டிகிரி முடித்தாலே போதும்.. கையில் ரூ.81,100 சம்பளத்தில் வேலை.. அழைக்கும் இஸ்ரோ.. சூப்பர் வாய்ப்பு
சென்னை: இஸ்ரோ நிறுவனங்களில் காலியாக உள்ள 526 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மத்திய அரசின் விண்வெளித்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இந்திய விண்வெளி ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது. இது பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இதன் கட்டுப்பாட்டில் நிறைய நிறுவனங்கள் உள்ளன.
இந்த நிறுவனங்கள் இந்தியாவின் பல்வேறு இடங்களில் அமைந்துள்ளது. இந்நிலையில் தான் இஸ்ரோ சார்பில் காலியாக பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் பல்வேறு முக்கிய விபரங்கள் வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?
இஸ்ரோவில் மொத்தம் 526 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி Assistant பணிக்கு 339 பேர், Junior Personal Assisatant பணிக்கு 153 பேர், UDC பணிக்கு 16 பேர், Stenographer பணிக்கு 14 பேர், Assistant (Autonomous Institutions under departnment of Space) பணிக்கு 3 பேர், Jr personal Assistant (Autonomous Institutions under departnment of Space) பணிக்கு ஒருவர் என மொத்தம் 526 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வி தகுதி என்ன?
Assistant/UDC பணிக்கு விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பை 60 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். Junior Personal Assistant/ stenographer பணிக்கு விண்ணப்பம் செய்வோர் டிகிரி படிப்பை 60 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் டிப்ளமோ பிரிவில் Commercial/Secretarial Practice and Steno and Typing முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு என்ன?
விண்ணப்பம் செய்ய விரும்புபவர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆக இருக்க வேண்டும். அதிகபட்சமாக 28 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பானது 2023 ஜனவரி 9 ம் தேதி அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். எஸ்சி, எஸ்டி உள்பட பிற பிரிவினருக்கு அரசு விதிகளின் படி வயது தளர்வு உண்டு.

மாத சம்பளம் என்ன?
விண்ணப்பம் செய்பவர்கள் எழுத்து தேர்வு, Skill Test/Computer Literacy Test/Stenography Test, சான்றிதழ்கள் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூ, இஎஸ்எம், பெண்களுக்கு கட்டணம் எதுவும் கிடையாது. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.25,500 ஆயிரம் முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் 2023 ஜனவரி மாதம் 9 ம் தேதிக்குள் ஆன்லைனில் Click Here விண்ணப்பம் செய்ய வேண்டும்
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல Click Here












Click it and Unblock the Notifications