Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரூப் 1 தேர்வில் 'அந்த ஆறு கேள்விகள்'.. டிஎன்பிஎஸ்சிக்கு எதிராக வழக்கு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையைச் சேர்ந்த கண்ணன், குரூப்-1 தேர்வில் தமிழில் கேள்விகளை மொழி பெயர்த்ததில் குளறுபடி நடந்துள்ளதாக வழக்கு தொடர்ந்தார். மொழிபெயர்க்கப்பட்ட கேள்விகள் தவறாக இருக்கும்பட்சத்தில், ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்விகளே செல்லுபடியானவை என்பதால் வழக்கு தொடர்ந்துள்ளார், இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, டிஎன்பிஎஸ்சி செயலாளர் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

90 காலிப்பணியிடங்களுக்கான குரூப்-1 முதல் நிலைத் தேர்வு கடந்த மாதம் நடந்து முடிந்தது. 300 மதிப்பெண்கள் கொண்ட 200 கேள்விகள் இடம் பெற்றிருந்தன. தவறான விடைக்கு மதிப்பெண் குறைவு இல்லை என்பதுடன் கேள்விக்கான விடைகளில் 'தெரியவில்லை' என்கிற வாய்ப்பும் வழங்கப்பட்டு இருந்தது. அறிவியல், சுற்றுச்சூழல், கணிதம், வரலாறு, இலக்கியம், அரசியல், ஆன்மிகம் அரசமைப்புச் சட்டம், நடப்பு நிகழ்வுகள் உள்ளிட்ட எல்லா பிரிவுகளில் இருந்தும் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது.

jobs TNPSC Group 1 1

இந்த முறை தமிழ்நாடு அரசின் புதுமைப்பெண் திட்டம், காலை உணவுத் திட்டம், தமிழ்நாட்டின் சுகாதாரக் குறியீடு, டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு உதவி, கோவிட் 19-க்குப் பிறகு தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டம் தொடர்பான கேள்விகள் இடம் பெற்றிருந்தன. இந்த கேள்வித்தாளில் ஒரு கேள்வியில் தமிழில் 'தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்' என்று இருந்தது. ஆங்கிலத்தில் தெற்கு ஆசியா (சவுத் ஆசியா) என்று தரப்பட்டு இருந்தது. வினாத்தாளில் பல இடங்களில் ஆங்கில வடிவத்தில் ஏராளமான பிழைகள் இருந்தது என்றும் தமிழிலும் சில இடங்களில் பிழைகள் இருந்ததாகவும் தேர்வர்கள் அப்போது குற்றம்சாட்டினார்கள்.

இந்த விவகாரம் தொடர்பாக மதுரை சர்வயேர் காலனியை சேர்ந்த கண்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், கண்ணன் ஆகிய நான் எம்.டெக். முடித்து உள்ளேன். கடந்த மார்ச் மாதம் 90 காலிப்பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. அதற்கு நானும் விண்ணப்பித்து இருந்தேன். கடந்த மாதம் முதல்நிலை தேர்வு நடந்தது. பின்னர் கடந்த 23-ந்தேதி, அந்த தேர்வின் தற்காலிக விடைக்குறிப்புகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

இதில் ஏதேனும் ஆட்சேபனை இருப்பின் 7 நாட்களுக்குள் உரிய ஆதாரங்களுடன் புகார் தெரிவிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கேள்விகளை மொழிபெயர்த்ததில் ஏற்பட்டு உள்ள தவறுகளை புகாராக தெரிவிக்க எந்த வாய்ப்பும் டிஎன்பிஎஸ்சி தரப்பில் அளிக்கப்படவில்லை..குறிப்பாக சொல்வது என்றால், ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட பல கேள்விகள் தவறானவையாக இருந்தன. ஆனால் மொழிபெயர்க்கப்பட்ட கேள்விகள் தவறாக இருக்கும்பட்சத்தில், ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்விகளே செல்லுபடியானவை என டிஎன்பிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அப்படியென்றால் டிஎன்பிஎஸ்சி சார்பில் தமிழில் எதற்காக தேர்வு நடத்தப்படுகிறது?

தற்போது வெளியாகி உள்ள தற்காலிக விடைக்குறிப்பின்படி 186 மதிப்பெண்கள் எனக்கு கிடைக்கும். ஆனால் தவறான 6 கேள்விகளுக்கும் உரிய மதிப்பெண் வழங்கும்பட்சத்தில் 195 மதிப்பெண்கள் பெற்று, இந்த முதல்நிலை தேர்வில் நான் தேர்ச்சி பெறும் வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் நான் புகார் அளித்தேன். ஆனால் எந்த பலனும் இல்லை. எனவே குரூப்-1 தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும். எனவே குறிப்பிட்ட ஆறு கேள்விகளுக்கும் சலுகை மதிப்பெண் வழங்க உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மற்றும் உயர்கல்வித்துறை பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை வருகிற செப்டம்பர் 4-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+