மாப்புள பெரிய இடமோ.... ஆமா, தக்காளி வியாபாரிங்கோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழகத்தில் வரத்து குறைவால் தக்காளியின் விலை கிலோ ஒன்று ரூ.100 என்ற நிலையிலேயே இருக்கும் நிலையில் அதை வைத்து உலா வரும் சில மீம்ஸ் உங்களுக்காக.

கடந்த ஒரு வாரமாக குடும்பத் தலைவிகள் மத்தியில் நிலவும் தலைப்புச் செய்தி தக்காளி விலை தான். வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியது போல ரூ.100க்கு ஏறிய ஒரு கிலோ தக்காளி விலை இறங்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது.

 எந்த வண்டி ஒசத்தி

எந்த வண்டி ஒசத்தி

இதை வைத்து நமது நெட்டிசன்கள் தட்டிவிட்டுள்ள சில மீம்ஸ் விலை உயர்வை மறந்து சிரிக்க வைக்கிறது. எப்போதுமே விலை உயர்ந்த வாகனம் என்றால் ஃபெராரியும்,பென்சும் போட்டி போடும் ஆனால் தக்காளியை அடுக்கி வைத்திருப்பவர் வண்டி தான் உண்மையிலேயே விலை உயர்வு என்று நிதர்சன நிலையை குறும்பாக சொல்கிறது இந்த மீம்.

 மாப்புள பெரிய இடமோ?

மாப்புள பெரிய இடமோ?

சகள பொண்ணுக்கு பாத்திருக்கிற மாப்பிளை பெரிய இடமான்னு பொண்ணோட சொந்தக்காரங்க கேட்க. ஆமாம் தக்காளி வியாபாரின்னு என்று அவர்களுக்கு பெருமை சேர்த்துள்ளது இந்த விலையுயர்வு என்கிற ரீதியில் அடித்து விட்டுள்ளார் நெட்டிசன் ஒருவர்.

 விலைய கேட்டாலே கண்ணுல தண்ணீ

விலைய கேட்டாலே கண்ணுல தண்ணீ

அம்மாவிற்கு வெங்காயத்தை உரித்தால் தான் தண்ணீர் வரும். ஆனால் இப்போது தக்காளி விலையை கேட்டாலே கண்ணுல தண்ணி விட்றாங்க என்று கலாய்க்கிறது இந்த மீம்.

1 Kg Tomato rs.80 and 1 Kg onion rs.60-Oneindia Tamil
 சமக பெரிய இடமோ

சமக பெரிய இடமோ

தங்கம் போல தக்காளியை பார்த்து வாங்கி பயன்படுத்துகின்றனர் இல்லத்தரசிகள் மற்றும் உணவு விடுதிகள். இந்நிலையில் கடையில் போய் ஒரு கிலோ தக்காளி, ஒரு கிலோ சின்ன வெங்காயம் கேட்பவரை பார்த்து சமூக ரொம்க பெரிய இடம் போல என்று நேரத்திற்கு ஏற்ப நேற்று இன்று நாளை படத்தின் காமெடியை ரீமிக்ஸ் செய்து ரகளை கிளப்புகின்றனர்.

 நெட் கார்டு போட்டு ஸ்டேட்ஸா?

நெட் கார்டு போட்டு ஸ்டேட்ஸா?

விற்குற விலைவாசில ஒரு கிலோ தக்காளி வாங்க முடியல. 200 ரூபாய்க்கு நெட்கார்டு போட்டு டுவிட்டர், ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போடுவோரை வெளுத்து வாங்கும் மனைவியின் மீமும் அள்ளு கிளப்புகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Memes about tomato price
Please Wait while comments are loading...