For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வங்கி வேணாம் என் லுங்கியே போதும் என் காச வைக்க!

வங்கி கணக்கில் குறைந்தபட்சம் 5000 ரூபாய் இருப்பு இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என எஸ்பிஐ அறிவித்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேஸ்புக்கில் ஏராளமான மீம்ஸ்கள் வலைய வருகின்றன.

Google Oneindia Tamil News

சென்னை: வங்கி கணக்கில் குறைந்தபட்சம் 5000 ரூபாய் இருப்பு இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என எஸ்பிஐ அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இணையதளத்தில் ஏராளமான மீம்ஸ்கள் வலைய வருகின்றன.

எஸ்பிஐ வங்கியில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் குறைந்த பட்சம் 5 ஆயிரம் ரூபாய் இருப்பு வைக்க வேண்டும் என எஸ்பிஐ வங்கி அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

எஸ்பியின் இந்த கண்டிஷனுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினரும் அக்கவுண்ட்டை க்ளோஸ் செய்து வருகின்றனர். எஸ்பிஐ வங்கியின் இந்த அறிவிப்பை வைத்து நெட்டிசன்கள் உருவாக்கியுள்ள சில ஜாலி மீம்ஸ்கள்..

மல்லையா தான் கரெக்ட்

நியாயமாக நடக்கும் மக்களை விட உங்களுக்கெல்லாம் விஜய் மல்லை போன்ற ஆட்கள் சரி என்கிறது இந்த மீம்ஸ்.

அக்கவுண்ட் க்ளோஸ்

அபராதம்ன்னு அறிவிச்சதும் போதும் திருச்சியில் பல இடங்களில் எஸ்பிஐ வங்கிகளில் இருந்த தங்களின் கணக்குகளை முடித்துக்கொண்டனர் என கூறுகிறது இந்த மீம்ஸ்.

அதுல எடுத்துக்கோங்க

மோடி தான் ஒவ்வொருத்தர் அக்கவுண்ட்லேயும் 15லட்சம் ரூபாய் போடுறேன் சொல்லிருக்காரே அதுல எடுத்துக்கோங்கன்னு சொல்றாறு வலைக்கலைஞர்.

நாங்க செட் ஆக மாட்டோம்

இந்த மீம்ஸ்ம் அதையேதான் சொல்லுது.. அவங்களுக்கு கிங்ஃபிஷர் ஓனர்தான் கரெக்ட்.. நாங்க செட் ஆக மாட்டோம்.

அக்கவுண்ட் க்ளோஸ் பண்ணிக்கிறோம்

5 ஆயிரம்லாம் வைக்க முடியாதுங்க வேணா அக்கவுண்ட்ட க்ளோஸ் பண்ணிக்கிறோம்.

ஆர்பிஐகிட்ட பேசட்டுமா?

இது சம்மந்தமா ஆர்பிஐகிட்ட நான் வேனும்னா பேசவா என எஸ்பி கேட்பதாக உள்ளது இந்த மீம்ஸ்

லுங்கியே போதும்

#வங்கி வேணாம் என் லுங்கியே போதும் என் காச வைக்க.

யாருக்கான அரசு?

3 தடவைக்கு மேல் டெபாசிட் பண்ணா #அபராதம்
5 தடவைக்கு மேல் ATMல பணம் எடுத்த #அபராதம்
யாருக்கான #அரசுனே தெரியல..
கண்டிப்பா #மக்களுக்கு_இல்லை

English summary
Many Memes roaming on internet about SBI anouncement of minimum balance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X