டபிள் (மோட்டார் மெக்கானிக்) 128, ஹெட்கான்ஸ்டபிள் (மோட்டார் மெக்கானிக்) 58, , ஹெட் கான்ஸ்டபிள் (Dresser Veterinary) 40 என மொத்தம் 519 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வி தகுதி என்ன?
ஹெட்கான்ஸ்டபிள் (Dresser Veterinary) பணிக்கு 12ம் வகுப்பு அல்லது நிகரான படிப்பை மடித்து பாரா வெட்னரி கோர்ஸ் அல்லது டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒரு ஆண்டு சான்றிதழ் படிப்பான Veterinary Therapeutic or Livestock Management படிப்பை முடித்திருக்க வேண்டும். ஹெட்கான்ஸ்டபிள் (மோட்டார் மெக்கானிக்) பணிக்கு 10 அல்லது பிளஸ் 2 முடித்திருப்பதோடு பணி தொடர்பான ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும். கான்ஸ்டபிள் (மோட்டார் மெக்கானிக்) பணிக்கு 10ம் வகுப்புடன் தொடர்புடைய ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும். ஹெட்கான்ஸ்டபிள் (டெலிகம்யூனிகேசன்) படிப்புக்கு பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல், கணிதம் உள்ள குரூப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இல்லாவிட்டால் 10 பாஸ் செய்து எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் அல்லது கம்ப்யூட்டர் தொடர்பான ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டு்ம. கான்ஸ்டபிள் (டெலிகம்யூனிகேசன்) பணிக்கு 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

மாத சம்பளம் என்ன?
ஹெட்கான்ஸ்டபிள் பணிக்கு மாத சம்பளமாக குறைந்தபட்சம் மாதம் ரூ.25,500 வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.81,100 வரை கிடைக்கும்.
கான்ஸ்டபிள் பணிக்கு குறைந்தபட்ச மாத சம்பளமாக ரூ.21,700 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்ச சம்பளமாக மாதம் ரூ.69,100 வரை வழங்கப்பட உள்ளது.

வயது வரம்பு என்ன?
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் குறைந்தபட்சம் 18 வயதும் அதிகபட்சம் 25 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது தளர்வுகள் இந்த பணிகளுக்கு பொருந்தும். விண்ணப்பத்தாரர்கள் எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு Physical Standard Test or PST), உடல் திறன் தேர்வு (Physical Effciency Test or PET) மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிப்பது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைனில் recruitment.itbpolice.nic.in உரிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப ககட்டணமாக ரூ.100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. இதில் ஹெட்கான்டபிள் (Dresser Veterinary) பணிக்கு வரும் 17 ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். மோட்டார் மெக்கானிக் பிரிவு பணிக்கு நவம்பர் 27 ம் தேதிக்குள்ளும், டெலிகம்யூனிகேசன் பணிக்கு நவம்பர் 30ம் தேதிக்குள்ளும் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
ஹெட்கான்ஸ்டபிள்- கான்ஸ்டபிள் (டெலிகம்யூனிகேசன்) அறிவிப்பை காண Click Here
ஹெட்கான்ஸ்டபிள்- கான்ஸ்டபிள் (மோட்டார் மெக்கானிக் ) அறிவிப்பை காண Click Here
ஹெட்கான்ஸ்டபிள் (Dresser Veterinary )அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications