Gas Cylinder Memes.. தீ இல்லை, புகை இல்லை, ஒரு வேள்வி செய்கிறாய்.. 'இண்டக்ஷன்' மீம்ஸ்
சென்னை: இந்தியா முழுவதுமே சிலிண்டர் தட்டுப்பாடு எப்போது சரியாகும் என்பதே தெரியாத நிலை இருக்கிறது.எனவே உடனே மாற்று தீர்வுகள் தெரியாத நிலை நீடிக்கிறது. சென்னையில் பலரும் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக மின்சார அடுப்பு வாங்க அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.. அப்படி வாங்கிய நபர், மீம்ஸ் போட்டிருக்கிறார். தீ இல்லை.. புகை இல்லை.. ஒரு வேள்வி செய்கிறாய் என்று மீம்ஸ் போட்டிருக்கிறார்கள்.
சென்னையில் கடந்த சில நாட்களாக கேஸ் ஏஜென்சிகளின் வாசலில் மக்கள் தவம் கிடக்கிறார்கள்.. ஆனால் சிலிண்டர் உடனே கிடைத்தபாடில்லை... ஈரான் போர் பதற்றம் காரணமாகச் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விநியோகத் தடையால், இப்போது சமையல் கேஸ் சிலிண்டர் காணக்கிடைக்காத அரிய பொருளாகிவிட்டது.

"கேஸ் இல்லை... புகை இல்லை... ஒரு வேள்வி செய்கிறாய்!"
சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஓட்டல்களை மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட மக்கள் பலர், வேறு வழியின்றி 'இண்டக்ஷன் ஸ்டவ்' பக்கமாகத் தஞ்சமடைந்துள்ளனர். "விறகடுப்பு வேண்டாம், புகை வராது, சுத்தமாகச் சமைக்கலாம்" என்று விளம்பரம் பார்த்த ஓட்டல் உரிமையாளர்கள் பலர் இண்டக்ஷன் ஸ்டவ் வாங்கலாம் என்று ஆர்வம் காட்டுகிறார்கள். இது தொடர்பாக மீம்ஸ் ஒன்றை ஒரு நெட்டிசன் போட்டிருக்கிறார். அது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
உச்ச நேரக் கட்டணம்
தமிழக மின்சார வாரியம் நிர்ணயித்துள்ள 'டைம் ஆஃப் டே கட்டண முறைதான் இப்போது ஓட்டல் உரிமையாளர்களின் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது. அதிகாலை 6 மணி முதல் 10 மணி வரை இட்லி, தோசை ஊற்ற வேண்டும். அதேபோல் இரவு 6 மணி முதல் 10 மணி வரை பரோட்டா, பிரியாணி போட வேண்டும். சரியாக இந்த நேரத்தில்தான் மின்சார வாரியம் "பீக் ஹவர்" என்று சொல்லி கூடுதலாக 15% முதல் 25% வரை கட்டணத்தை வசூலிக்கிறது.
ஒரு பக்கம் சிலிண்டர் ஏஜென்சிக்காரர் "லோடு வரவில்லை" என்று கை விரிக்கிறார். மறுபக்கம் மின்சார மீட்டரோ 'இண்டக்ஷன் ஸ்டவ்' காரணமாக ராக்கெட் வேகத்தில் ஏறும் என்பதால் அந்த போக முடியாமல் ஓட்டல் உரிமையாளர்கள் தவிக்கிறார்கள். மின்கட்டணத்தை விடச் சிலிண்டர் விலையே மேல் என்று நினைத்தவர்களுக்கு, இப்போது அந்தச் சிலிண்டரும் கிடைக்கவில்லை என்பதுதான் சோகம். "பெரிய ஓட்டல்களுக்கு ஓகே, எங்க மாதிரி சின்ன ஓட்டல்கள் நிலைமை என்ன?" என்பதே பலரது கேள்வி. காலை உணவையும், இரவு உணவையும் நம்பி இருக்கும் சிறிய உணவகங்களுக்கு இந்த மின்கட்டண உயர்வு பெரும் சுமையாக உள்ளது. பொதுமக்களை பொறுத்தவரை மின்சார அடுப்பு வாங்கி சமாளிக்க முடியும். ஆனால் ஓட்டல்களால் சமாளிக்க முடியாது.

-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்?












Click it and Unblock the Notifications