For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக வனத்துறையில் நல்ல வேலை.. மாதம் ரூ.56,000 முதல் ரூ.2.05 லட்சம் ஊதியம்.. டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் வனத்துறையில் காலியாக உள்ள உதவி வனக்காப்பாளர் பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.56,000 முதல் ரூ.2.05 லட்சம் வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

தமிழகத்தில் அரசு பணிகளுக்கான தேர்வுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தி வருகிறது. இந்த தேர்வாணையம் சார்பில் குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல்வேறு பதவிகளுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது.

இந்நிலையில் தான் டிஎன்பிஎஸ்சி சார்பில் வனத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு நேற்று வெளியானது. அந்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:

 காலியிடங்கள் எத்தனை?

காலியிடங்கள் எத்தனை?

டிஎன்பிஎஸ்சி சார்பில் Assistant Conservator எனும் பதவிக்கு ஆட்சேர்ப்பு நடத்தப்பட உள்ளது. மொத்தம் 9 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு தமிழ்நாட்டிலேயே பணி செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.

 மாத சம்பளம்-கல்வி தகுதி என்ன?

மாத சம்பளம்-கல்வி தகுதி என்ன?

இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.56 ஆயிரத்து 100 மாத சம்பளமாக வழங்கப்படும். அதிகபட்சமாக 2 லட்சத்து 5 ஆயிரத்து 700 வரை சம்பளம் கிடைக்கும். பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் பிஇ, பிடெக் அல்லது டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும்.

 வயது வரம்பு என்ன?

வயது வரம்பு என்ன?

மேலும் விண்ணப்பத்தாரர்கள் குறைந்தபட்சமாக 21 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 39 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பானது 01.07.2022 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கு அரசு விதிகளின் படி தளர்வுகள் உண்டு.

 விண்ணப்ப கட்டணம் எவ்வளவு?

விண்ணப்ப கட்டணம் எவ்வளவு?

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும். அதன்படி டிஎன்பிஎஸ்சி பதிவு கட்டணமாக ரூ.150, முதன்மை தேர்வுக்கு ரூ.100, மெயின் தேர்வுக்கு ரூ.200 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூ, கணவரை இழந்தவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

 விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பம் செய்வது எப்படி?

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்பவர்கள் முதன்மை தேர்வு, எழுத்து தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பம் செய்ய 2023 ஜனவரி மாதம் 12ம் தேதி கடைசி நாளாகும்.

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல Click Here

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

English summary
TNPSC has released a notification to fill the vacant posts of Assistant Conservator of Forests in Tamil Nadu. Candidates for this job will get a monthly salary of Rs.56,000 to Rs.2.05 lakh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X