கைநிறைய சம்பளம்.. பாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு.. மதுரை, கோவையில் பணி செய்யலாம்! விபரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கோவை, மதுரை உள்பட இந்தியா முழுவதும் காலியாக உள்ள துணை பாஸ்போர்ட் அதிகாரி பணியிடம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.67,700 கிடைக்கும். அதிகபட்சமாக ரூ.2 லட்சத்து 8 ஆயிரத்து 700 வரை கிடைக்கும்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் பாஸ்போர்ட் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் பாஸ்போர்ட் அலுவலகத்தில் உள்ள காலி பணியிடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி தமிழ்நாட்டில் மதுரை, கோவையிலும் காலியிடம் உள்ளது. இந்த பணி தொடர்பான முக்கிய விபரங்கள் வருமாறு:

 காலியிடங்கள் எவ்வளவு?

காலியிடங்கள் எவ்வளவு?

பாஸ்போர்ட் பிரிவில் துணை பாஸ்போர்ட் அதிகாரி (Deputy Passport Officer)பிரிவில் ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. மொத்தம் 8 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதன்படி பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் பீகார் மாநிலம் பாட்னா, உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத், லக்னோ, குஜராத் மாநிலம் சண்டிகர், அமதாபாத், தமிழ்நாட்டில் கோவை, மதுரை, ஆந்திராவில் விஜயவாடா பகுதிகளில் பணியமர்த்தப்பட உள்ளனர்.

 மாத சம்பளம் எவ்வளவு?

மாத சம்பளம் எவ்வளவு?

மத்திய பாஸ்போர்ட் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் பாஸ்போர்ட் அலுவலகங்களில் துணை பாஸ்போர்ட் அதிகாரி பணியிடம் நிரப்பபப்பட உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக குறைந்தபட்சமாக ரூ.67,700 கிடைக்கும். அதிகபட்சமாக ரூ.2 லட்சத்து 8 ஆயிரத்து 700 வரை கிடைக்கும்.

 விண்ணப்பிக்க தகுதி என்ன?

விண்ணப்பிக்க தகுதி என்ன?

பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் மத்திய அரசு துறையில் ஏதேனும் பிரிவில் பணியாற்றி வர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

 விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பம் செய்பவர்கள் நேர்க்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப கட்டணம் எதுவும் இல்லை. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆப்லைன் முறையில் டிசம்பர் 29ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வது பற்றி விபரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல Click Here

பணி தொடர்பான அறிவிப்பை காண Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+