என்னது பக்கோடா விற்க போட்டி அதிகமா இருப்பதால் அதற்கும் நீட் தேர்வாமே ?! நெட்டிசன்ஸ் அதகளம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  பக்கோடா வேலைக்கும் இப்போ ஆப்பு...வீடியோ

  சென்னை: வேலை இல்லாமல் இருப்பதற்கு பக்கோடா விற்பது எவ்வளவோ மேல் என பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கூறியதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

  சாதாரணமகாவே பிரதமர் மோடியின் அரசை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் மரண கலாய் கலாய்த்து வருவார்கள். இந்நிலையில் பக்கோட விற்பது ஒன்றும் தவறில்லை என பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் கூறியுள்ளனர்.

  இதனை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர். அவற்றில் சில...

  பதவி குடுபீங்களா?

  வேலையே இல்லாமல் இருப்பதற்கு பக்கோடா விற்பது கூட ஒரு வேலைதான் - அமித்ஷா
  உங்க கட்சில, "டீ" விற்றவருக்கு பதவி கொடுத்தீங்க!!!!
  "பக்கோடா" விற்பவர்களுக்கு பதவி குடுபீங்களா???? என கேட்கிறார் இந்த நெட்டிசன்..

  நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா?

  #பக்கோடா தயரிக்க நவீன இயந்திரத்தை மேக் இன் திட்டத்தின் படி உருவாக்க நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா சார்..? என கேட்கிறார் இந்த வலைஞர்

  அனுமதிக்கு முந்துங்கள்

  இளங்கலை 'பக்கோடா'வியல்(bachelor of pakoda making) வகுப்புகளுக்கான சேர்க்கை ஆரம்பம்... அனுமதிக்கு முந்துங்கள்.....
  #அமித்ஷா_காலேஜ்_ஆஃப்_பக்கோடா_மேனேஜ்மெண்ட் என கலாய்க்கிறது இந்த நெட்டிசன்

  தொரத்தி அடிப்பாங்களே

  பிஜேபி ஆட்சி முடியறதுக்குள்ள பக்கோடா விக்குறவன்லாம் பிரதமர் ரேன்ஞ்சிக்கு பீல் பண்ணுவானுவளே...
  அதையே காரணமா காட்டி பொண்ணு கேட்டா நவயுக நவீன பெண்கள் தொரத்தி தொரத்தி அடிப்பாங்களே... என கூறுகிறார் இந்த நெட்டிசன்

  அதற்கும் நீட் தேர்வாமே ?!

  என்னது பக்கோடா விற்க போட்டி அதிகமா இருப்பதால் அதற்கும் நீட் தேர்வாமே ?! என கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்

  ஒரு கோர்ஸ் வப்பாய்ங்க

  அடுத்து இன்ஜினியரிங்ல பக்கோடா புரடக்‌ஷன் ஒரு கோர்ஸ் வச்சாலும் வப்பாய்ங்க.
  #வாழ்க_பக்கோடா என கூறுகிறார் இந்த வலைஞர்

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Netizens making fun of PM Modi and Amit shah's Pakkoda statement.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற