For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக காவல்துறையில் வேலை.. 10,906 காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் உள்ளிட்ட 10,906 காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.tnusrb.tn.gov.in/about_us.htm என்ற இணையதளத்தில் செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 26 வரை விண்ணப்பிக்கலாம். 10,906 பணியிடங்களுக்கு டிசம்பர் 13ல் எழுத்துத்தேர்வு நடக்கும் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு காவல் துறை. சிறைத்துறை மற்றும் தீயணைப்ப [ மற்றும் மீட்புப் பணிகள் துறைகளில் காலியாகவுள்ள 10.906 + 72 (Bl) காலிப்பணியிடங்களை பொதுத் தேர்வு மு்லம் நிரப்பிடுவதற்கான விளம்பரம் 17,09,2020 அன்று நாளிதழ்களில்வெளியிடப்பட்டுள்ளது.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசின் விளம்பரத்தில் உள்ள விதிமுறைகள் மற்றும் விளக்கக் குறிப்புகளை படித்த பின்னர் இணையவழி விண்ணப்பத்தில் கோரியுள்ள விபரங்களை சாரியாக நிரப்பி. அத்துடன் தேவையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

புரட்சியின் வித்தாய் விளைந்து சமூகத்தின் மாற்றத்திற்கு காரணியாய் கனிந்த பெரியார்- கமல்ஹாசன் புகழாரம்புரட்சியின் வித்தாய் விளைந்து சமூகத்தின் மாற்றத்திற்கு காரணியாய் கனிந்த பெரியார்- கமல்ஹாசன் புகழாரம்

மொத்த விவரங்கள்

மொத்த விவரங்கள்

காலிப்பணியிடங்களின் மொத்த எண்ணிக்கை 10906

துரைவாரியான காலிப்பணியிடங்கள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • காவல்துறை: இரண்டாம் நிலை காவலர் (மாவட்ட/மாநகர ஆயுதப்படை) 3784 ( இதில் ஆண்கள் 685, பெண்கள் மற்றும் திருநங்ககைள் 3099.
  • இரண்டாம் நிலை காவலர் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 6545 (ஆண்கள் மட்டுமே)
  • சிறைத்துறை : இரண்டாம் நிலை சிறைக்காவலர் மொத்தம் 119 பணியிடங்கள், இதில் ஆண்கள் 112, பெண்கள் மற்றும் திருநங்கைகள் 7.
  • தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை: தீயணைப்பாளர் 456 (ஆண்கள் மட்டும்).
  • இது தவிர 72 பின்னடைவு காலிப்பணியிடங்கள் (ஆயுதப்படை 62 (பெண்கள்) மற்றும் சிறைத்துறை - 10 (பெண்கள்).
சம்பளம் எவ்வளவு

சம்பளம் எவ்வளவு

இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் உள்ளிட்ட 10,906 காவலர் பணியிடங்களுக்கும் ஊதிய விகிதம் ரூ.18200-52900 ஆகும்.

10 ம் வகுப்பு தேர்ச்சி

10 ம் வகுப்பு தேர்ச்சி


10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் விண்ணப்பதாரர் 10ம் வகுப்பில் தமிழை ஒரு மொழிப் பாடமாக படித்திருக்க வேண்டும். இல்லையெனில். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலை தமிழ் தேர்வில் பணியில் சேர்ந்த நாளிலிருந்து இரண்டாண்டுகளுக்குள் தேர்ச்சி பெற வேண்டும்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாமல் அதற்கு மேற்பட்ட கல்வித்தகுதியினைப் பெற்றிருந்தாலும்விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்களாவர்,

எத்தனை வயது வரை

எத்தனை வயது வரை

அனைத்து பதவிகளுக்கும் விண்ணப்பிப்போருக்கு இருக்க வேண்டிய வயது வரம்பு:

பொதுப் போட்டி: 01,07,2020 அன்று 18 வயது நிறைவுற்றவராகவும்.24 வயதிற்கு மேற்படாதவராக இருக்க வேண்டும், (01,07,1996லிருந்து 01,07,2002க்குள் பிறந்திருக்க வேண்டும்).
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்) , மிகவும் பிற்படுத்தப்பட்டவகுப்பினர் மற்றும் சீர்மரபினர் 01,07,2020 அன்று 18 வயது நிறைவுற்றவராகவும்.26 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும் (01,07,1994 லிருந்து 01,07,2002க்குள் பிறந்திருக்க வேண்டும்).
ஆதிதிராவிடர் , ஆதிதிராவிடர் (அருந்ததியர்) , பழங்குடியினர் 01,07,2020 அன்று 18 வயது நிறைவுற்றவராகவும்.29 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்,
(01,07,1991 லிருந்து 01,07,2002க்குள் பிறந்திருக்க வேண்டும்).

