பாண்டியா கொடுத்த சிக்னல்.. டிகே-வுக்கு ரோஹித் கொடுத்த முத்தம்.. இணையத்தை அசரடிக்கும் மீம்ஸ்!
சென்னை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் வெற்றிபெற்று இந்திய அணி கோப்பையை வென்றதை கொண்டாடும் வகையில், இந்திய ரசிகர்கள் மீம்ஸ் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளியிட்டு வருகின்றனர். அதில் சில மீம்ஸ்களை இப்போது பார்க்கலாம்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா தலா ஒரு வெற்றியை பெற்று தொடரை 1-1 என சமன் செய்தன. இந்த நிலையில் மூன்றாவது டி20 போட்டி ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இந்தியா வெற்றி
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்களை எடுத்தது. 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது. தொடக்கத்தில் தடுமாறினாலும், விராட் கோலி - சூர்யகுமார் யாதவ் கூட்டணியின் அபார ஆட்டத்தால் இந்திய அணி வெற்றிபெற்றது.

ரோஹித் கொடுத்த முத்தம்
இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் மீம்ஸ் வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக அக்சர் படேல் அடித்த ரன் அவுட்டின் போது, கேப்டன் ரோஹித் ஷர்மா விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக்கிற்கு முத்தம் கொடுத்து கொண்டாடிய புகைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. அதனை வைத்து நடப்பு வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களை வைத்து ரசிகர்கள் மீம் வெளியிட்டுள்ளனர்.

ஹர்திக் கொடுத்த சிக்னல்
அதேபோல் ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக தினேஷ் கார்த்திக் - ஹர்திக் கூட்டணி களத்தில் நின்றிருந்த போது பரபரப்பு ஏற்பட்டது. அதேபோல் நேற்று கடைசி நேரத்தில் பரபரப்பு ஏற்பட, ஹர்திக்கும் "எந்தப் பிரச்னையும் இல்லை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்பது போல் தலையை ஆட்டி டிகே-வுக்கு சிக்னல் கொடுத்தார். இவர்களுக்கு இதுதான் வேலை என்பது போல் ஹர்திக்கின் இரு புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்கள் மீம் வெளியிட்டு வருகின்றனர். இதுவும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

விராட் கோலி வீடியோ
அதேபோல் வெற்றிக்கு பின் விராட் கோலி - ரோஹித் ஷர்மா கட்டிபிடித்து அடித்துக்கொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வீடியோவை வைத்து ரசிகர்கள் நட்பு, குடும்ப செண்டிமெண்ட் பாடல்களை பின்னணியில் ஒலிக்கவிட்டு நெகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
-
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications