ரூ.30,000 சம்பளம்.. மத்திய மின்சாரத்துறை நிறுவனத்தில் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு.. நல்ல வாய்ப்பு
டெல்லி: மத்திய அரசின் மின்சாரத்துறை சார்ந்த நிறுவனத்தில் ரூ.30 ஆயிரம் சம்பளத்தில் ஏராளமான பணியிடங்களை நிரப்ப முடிவு செய்து அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய மின்சாரத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட்(Power Grid Corporation Of India Limiter or PGCIL) எனும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்தியாவின் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 50 சதவீதம் இந்த நிறுவனத்தின் வழியாக தான் பிற மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டு வருகிறது. இந் நிறுவனத்தில் தற்போது வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன் விபரம் வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் மொத்தம் 5 பிரிவுகளில் 800 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி Field Engineer (EE) பிரிவில் 50 பேர், Field Engineer (ECE), Field Engineer (IT) பிரிவுகளில் தலா 15 பேர், Field Supervisor (Electrical) பிரிவில் 480 பேர், Field Supervisor (ECE) பிரிவில் 240 பேர் என மொத்தம் 800 பேர் பணியமர்த்தப்பட உள்ளனர்.

கல்வி தகுதி என்ன?
Field Engineer பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் பிஇ/பிடெக் படிப்பில் எலக்ட்ரிக்கல், இசிஇ, கம்யூட்டர் சயின்ஸ், ஐடி, படிப்பை முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் பிஎஸ்சி இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். Field Supervisor பணிக்கு எலக்ட்ரிக்கல் மற்றும் இசிஇ பிரிவில் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு-சம்பளம் என்ன?
விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சமாக 29 வயதுக்குள் இருக்க வேண்டும். வேலைக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.23 ஆயிரமும், அதிகபட்சமாக ரூ.30 ஆயிரமும் மாத சம்பளமாக வழங்கப்படும். விண்ணப்பம் செய்பவர்கள் எழுத்து தேர்வு, நேர்க்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்து பரிசோதனை மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பம் செய்வது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைனில் டிசம்பர் மாதம் 11ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக Field Engineer பணிக்கு ரூ.400, Field Supervisor பணிக்கு ரூ.300 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிஎச், இஎஸ்எம் பிரிவினருக்கு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications