Memes: டேய் 2023! என்னா பொறப்புடா நீ.. பூரா பண்டிகையும் சண்டேல வருது.. நீயெல்லாம் ஒரு வருஷமாடா!
சென்னை: ஆங்கில புத்தாண்டு பிறக்க இன்னும் இரு தினங்களே இருக்கும் நிலையில் சமூகவலைதளங்களில் மீம்ஸ்கள் ரெக்கை கட்டி பறக்கின்றன. மீம்ஸ் கிரியேட்டர்கள் ஓவர் டைம் பார்த்து வருகிறார்கள். வயிறு குலுங்க வைக்கும் அளவுக்கு புது புது பீஸாக வருது...
2022 ஆம் ஆண்டு முடிந்து 2023 ஆம் ஆண்டு தொடங்க போகிறது. அண்மைக்காலமாக கொரோனா, புத்தாண்டு, மழை, புயல், வெயில், கிரிக்கெட்மேட்ச், பிக்பாஸ் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு சிரிக்கும் படியான மீம்களை உருவாக்குகிறார்கள்.
அதில் பெரும்பாலும் வடிவேலுவின் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி தயாரிக்கிறார்கள். அந்த வகையில் தற்போது ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்படுவதை அடுத்து மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரிசொல்யூஷன்
ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டின் போது உடம்பை குறைக்கணும், கோபத்தை குறைக்கணும் சிகரெட் குடிப்பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும். காலையில் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும் என தீர்மானங்களை எடுப்போம். ஆனால் தீர்மானம் எடுத்ததோடு சரி.. அதன் பின்னர் அதுகுறித்தெல்லாம் மறந்துவிட்டு அடுத்த வேலையை பார்க்க போய்விடுவோம். ஆண்டுதோறும் நாம் ரிசொல்யூஷன் எடுப்பதும் அதை கடைப்பிடிக்காமல் அடுத்த ஆண்டும் தொடர்வது என இருக்கும். அதைத்தான் இந்த மீம்ஸ் உணர்த்துகிறது. 2022 ஆம் ஆண்டு குடிக்கமே மாட்டேனு ஒருவர் சத்தியம் செய்கிறார். அது போல் 2023 இலும் குடிக்கவே மாட்டேன் என சத்தியம் செய்கிறார். இதற்குத்தான் இரண்டில் எது உண்மை என்பதை போல் அமைந்துள்ளது இந்த மீம்.

2023 வரட்டும்
இளைஞர்கள், மாணவர்களிடம் எதை கேட்டாலும் புதிய வருஷத்தின் பெயரை சொல்லி அந்த ஆண்டு வரட்டும் செய்வோம் என்பார்கள், உடம்பை குறைக்க ஜிம்முக்கு போறேனு சொன்னியே 2023 வரட்டும், வேலைக்கு போறேனு சொன்னியே 2023 வரட்டும், இப்படியே எல்லாவற்றுக்கு 2023 வரட்டும் என சொல்லும் அவர்களிடம் சும்மா கிண்டலுக்காக சரி நீ குளிச்சியானு கேட்டால் போதும் 2023 வரட்டும் என்பார்கள். இதைத்தான் இந்த மீம் விளக்குகிறது.

லீவு நாட்கள்
புத்தாண்டு வந்தாலே அரசு பணியாளர்கள், வங்கி பணியாளர்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் என காலண்டரை பார்ப்பது வழக்கம். அந்த வகையில் எத்தனை நாட்கள் லீவு வருகிறது. வார இறுதியுடன் சேர்ந்து ஏதாவது பண்டிகை வருகிறதா என்றெல்லாம் பார்ப்பதுண்டு. அந்த வகையில் இந்த ஆண்டு புத்தாண்டு, பொங்கல், விநாயகர் சதுர்த்தி, ரம்ஜான் என 5 நாட்கள் லீவும் ஞாயிற்றுக்கிழமை வருகிறது என்பதை காட்டுகிறது இந்த மீம்.

இதெல்லாம் ஒரு வருஷமா
எல்லா பண்டிகையுமே ஞாயிற்றுக்கிழமையில் வருவதால் மக்கள் அப்செட்டாக இருப்பதையும் இதெல்லாம் ஒரு வருஷமா என கேட்பதை போல் சித்தரிக்கிறது இந்த மீம். வடிவேலின் காமெடியில் இந்த மீம் பார்க்கும் போதே சிரிக்க வைக்கிறது.

ப்ரீ காலண்டர்
புத்தாண்டு என்றாலே முதலில் நாம் வாங்க வேண்டியது காலண்டரைத்தான். இப்போதெல்லாம் காலண்டரை யாரும் காசு கொடுத்து வாங்குவதில்லை. அதற்கு பதிலாக மளிகை சாமான் வாங்கும் கடைகள், துணிக்கடைகள், நகைக்கடைகள், பள்ளி, கல்லூரிகளில் அவர்களுடைய ஸ்தாபனத்தின் பெயர் விளம்பரப்படுத்தப்பட்டு இலவசமாக வழங்கப்படும். இதை வாங்க நீ நான் என போட்டி நடக்கும். பிதாமகன் படத்தில் வரும் காமெடியை வைத்து இந்த மீம் உருவாக்கப்பட்டுள்ளது.

கோபத்தில் மாணவர்கள்
2023 ஆம் ஆண்டு பண்டிகை காலம் எல்லாமே ஞாயிற்றுக்கிழமை வருவதால் மாணவர்கள் சற்றே கோபத்தில் இருக்கிறார்கள். அந்த வகையில் இதுகுறித்து இரு மாணவர்கள் பேசிக் கொள்ளும்படியாக ஒரு மீம் அமைந்துள்ளது. அதில் லீவு இல்லை என சொன்னதற்கு இன்னொரு மாணவன் சொல்கிறார், சீனாவுக்கு இருக்கும் கொரோனா இந்தியாவுக்கு வந்தா நமக்கு எல்லா நாளுமே பண்டிகை தான்டா என்கிறார். கொரோனா வைரஸ் இந்தியாவில் வந்த போது கிட்டதட்ட ஓராண்டுக்கு மேல் மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் படித்து வந்தனர். இதைத்தான் இந்த மாணவர்கள் குறிப்பிடுகிறார்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications