பாரத ஸ்டேட் வங்கியில் வேலை.. என்னென்ன பணியிடங்கள், யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. விவரம் உள்ளே
மும்பை: பாரத ஸ்டேட் வங்கியில் பல்வேறு பணியிடங்களுக்கு முறைப்பட்ட மற்றும் ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. துறை வல்லுநர் பணிநிலைப் பிரிவு அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளார்கள்.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் செப்டம்பர் 2ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
முறைப்பட்ட மற்றும் ஒப்பந்த அடிப்படையில் துறை வல்லுநகர் பணிநிலைப்பிரிவு அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளார்கள். கீழ்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி விவரங்கள்
மொத்த காலியிடங்கள்: 69 பணியிடங்கள்
மண்டல பாதுகாப்பு வங்கியியல் மேலாளர் (01 இடங்கள்) (ஒப்பந்த அடிப்படையில் தேர்வு)
உதவி மேலாளர் (சந்தைபடுத்துதல் மற்றும் தொடர்பு) (04 இடங்கள்) முறைப்பட்ட ரீதியில் தேர்வு செய்யப்படுவார்கள்.
உதவி மேலாளர் பொறியாளர் (சிவில்) (36இடங்கள்) முறைப்பட்ட ரீதியில் தேர்வு செய்யப்படுவார்கள்.
உதவி மேலாளர் பொறியாளர் (எலக்ட்ரிக்கல்) (10 இடங்கள்) முறைப்பட்ட ரீதியில் தேர்வு செய்யப்படுவார்கள்.
துணை மேலாளர் (வேளாண்துறை வல்லுநர்) (10 இடங்கள்) முறைப்பட்ட ரீதியில் தேர்வு செய்யப்படுவார்கள்.
உறவுமுறை மேலாளர் (ஆன்லைன் சந்தை இடம்) (06 இடங்கள்) முறைப்பட்ட ரீதியில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விளைபொருள் மேலாளர் (ஆன்லைன் சந்தை இடம்) (02 இடங்கள்) முறைப்பட்ட ரீதியில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விவரங்கள்
ஆன்லைனில் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான மற்றும் ஆன்லைனில் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான இணைப்புடன் தேவையான தகுதி (கல்வி, வயது, அனுபவம் முந்தைய பணி விவரங்கள் ஆகியவை) தேவையான கட்டணங்கள் மற்றும் பிற விவரங்கள், சம்பந்தப்பட்ட விரிவான விவரங்களை https://bank.sbi/web/careers அல்லது https://www.sbi.co.in/web/careers என்ற இணைதள முகவரியில் அறியலாம்.

லிங்கில் பாருங்கள்
ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விளம்பரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த விளம்பரங்களை கிளிக் செய்தால் கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை அறிய முடியும். கையோடு https://bank.sbi/web/careers அல்லது https://www.sbi.co.in/web/careers லிங்கில் சென்று விண்ணப்பிக்கவும் முடியும்.

விண்ணப்பம்
விண்ணப்பிக்கும் முன்னரும், கட்டணம் செலுத்தும் முன்னரும் விரிவான விளம்பரங்களை படித்து தங்கள் தகுதி மற்றும் பிற விவரங்களை உறுதி செய்து கொள்ளுமாறு விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆன்லைனில் விண்ணப்பங்கள் பதிவு செய்ய மற்றும் கட்டணம் செலுத்த வேண்டியதேதி 13.8,2021 லிருந்து 02,09,2021வரை செலுத்தலாம்.

கவனம்
ஏதேனும் சந்தேகங்களுக்கு வங்கி வலைதளத்திலுள்ள contact usஐ கிளிக் செய்து post your query என்ற இணைப்பின் மூலம் எங்களுக்கு ( https://bank.sbi/web/careers/post-your-query ) எழுதவும். இவ்வாறு எஸ்பிஐ வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications