தேர்வே கிடையாது.. ரயில்வேயில் ரூ.1.20 லட்சத்தில் வேலை.. தேதி முடியப்போகுது.. விண்ணப்பிக்கலாம் வாங்க
டெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ரயில்டெல் நிறுவனத்தில் எக்ஸ்பெட் பணியிடங்கள் தேர்வு இன்றி நிரப்பப்பட உள்ளது. இதன்மூலம் மாத சம்பளம் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.1.20 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் ரயில் டெல் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் (Railtel Corporation of India Limited) செயல்பட்டு வருகிறது. அதாவது மத்திய ரயில்வே அமைச்சகத்தில் துணை நிறுவனம் தான் இது.
இந்த நிறுவனத்தின் முக்கிய பணி என்பது பிராட்பேண்ட் மற்றும் விபிஎன் சேவைகளை வழங்குவது தான். நாடு முழுவதும் பிராட்பேண்ட், டெலிகாம், நெட்வொர்க்கை உருவாக்கி ரயில்வேயின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு அமைப்பை நவீனமயமாக்கும் வகையில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

காலியிடங்கள் எவ்வளவு?
இந்நிலையில் தான் ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இந்த அறிவிப்பின் முக்கிய விபரங்களை தொகுத்து வழங்க உள்ளோம். அதன்படி இந்த நிறுவனத்தில் நெட்வொர்க் எக்ஸ்பெர்ட் பிரிவில் 2, சர்வர் எக்ஸ்பெர்ட் பிரிவில் 2, ஸ்டோரேஜ் அட்மினிஸ்ட்ரேட்டர் பிரிவில் 2, டேட்டா பேஸ் அட்மினிஸ்ட்ரேட்டர் பிரிவில் 2, சைபர் செக்யூரிட்டி எக்ஸ்பெர்ட் பிரிவில் 3, இஎம்எஸ்/என்எம்எஸ் எக்ஸ்பெர்ட் பிரிவி்ல 2, Cloud and Virtualization expert பிரிவில் 2 என மொத்தம் 15 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

சம்பளம்- வயது வரம்பு என்ன?
இந்த பணிகள் அனைத்து தற்காலிகமானது தான். இதனால் நல்ல சம்பளம் வழங்கப்பட உள்ளது. அதன்படி மாத சம்பளமாக ரூ.30 ஆயிரம் முதல் ரூ.1.20 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் அதிகபட்சமாக 50 வயதுக்குள் இருக்க வேண்டும். வயதானது 15.12.2022ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.

கல்வித்தகுதி என்ன?
தகவல் தொழில்நுட்ப துறையில் பணி நியமனம் செய்யப்படுவதால் அதுசார்ந்த வகையில் விண்ணப்பதாரர்கள் பிஇ, பிடெக் அல்லது எம்சிஏ படிப்பை முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அதற்கு நிகரான வகையில் தனியாக படிப்பை முடித்து சான்றிதழ்கள் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://www.railtelindia.com/எனும் இணையதளம் சென்று விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த பிறகு [email protected] மெயிலில் விண்ணப்பம் செய்ய வேண்டும். நேர்க்காணல் நவம்பர் 21 மற்றும் 22ம் தேதிகளில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. Railtel Corporation of India Limited, Territory Manager Bhopal,Plot no. 17, Raghunath Nagar near Shahpura thana,Bawadiyakalan, Bhopal (M.P). Pin- 462039 என்ற முகவரியில் நேர்க்காணல் நடைபெற உள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
ஆன்லைனில் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய Click Here
-
IT Jobs: சென்னை - பெங்களூர் உள்பட 3 இடங்களில் நாளை இண்டர்வியூ.. TCS-யில் காலிப்பணியிடங்கள் -
IT JOBS: 2026ல் படிப்பை முடித்தோருக்கு ஜாக்பாட்.. அலோவன்ஸ் + சம்பளத்துடன் வேலை தரும் Cognizant -
இந்திய நர்ஸை.. ஆண்ட்டி என்று அழைத்த நபர்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு! -
இந்தியன் வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை.. 350 பணியிடங்கள்.. பிஇ முடித்தவங்களுக்கு ஜாக்பாட் -
Group 4: குரூப் 4 தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. 3-ம் கட்ட கலந்தாய்வு எப்போது? -
CRPF Job: மத்திய ரிசர்வ் காவல் படையில் 9,195 கான்ஸ்டபிள் பணியிடங்கள்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! 69 ஆயிரம் சம்பளம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications