For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி, ராம்குமார் தற்கொலை... பரபரப்புகளுக்கு மத்தியில் ‘புரட்டாசி’யை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: காவிரி பிரச்சினை, ராம்குமார் தற்கொலை என கடந்த பத்து தினங்களுக்கும் மேலாக தமிழகத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இது சமூக வலைதளப் பக்கங்களிலும் எதிரொலிக்கிறது.

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவது, போக்குவரத்து பாதிப்பு, ராம்குமார் நிஜமாகவே தற்கொலை தான் செய்து கொண்டாரா போன்றவை குறித்து காரசாரமான பதிவுகள் வெளியாகி வருகின்றன.

இது ஒருபுறம் இருக்க, திருவிழா நடந்தாலும் சரி, நடக்காட்டியும் சரி, எங்களுக்கு கச்சேரி வச்சே ஆகணும் என வருத்தப்படாத வாலிபர் சங்க உறுப்பினர்களாக சில நெட்டிசன்கள் புரட்டாசி மாதம் பிறந்து விட்டதை வைத்து மீம்ஸ் வெளியிட்டு வருகின்றனர்.

அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...

உங்க வீட்டுக்கு வரலாமா..?

உங்க வீட்டுக்கு வரலாமா..?

புரட்டாசி மாதம் ஆரம்பித்து விட்டதால், கறிக்காகவும், பிரியாணிக்காவும் சிலர் வீடு விட்டு வீடு மாறவும் திட்டமிட்டு வருகிறார்களாம்.

மே....

மே....

மற்ற மாதங்களில் நாம் ‘மே..' என ஆடுகளைச் சாப்பிட்டு ஜீரணம் செய்கிறோம். யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்ல. இங்கே ஆட்டிற்கு வந்துள்ளது. மே...

சிக்கன் போச்சே...

சிக்கன் போச்சே...

போக்கிரியில் வட போச்சே என வடிவேலு பீல் பண்ணியது போல், புரட்டாசியில் சிக்கன், மட்டன் போச்சே என பலர் புலம்பி வருகிறார்கள்.

இப்போதைக்கு இது தான்...

இப்போதைக்கு இது தான்...

புரட்டாசி மாதம் என்பதால் இதுவரை சிக்கனும், மட்டனும் சாப்பிட்டு வயிறு வளர்த்தவர்கள், இப்போது மற்றவர்கள் சாப்பிடுவதைப் பார்த்து எச்சில் வடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ப்ளீஸ், ப்ளீஸ் ஒரு வாட்டி...

ப்ளீஸ், ப்ளீஸ் ஒரு வாட்டி...

புரட்டாசி மாதம் பிறந்து விட்டது. இனி ஒரு மாதத்திற்கு பிரியாணி கிடைக்காது. அந்த ரியாக்‌ஷன் தான் இது.

ஸ்டிக்கர் போட்டு தான் ஒட்டணும்...

ஸ்டிக்கர் போட்டு தான் ஒட்டணும்...

தப்பித் தவறிக் கூட புரட்டாசி மாதத்தில் சிக்கன், மட்டன் சாப்பிட்டு விடக் கூடாது என நினைப்பவர்கள், இப்படித்தான் வாயை ஸ்டிக்கர் போட்டு ஓட்டிக் கொள்ள வேண்டும் போல.

English summary
These are some memes on puratasi month.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X