எங்கள் கணிப்பு தவறாகவே இருக்கட்டும்... இந்தியா வேகமாக வளரட்டும்! - ஐஎம்எப்
வாஷிங்டன்: இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்த எங்கள் கணிப்பு தவறாகவே இருக்கட்டும்.. இந்தியா இன்னும் வேகமாக வளரட்டும் என என்று சர்வதேச நிதி அமைப்பு ஐஎம்எப் தெரிவித்துள்ளது.
சில தினங்களுக்கு முன் ஐஎம்எப் வெளியிட்ட முன்கணிப்பு அறிக்கையில், இந்தியப் பொருளாதாரம் இந்த ஆண்டு வெறும் 3.5 சதவீத வளர்ச்சியை மட்டுமே எட்டும் என்று கூறியிருந்தது.

இதனை இந்திய அரசும், திட்டக் கமிஷனும் நிராகரித்ததுடன், 5 சதவீதத்துக்கும் மேல் வளர்ச்சி இருக்கும் என கூறின.
இதைத் தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரமும் அமெரிக்க நிகழ்ச்சியொன்றில் பேசுகையில் 5.5 சதவீத வளர்ச்சி நிச்சம் என்றார்.
இந்த நிலையில் ஐஎம்எப்பின் ஆசியா பசிபிக் துறை இயக்குநர் அனூப் சிங் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அவரிடம் எந்த அடிப்படையில் இந்தியப் பொருளாதாரம் 3.5 சதவீத வளர்ச்சியை மட்டுமே எட்டும் என கணித்தது ஐஎம்எப் என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அனூப் சிங், "ஐஎம்எப் கணிப்பிலும் இந்தியாவின் விளக்கத்திலும் பெரிய மாறுபாடில்லை. சில காலாண்டுகளில் ஏற்படும் மாறுதல்கள் மற்றும் இந்தியாவின் பொருளாதார கொள்கைகளைப் பொருத்து இந்த வளர்ச்சி அமையும்.
இந்த மாதிரி கணிப்புகளின் போது சில மாறுபாடுகள் இருப்பது சகஜம். குறித்த காலகட்டத்தில் பண ஓட்டம் கட்டுப்படுத்தப்படும்.. வெளி சக்திகளின் பாதிப்புகள் இருக்கலாம். இதையெல்லாம் இந்தியா எந்த அளவு வேகமாக எதிர்கொள்கிறது என்பதுதான் விஷயமே.
இன்னும் சில காலாண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் தனது பழைய நிலைக்குத் திரும்பும் என ஐஎம்எப் நம்புகிறது. அப்போது 4.5 அல்லது 5 சதவீத வரை அதன் வளர்ச்சி இருக்கும். எங்கள் கணிப்பு தவறாகவே இருக்கட்டும். இந்தியா இன்னும் வேகமாக வளர்ந்தால் மகிழ்ச்சியே," என்றார்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications