காக்கிச்சட்டை போட ஆசையா? போலீஸ் வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிங்க

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காவலர் பணிக்கான தேர்வில் முதன் முறையாக ஆன்லைன் வாயிலாக விண்ணப்பம் சமர்ப்பிக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. விண்ணப்பதாரர்கள் இக்குழுமத்தின் இணையதளம் www.tnusrbonline.org வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

இது குறித்த சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு:

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம். காவல்துறையில் ஆயுதப்படையில் காலியாகவுள்ள 5538 இரண்டாம் நிலைக் காவலர்கள் (ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினம்).

TNUSRB Recruitment 2018: Apply 6140 Police Constable Grade II

சிறைத்துறையில் காலியாகவுள்ள 340 இரண்டாம் நிலை சிறைக்காவலர்கள் (ஆண் மற்றும் பெண்) மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் காலியாகவுள்ள 216 தீயணைப்போர் (ஆண்) மற்றும் 46 பின்னடைவு காலிப்பணியிடங்களும் சேர்த்து மொத்தமாக 6140 காலிப்பணியிடங்களை நிரப்பிடுவதற்கான விளம்பரம் வெளியிட்டுள்ளது.

இத்தேர்வில் முதன் முறையாக ஆன்லைன் வாயிலாக விண்ணப்பம் சமர்ப்பிக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. விண்ணப்பதாரர்கள் இக்குழுமத்தின் இணையதளம் www.tnusrbonline.org வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 2018 ஜனவரி 27.

இக்குழுமத்தில் ஒரு உதவி மையம் காலை 09,00 மணி முதல் மாலை 06,00 மணி வரை செயல்படும்.
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கு ஏதேனும் உதவி தேவையனில் விண்ணப்பதாரர்கள் உதவிக்கு தொலைபேசி எண்கள் 044-40016200, 044-28413658, 9499008445, 9176243899 மற்றும் 9789035725- எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இதேபோன்ற. உதவி மையம் மாநகரத்திலுள்ள காவல் ஆணையாளர் அலுவலகங்களிலும் மற்றும் மாவட்டங்களிலுள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களிலும் செயல்பட்டு கொண்டிருக்கும்.
இவ்வாறு சீருடை பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

காக்கிச்சட்டை போட ஆசைப்படுபவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamil Nadu Police 6140 Posts Recruitment 2018. Tamil Nadu Police Constable Grade Recruitment 2018. The Tamil Nadu Uniformed Services Recruitment Board (TNUSRB) has released a notifiation for the recruitment of 6140 Police Constable Grade II, Jail Warder Grade II & Fireman Posts.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X