தமிழ் வழி கல்வி

தமிழ் வழி கல்வி

20 சதவீதம் பத்தாம் வகுப்பில் தமிழ் பயிற்று மொழியில் பயின்றவர்களுக்கான முன்னுரிமை அளிக்கப்படும்.) இத்தேர்வில் கலந்துகொள்ளும் விண்ணப்பதாரர்கள். இத்தேர்வுக்கான கல்வித்தகுதியான 10 ம் வகுப்பினை தமிழ்வழியில் படித்து தேர்ச்சி பெற்றிருந்தால் அவர்களுக்கு இறுதி தற்காலிகத் தேர்வின் போது மட்டுமே (Final Provisional Selection) வகுப்ப வாரியாக 20! சதவீதம் முன்னுhpமை வழங்;கப்படும், எழுத்துத் தேர்வு மற்றும் உடற்திறன் போட்டிகளின் போது 20 சதவீத முன்னுரிpமை பின்பற்றப்படமாட்டாது, விண்ணப்பதாராரின் 10ம் வகுப்பு பள்ளி மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate) , பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில் பயிற்று மொழி (Medium of Instruction) "தமிழ்" என இருக்க வேண்டும், அவ்வாறு இல்லாதிருந்தால. விண்ணப்பதாரர் 10ஆம் வகுப்பில் பயின்ற கல்வி நிறுவனத்திலிருந்து தமிழ் பயிற்று மொழியில் படித்துள்ளார் என்பதற்கான சான்றிதழைப் பெற்று இணையவழி விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கவேண்டும். விண்ணப்பதாரர் பத்தாம் வகுப்பில் தமிழ்வழியில் பயின்றதற்கான சான்றிதழை இணைக்காமல் மேல்நிலை வகுப்பினை அல்லது பட்டப் படிப்பினை தமிழ்வழியில் கற்றதற்கான சான்றிதழை சமர்பித்தால் அச்சான்று 20 சதவீதம் முன்னுரிமை பிரிவில் ஏற்றுக்கொள்ளப்படாது.

 எப்படி தேர்வு மதிப்பெண்

எப்படி தேர்வு மதிப்பெண்


எழுத்துத் தேர்வு 80 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வில் பொது அறிவு மற்றும் உளவியல் தொடர்பான கேள்விகள் கேட்கப்படும்,
உடற்கூறு அளத்தல்: உடற்கூறு அளத்தல் தகுதித் தேர்வேயாகும். எனவே இதற்கு மதிப்பெண் கிடையாது. உடல்தகுதித் தேர்வுக்கும் மதிப்பெண் இல்லை. ஏனெனில்
உடல்தகுதித் தேர்வு தகுதித் தேர்வேயாகும். உடல்திறன் போட்டிகள்: 15 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
சிறப்பு மதிப்பெண்கள் : 5 மதிப்பெண்கள் ( விவரம் தேசிய மாணவர்படை சான்றிதழ் (ncc) 2 மதிப்பெண்கள். நாட்டு நலப்பணித் திட்டம் சான்றிதழ் (nss) 1 மதிப்பெண்.
விளையாட்டுச் சான்றிதழ் 2 மதிப்பெண்கள்).

ஓட்டம்

ஓட்டம்

உயரம்: ஆண்கள்
பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் 170 செமீ உயரம்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 167 செமீ உயரம்.
மார்பு அளவு 81 செமீ, விரிந்த நிலையில் 86 செமீ இருக்க வேண்டும்.
உயரம் பெண்கள்: பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் 159 செமீ உயரம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 157 செமீ உயரம்.
ஓட்டம்: ஆண்கள் 1500 மீட்டர் தூரத்தை 7 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும். பெண்கள் 400 மீட்டர் தூரத்தை 2 நிமிடம் 30 வினாடிகளில் ஓடி கடக்க வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது

எப்படி விண்ணப்பிப்பது

தகுதியும், ஆர்வமும் உள்ள இளைஞர்கள் மற்றும் பெண்கள் https://tnusrbonline.org/ என்ற இணையதளத்தில் செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 26 வரை விண்ணப்பிக்கலாம்
10,906 பணியிடங்களுக்கு டிசம்பர் 13ல் எழுத்துத்தேர்வு நடக்கும்: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்துள்ளது.

English summary
Tamil Nadu Uniformed Personnel Selection Board has announced. that 10,906 police posts in Tamil Nadu, including secondary police, secondary prison guards and firefighters, can be applied for online. You can apply online at www.tnusrbonline.org from September 26 to October 26. Written test for 10,906 posts will be held on December 13.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X